பஸ்களில் நேராக இருக்கும் கண்ணாடி கார்களில் மட்டும் சாய்வாக இருப்பது ஏன்?

இன்று வாகனங்களைப் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு ஏரோடைனமிக்ஸ் குறித்து நன்கு தெரிந்திருக்கும். வாகனம் செல்லும் போது வரும் காற்று காரில் மோதுவதால் வாகனத்தின் திறன் குறையும். இதைச் சமாளிக்க வாகனத்தின் வடிவமைப்பு அந்த காற்றை காரில் பெரியளவில் இம்பேக்டை ஏற்படுத்தாமல் விலகி செல்ல வைக்கும்படி டிசைன் செய்வார்கள். இதில் முக்கியமாக காரின் விண்ட் ஷீல்டு, கார்களில் நாம் பார்த்திருப்போம். விண்ட் ஷீல்டு சாய்வாக வைக்கப்பட்டிருக்கும். அதற்கு முக்கியமான காரணம் இது தான்.

ஆனால் பஸ்கள், டிரக்குகளில் விண்ட் ஷீல்டு சாய்வாக இருக்காது மாறாக நேராகக் காற்றை எதிர்த்து இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். கார்களில் ஏரோடைனமிக்ஸ் காரணமாகச் சாய்வாக வைக்கப்பட்டிருக்கும். கண்ணாடி, பஸ், டிரக் போன்ற வாகனங்களில் மட்டும் நேராக வழங்கப்பட்டுள்ளது? இதைக் கவனித்த பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். இதற்கான தெளிவான விளக்கத்தைத் தான் இங்கே காணப்போகிறோம்.

பஸ்களில் நேராக இருக்கும் கண்ணாடி கார்களில் மட்டும் சாய்வாக இருப்பது ஏன்?

சாய்வான விண்ட் ஷீல்டு

ஒரு வாகனத்தில் சாய்வான விண்டு ஷீல்டு வைப்பதற்கு நாம் முன்னரே சொன்ன காரணம் தான் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கிடைக்கும், ஏர் டிராக் எனப்படும் காரில் வேகமாகச் செல்லும் போது எதிர் வரும் காற்று இந்த விண்ட் ஷீல்டில் பட்டு இது சாய்வாக இருப்பதால் எளிதாக காருக்கு மேல் வழியாகச் சென்றுவிடும். இதனால் காருக்கு அதிகமாக அழுத்தம் தேவைப்படாது. இது மட்டுமல்ல இப்படிச் சாய்வாக விண்ட் ஷீல்டை வடிவமைப்பதால் வேறு ஒரு பலனும் இருக்கும்.

ஆஃப்ரோடு அல்லது கரடு, முரடான சாலைகளில் வேகம் பயணிக்கும் ஏதாவது கல் மேலே பறந்து வந்து காரின் கண்ணாடியைத் தாக்கினால் இப்படியாகச் சாய்வாக இருக்கும் போது காரின் கண்ணாடி சேதமடையும் வாய்ப்பு குறையும். ஆனால் வாகனத்தின் கண்ணாடி செங்குத்தாக அமைக்கப்பட்டிருந்தால் அதிகமாகச் சேதமாகும். முன்னாடி மாதிரி காரின் கண்ணாடிகள் எல்லாம் உடைத்தால் சல்லி சல்லியாக நெருங்காது.

தற்போது உள்ள வாகனங்களின் விண்ட் ஷீல்டு கண்ணாடிகள் இரண்டு டெம்பர்டு கண்ணாடிகளை பாலிவினைல் கோரை வைத்து இணைத்து உடைத்தாலும் சிதறாத படி வடிவமைத்துள்ளனர். கல் பட்டு உடைந்தாலும் கிராக் விழுந்து அப்படியே தான் இருக்குமே தவிர உடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி வடிவமைத்துள்ளனர். சாய்வாக இருப்பதால் காரின் கண்ணாடி உடைவது மேலும் பாதுகாக்கப்படும். இதற்காகத் தான் காரின் கண்ணாடிகளைச் சாய்வாகக் கொடுத்துள்ளனர்.

செங்குத்தான விண்ட் ஷீல்டு

இப்படிப் பல நன்மை இருப்பது தெரிந்தும் பஸ், டிரக் போன்ற வாகனங்களில் ஏன் விண்ட் ஷீல்டை சாய்வாக இல்லாமல் செங்குத்தாக வழங்கியுள்ளனர். என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. காரின் உயரம் குறையும் அதனால் அதை விட உயரம் குறைந்த வாகனம் பெரியளவில் இருக்காது. இதனால் காரின் பம்பர் பகுதி வரை டிரைவருக்கு தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கணிப்பிலேயே வாகனத்தைப் பாதுகாப்பாக ஓட்டி விட முடியும்.

ஆனால் பஸ், மற்றும் டிரக்குகளில் அப்படி கிடையாது. இந்த வாகனத்தின் உயரம் அதிகம் இதை விடக் குறைவான உயரத்தில் சாலையில் பல வாகனங்கள் பயணிக்கும் . இதனால் விபத்து ஏற்படாமல் பயணிக்க டிரைவருக்கு முழு கிளியரண்ஸ் கதவை, இதனால் சாய்வாக வைத்திருந்தால் அவ்வளவாகத் தெரியாது. மாறாக செங்குத்தாக விண்ட் ஷீல்டு இருந்தால் தான் வியூ சிறப்பாக இருக்கும். பஸ், டிரக் போன்ற வாகனங்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய இப்படியாக வியூ மிகவும் முக்கியம். இதனால் தான் பஸ், டிரக்குகளில் விண்ட் ஷீல்டு செங்குத்தாக இருக்கிறது.

அதே போல கல் வந்து கண்ணாடியில் மோதுவது பஸ் டிரக் போன்ற வாகனங்களில் பெரிய அளவில் சாத்தியம் இல்லை. இதன் விண்ட் ஷீல்டு அதிகமான உயரத்தில் இருப்பதால் கற்கள் அவ்வளவு தூரம் பறந்து வராது. இப்படியான பல காரணங்களை மனதில் வைத்தே பஸ் மற்றும் டிரக்களுக்கு விண்ட் ஷீல்டை செங்குத்தாக வடிவமைக்கின்றனர். காரோ, பஸ்ஸோ அதை வடிவமைக்கும் போதே அதன் பாதுகாப்பைப் பற்றி யோசிக்கின்றனர்.

ஆனால் கார், பஸ் இரண்டும் வேறு வேறு இயந்திரங்கள் இரண்டிற்கும் ஒரே விதமான பாதுகாப்பு என்பது இருக்காது. காருக்கு பாதுகாப்பு என்ற நாம் நினைக்கும் ஒரு விஷயம் பஸ் வடிவமைப்பில் தேவைப்படாது. இப்படியாகப் பல விஷயங்களை வாகன வடிவமைப்பாளர்கள் யோசித்தே செய்கின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Why windshield are tilted in cars but not in buses or trucks
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X