டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

அமெரிக்காவில், டெஸ்லா எலெக்ட்ரிக் காரில் பெண் ஒருவர் பெட்ரோல் நிரப்ப முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

அமெரிக்காவில், டெஸ்லா எலெக்ட்ரிக் காரில் பெண் ஒருவர் பெட்ரோல் நிரப்ப முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

பெட்ரோல் காரில் டீசல் நிரப்புவதும், டீசல் காரில் பெட்ரோல் நிரப்பிய சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனால், ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஊடகங்களில் செய்திகளை படித்திருக்க வாய்ப்புண்டு.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

இந்த சூழலில், டெஸ்லா எலெக்ட்ரிக் காரில் பெண் ஒருவர் பெட்ரோல் நிரப்புவதற்கு கடும் பிரத்யேனம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அது எலெக்ட்ரிக் கார் என்று தெரியாமல் ஒரு பெண் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

அமெரிக்காவின் பெட்ரோல் நிலையம் ஒன்றில், பெண் ஒருவர் எலெக்ட்ரிக் காரின் சார்ஜர் இருக்கும் மூடியை திறந்து பெட்ரோல் நிரப்புவதற்கு முயற்சி செய்கிறார்.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

ஆனால், அதில் பெட்ரோல் நிரப்பும் குழாய் விடுவதற்கான வாய்ப்பில்லாமல் இருப்பதை கண்டு குழம்பிய நிலையில் மீண்டும் முயற்சி செய்கிறார். இதனை பெட்ரோல் பங்கிற்கு மற்றொரு காரில் வந்தவர்கள் படம் பிடித்து உள்ளனர்.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

அமெரிக்காவில் பொதுவாக பெட்ரோல் நிலையங்களில் ஊழியர்கள் இருக்கமாட்டார்கள். அதற்குரிய கார்டை அங்குள்ள எந்திரத்தில் தேய்த்துவிட்டு தேவையான அளவு பெட்ரோலை கார் ஓட்டுனரே அல்லது காரில் வருபவரே இறங்கி நிரப்பிக் கொள்ளலாம்.

இந்தநிலையில், அந்த பெண் எலெக்ட்ரிக் காரை கொண்டு இந்த முயற்சியில் இறங்கியதுதான் உலக அளவில் சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. அந்த பெண் தனது நெருங்கிய ஒருவரின் காரை எடுத்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், அது எலெக்ட்ரிக் கார் என்று தெரியாமல் இதுபோன்று செய்துள்ளார்.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

மேலும், பெட்ரோல் நிரப்ப முடியாமல் தவித்த அந்த பெண், அந்த காரில் மூடி எங்குள்ளது என்பதை மொபைல்போனில் இன்டர்நெட்டை ஆன்செய்து தேடுவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

இதனை மற்றொரு காரில் இருந்து வீடியோ எடுத்தவர்கள் பார்த்துவிட்டு சிரிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

அதன்பின்னர், பின்னால் வந்த காரில் இருந்தவர் அந்த பெண்ணிடம் சென்று அது எலெக்ட்ரிக் கார் என்று கூறிய பின்னரே, அவர் புரிந்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி காரில் பெட்ரோலுக்கு பதில் டீசலை நிரப்பிய சம்பவம், இஸ்ரேலில் சுற்றுப் பயணம் செய்தபோது அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் காரில் டீசலுக்கு பதிலாக பெட்ரோல் நிரப்பிய சம்பவங்கள் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தின.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

அதேபோன்று, எலெக்ட்ரிக் காரில் பெட்ரோல் நிரப்ப முயன்ற சம்பவமும் வைரலாகி இருக்கிறது. சரி, டீசல் காரில் பெட்ரோலை தப்பி தவறி நிரப்பிவிட்டால் என்னவாகும், அதற்கான தீர்வு என்ன என்பதையும் தொடர்ந்தது பார்த்துவிடலாம்.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

எரிபொருள் மாற்றி போட்டுவிட்டால், காரை ஓட்டிச் செல்ல வேண்டாம். விஷயம், தெரிந்துவிட்டால் கார் எஞ்சினை கண்டிப்பாக ஸ்டார்ட் செய்யக்கூடாது. அப்படி, தெரியாமல் காரை ஸ்டார்ட் செய்து செல்லும்போது எஞ்சின் பம்பில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

ஏனெனில், பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் பம்புக்கு அதிக உயவு தேவைப்படும். காரில் இருக்கும் டீசலுடன் பெட்ரோல் சேரும்போது அது பசைத் தன்மை அதிகரித்துவிடும். இரண்டும் சேர்ந்த கலவை எஞ்சினுக்குள் படியத் துவங்கினால் பிரச்னை ஏற்படும். பம்புகள், எஞ்சின் பாகங்களுக்கு இடையில் பொருத்தப்பட்டிருக்கும் சீல் பட்டைககள் பாதித்துவிடும்.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

ஒருவேளை, தெரியமாலேயே காரை ஓட்டிச் சென்று பிரச்னை ஏற்படும். எனவே, பிரச்னை ஏற்பட்டுவிட்டால், அருகிலுள்ள சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று முழுவதுமாக எரிபொருளை வெளியேற்றிவிட வேண்டும்.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

மேலும், பெட்ரோலை முழுவதுமாக வெளியேற்றிய பின் காரின் ஃபில்டர், இன்ஜெக்டர்கள், பம்புகள், சீல் பட்டைகளை மாற்ற வேண்டியது அவசியம். இதற்கு அதிக செலவாகலாம்.

டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

எனவே, காருக்கு எரிபொருள் நிரப்பும்போது பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் பெட்ரோலா, டீசலா என தெரிவித்து விடுவது அவசியம். மேலும், டேங்க் அருகில் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி வைப்பதும் நலம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Woman tries to fill up an electric Tesla with petrol.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X