Just In
- 1 hr ago பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
- 3 hrs ago புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
- 5 hrs ago 2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
- 10 hrs ago இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
Don't Miss!
- News ஓட்டு கேட்க விடலை.. பூத்களை கைப்பற்றிட்டாங்க! மறுதேர்தலே தீர்வு.. வேலூரில் ஏசி சண்முகம் குமுறல்
- Movies இதனால்தான் விவாகரத்து.. அந்த நடிகையுடன் இருக்கும்போது உறுதியானது.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி
- Finance ரூ.10000 போதும் போலி எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர், அதிகப்படியான சேலரி ஸ்லிப்.. மோசடி வேலைகள் உச்சம்..!
- Technology வா தலைவா வா.. 512ஜிபி மெமரி.. டெலிபோட்டே லென்ஸ்.. மே.17 களமிறங்கும் Sony ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
- Sports RR vs MI : 12 ஆண்டுகள்.. ராஜஸ்தான் மண்ணில் அடிவாங்கும் மும்பை.. மாற்றிக்காட்டுவாரா ஹர்திக் பாண்டியா?
- Lifestyle குருவின் அருளால் இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா? இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க...
டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கின்றன என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? இது தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.
ஒரு வாகனத்தின் முக்கியமான பாகங்களில் டயர்களும் ஒன்று. உங்களின் பாதுகாப்பான பயணங்களுக்கு டயர்கள் அதிகம் உதவி செய்கின்றன. உங்கள் வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் ஒரே பாகம் டயர்கள்தான். சரி, அனைத்து டயர்களும் ஏன் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கின்றன? வேறு நிறமே இல்லையா? என என்றாவது நீங்கள் யோசித்துள்ளீர்களா?
நிச்சயமாக யோசித்திருப்பீர்கள். ஏனென்றால் உலகில் இயங்கும் அனைத்து வாகனங்களின் டயர்களும் ஏறக்குறைய கருப்பு நிறத்தில்தான் இருக்கும். கார், டூவீலர், லாரி மற்றும் பஸ் என எந்த வகையான வாகனமும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. அவ்வளவு ஏன்? சைக்கிள் டயரும் கூட கருப்பு வண்ணத்தில்தானே இருக்கிறது.
எனவே வாகனங்களின் டயர்கள் ஏன் கருப்பு வண்ணத்தில் இருக்கின்றன? என உங்களில் பலர் நிச்சயமாக யோசித்திருப்பீர்கள். இன்னும் சிலருக்கு அட ஆமா ஏன் டயர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன? என்ற சந்தேகம் தற்போது புதிதாக எழும்பியிருக்கும். உங்களின் இந்த சந்தேகத்திற்கு இந்த செய்தியில் விடை அளித்துள்ளோம்.
ஒரு விஷயம் தெரிந்தால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். கடந்த 1895ம் ஆண்டுதான் முதல் டயர் உருவாக்கப்பட்டது. இது வெள்ளை நிறத்தில்தான் இருந்தது. ஏனெனில் தூய்மையான ரப்பரால் இது உருவாக்கப்பட்டது. பால் போன்ற வெள்ளை நிறம்தான் (Milky White) ரப்பரின் இயற்கையான வண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே முதல் டயர் வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆனால் வெள்ளை நிற டயர்களால் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டன. வெள்ளை நிற டயர்கள் நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கவில்லை. அத்துடன் அவை திடமாகவும் இல்லை. இதுமட்டுமல்லாது வெப்பத்தை எதிர்க்கும் திறனும் அவற்றுக்கு மிகவும் குறைவாகவே இருந்தது.
போதாக்குறைக்கு 'க்ரிப்பிங்' திறனிலும் அவை சொதப்பின. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அவற்றின் வாழ்நாள் மிகவும் குறைவாகவே இருந்தது. அதாவது 100 கிலோ மீட்டர்கள் முதல் 200 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே அவற்றின் ஆயுட்காலம். ஆனால் இன்றைய நவீன கால டயர்கள் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாதவையாக உள்ளன.
நவீன கால டயர்கள் அனைத்தும் கடினமாக உள்ளன. நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கின்றன. மிகவும் திடமாகவும் இருக்கின்றன. அத்துடன் வெப்பத்தையும் நன்கு தாங்குகின்றன. ஒட்டுமொத்தத்தில் அவை வலுவாக உள்ளன. மழையாலும் அவை பாதிக்கப்படுவதில்லை. அத்துடன் சாலைகளில் நமக்கு நல்ல 'க்ரிப்பை' அவை வழங்குகின்றன.
கார்பன் பிளாக் (CARBON BLACK) என்ற வேதி சேர்மத்தை தூய்மையான ரப்பருடன் கலப்பதால்தான் நமக்கு இவ்வாறான அருமையான டயர்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாகதான் டயர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. அதாவது வல்கனைசேஷன் (Vulcanization) செயல்முறையின் போது, சல்பருடன் சேர்த்து கார்பன் பிளாக் தூய ரப்பருடன் கலக்கப்படும்.
இதன் மூலம் ரப்பரின் மூலக்கூறு பிணைப்பு நன்கு வலுவாகும். சரி, ரப்பருடன் கார்பன் பிளாக்கை சேர்ப்பது ஏன்? என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு எழலாம். வேறு எந்த மெட்டீரியலை காட்டிலும் கார்பன் பிளாக் மலிவானது. இதன் காரணமாகதான் கார்பன் பிளாக் சேர்க்கப்படுகிறது. அத்துடன் வேறு எந்த நிறத்தை காட்டிலும் கருப்பு வண்ணம்தான் டயர்களுக்கு அதிக நன்மையை பயக்கும்.
கருப்பு வண்ணம் காரணமாக டயர்கள் விரைவாக சேதமடைவதும் தவிர்க்கப்படுகிறது. இதுபோல் பல்வேறு நன்மைகள் கிடைப்பதன் காரணமாகதான் நாம் கருப்பு வண்ண டயர்களுக்கு மாறி விட்டோம். அதற்காக உலகில் வேறு எந்த வண்ணத்திலும் டயர்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது இதற்கு அர்த்தம் கிடையாது.
கருப்பு வண்ண டயர்கள்தான் உலகில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அவைதான் பிரபலமாகவும் உள்ளன. கலர்புல் டயர்களுடன் கூடிய கார்களும் கூட இருக்கலாம். ஆனால் தினசரி ஓட்டுவதற்கு உகந்ததாக அவை இருக்காது.