டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

பெண் ஒருவருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க அதிகாரிகள் மறுத்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வரும் காலம் இது. டூவீலரை ஓட்டுவதும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சாலைகளில் பெண்கள் சர்வ சாதாரணமாக டூவீலர்களில் பயணம் செய்வதை தற்போது காண முடிகிறது. பெண்கள் டூவீலர்களை ஓட்டுவது வெறும் பொழுதுபோக்கிற்காக அல்ல.

டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

பயணங்களை மேற்கொள்வதற்கு அவர்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இதன் மூலமாக தகர்க்கப்படுகிறது. டூவீலர்கள் ஓட்ட தெரியாததாலும், போக்குவரத்து வசதிகள் போதிய அளவில் இல்லாத காரணத்தாலும் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் பெண்கள் ஏராளம். அப்படி அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால், குடும்ப உறுப்பினர்கள் யாராவது அழைத்து சென்று வர வேண்டும்.

டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

ஆனால் டூவீலர்களை ஓட்ட தெரிந்தால், அதற்கான அவசியம் இருக்காது. சாதாரண டூவீலர்கள் மட்டுமல்லாது, ராயல் என்பீல்டு போன்ற அதிக எடை கொண்ட பைக்குகளை கூட தற்போது பெண்கள் சர்வ சாதாரணமாக ஓட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆண்களால் மட்டும்தான் பெரிய பைக்குகளை ஓட்ட முடியும் என்ற பாலின பாகுபாடும் இதன் மூலமாக தகர்க்கப்படுகிறது.

டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

வாகனங்களை ஓட்டுவது உள்பட பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் முயன்று வரும் நிலையில், பாகிஸ்தான் இன்னமும் கற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமம் வேண்டும் என அரசு அலுவலகத்தை அணுகிய பெண் ஒருவர் சமீபத்தில் 'வெளியே போ' என விரட்டப்பட்டுள்ளார்.

டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

அவர் பெண் என்பதுதான் இதற்கு காரணம். பொதுவாக பெண்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வழங்குவதில்லை என அந்த பெண்ணிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஷிரின் பெரோஷ்பூர்வல்லா என்ற பெண்ணுக்குதான் இந்த மோசமான அனுபவம் கிடைத்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

எனினும் தன்னிடம் காட்டப்பட்ட பாலின பாகுபாட்டை டிவிட்டரில் பகிர்ந்ததன் மூலம் அவர் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார். டிவிட்டரில் தனது பதிவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை டேக் செய்துள்ள அவர், ''பாகிஸ்தானில் ஒரு பெண் பைக் ஓட்ட முடியாதா? பெண்களுக்கு பைக் ஓட்டுவதற்கான உரிமத்தை வழங்குவதில்லை என உரிமங்களை வழங்கும் அலுவலகம் தரப்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

ஏன்? இது என்ன வகையான விதிமுறை? தயவு செய்து பதில் அளியுங்கள்'' என கூறியுள்ளார். அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால், ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகத்தை விட்டு ஷிரின் பெரோஷ்பூர்வல்லா வேதனையுடன் வெளியேறியுள்ளார். எனினும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் வேறு ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் தனக்கு தெரிந்த ஒருவரை தொடர்பு கொண்டு இதுபற்றி அவர் விசாரித்துள்ளார்.

டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

அப்போது பொதுவாக பெண்களுக்கு பைக் ஓட்டுவதற்கான உரிமத்தை வழங்குவதில்லை என்ற விஷயம் ஷிரின் பெரோஷ்பூர்வல்லாவிற்கு தெரியவந்துள்ளது. அத்துடன் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, பைக் ஓட்டுவதற்கான உரிமம் பெண்களுக்கு கிடைக்கும் என்ற தகவலையும் அவர் தெரிந்து கொண்டார்.

டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு பாகிஸ்தானில் விவாதத்தை உண்டாக்கியது. எனவே அவர் டிவிட்டரில் பதிவிட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகத்தில் இருந்து அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அத்துடன் அவருக்கு தற்போது இறுதியாக ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''மேற்கொண்டு எந்தவிதமான பிரச்னைகளும் இன்றி ஓட்டுனர் உரிமத்தை பெற்று விட்டேன். இந்த பிரச்னையை தீர்க்க உதவிய அனைவருக்கும் நன்றி'' என கூறியுள்ளார். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக பெண்கள் போராட வேண்டிய நிலை பாகிஸ்தானில் காணப்படுவது வேதனையான ஒரு விஷயம்தான்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Woman Denied Two-wheeler License For Being A ‘Larki’ - Details. Read in Tamil
Story first published: Saturday, September 19, 2020, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X