1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

1 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட காரை திருட போய் பெண் ஒருவர் காமெடி செய்துள்ளார். அவர் எப்படி சிக்கினார்? என தெரிந்தால் நீங்கள் வயிறு வலிக்க சிரிப்பது உறுதி.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

சொந்தமாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் கார் கொள்ளையர்களிடம் இருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உண்மையில் கொள்ளையர்கள் தற்போது மிகவும் 'ஸ்மார்ட்' ஆக மாறி விட்டனர். புதிய கார்களை கொள்ளையடிக்க அவர்கள் புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

எனவே உரிமையாளர்கள் கூடுதல் கவனத்துடன் இல்லாவிட்டால் கொள்ளையர்கள் காரை எளிதாக 'ஸ்வாகா' செய்து விடுவார்கள். கொள்ளையர்களின் அபாயத்தில் இருந்து காரை காப்பாற்ற தேவையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கார் உற்பத்தி நிறுவனங்களும் வழங்கி கொண்டுதான் உள்ளன. ஆனால் கார் நிறுவனங்களை விட கொள்ளையர்கள் சில சமயங்களில் ஒரு படி மேலே யோசிக்கின்றனர்.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

செய்வது தவறுதான் என்றாலும், காரை மிக எளிதாக அவர்கள் 'அபேஸ்' செய்து விடுகின்றனர். கொள்ளையை கூட அவ்வளவு நேர்த்தியாக செய்து வருகின்றனர். ஆனால் தொழிலில் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் கூட ஒரு சில நிறுவனங்களின் கார்கள் மீது கொள்ளையர்கள் கை வைக்க தயங்குவார்கள். அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் டெஸ்லா.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

டெஸ்லா நிறுவனத்தை பற்றி அறிமுகமே தேவையில்லை. எலெக்ட்ரிக் கார்கள் உலகில் தனி சாம்ராஜ்யமே நடத்தி கொண்டிருக்கும் ஒரு நிறுவனம்தான் டெஸ்லா. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் அதிநவீன எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை உலகம் முழுவதும் கொடி கட்டி பறந்து வருகிறது. டெஸ்லா கார்களில் ஏராளமான அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

பாதுகாப்பு வசதிகளாகட்டும் அல்லது சொகுசு வசதிகளாகட்டும் டெஸ்லாவிற்கு நிகர் டெஸ்லாதான். டெஸ்லா கார்களை கொள்ளையடிப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. டெஸ்லா கார்களின் மீது கை வைப்பது என்பது தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வதற்கு சமமானது. அப்படிப்பட்ட டெஸ்லா காரை திருட முயன்று பெண் ஒருவர் தோல்வியடைந்திருக்கிறார்.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

கேத்தி செயின் (Kathy Sain) என்ற பெண்தான் இந்த விபரீத முயற்சியை செய்து சிக்கி கொண்டுள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பேசன் என்ற நகரில், ஷாப்பிங் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள பார்க்கிங் பகுதியில் டெஸ்லா மாடல் எஸ் (Tesla Model S) எலெக்ட்ரிக் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

இந்திய மதிப்பில் டெஸ்லா மாடல் எஸ் காரின் விலை 1 கோடி ரூபாய்க்கும் மேல் வரும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 335 மைல்களுக்கும் மேல் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சூழலில் ஷாப்பிங் சென்டரின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா மாடல் எஸ் காரை கேத்தி செயின் பார்த்துள்ளார்.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

உடனடியாக அதனை திருடிக்கொண்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். கிழக்கு ஹைவே 260-ல் அவர் காரை திருடி கொண்டு பயணித்தார். இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக அவர்கள் காரை சேஸ் செய்ய தொடங்கினர். அதற்கு முன்னதாக கேத்தி செயின் திருடி சென்ற டெஸ்லா மாடல் எஸ் காரை தொழில்நுட்ப உதவியுடன் அவர்கள் நிறுத்த முயன்றனர்.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

ஆம், இந்த கார் திருடி செல்லப்பட்டால், அதனை நிறுத்த முடியும். அத்தகைய தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக கேத்தி செயின் காரை திருடி சென்ற சமயத்தில் அந்த தொழில்நுட்ப வசதி வேலை செய்யவில்லை. இதனை கேத்தி செயினுக்கு கிடைத்த அதிர்ஷடம் என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் போலீசார் காரை துரத்தி சென்று கொண்டே இருந்தனர்.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

ஆனால் கேத்தி செயினுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆம், அவர் திருடி சென்ற கார் சார்ஜ் தீர்ந்து திடீரென நின்று விட்டது. அந்த நேரத்தில் போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர். இதனால் கேத்தி செயின் கையும், களவுமாக சிக்கி கொண்டார். ஆனால் அதன்பின் அவர் செய்தது அதை விட மிகப்பெரிய காமெடி.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

காரை விட்டு வெளியே வருமாறு கேத்தி செயினிடம் போலீசார் கூறியுள்ளனர். ஆனால் காரை விட்டு இறங்க மாட்டேன் என கேத்தி செயின் அடம் பிடித்துள்ளார். நீண்ட நேரமாக காருக்கு உள்ளேயே இருந்துள்ளார். எனவே வேறு வழியில்லாமல் விண்டோவை உடைத்துதான் போலீசார் அவரை வெளியே வரவழைத்தனர். இதன்பின் கேத்தி செயின் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

ஆனால் ஒரு முக்கியமான கேள்விக்கு இன்னும் விடை காணப்படவில்லை. இந்த காரை கேத்தி செயினால் எப்படி இயக்க முடிந்தது? அவர் அதனை எப்படி திருடி சென்றார்? என்ற தகவல்கள் தற்போதைக்கு வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெஸ்லா காரை திருடிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

1 கோடி ரூபாய் காரை திருட போய் காமெடி... பெண் சிக்கியது எப்படி என தெரிந்தால் வயிறு வலிக்க சிரிப்பீங்க

இதனிடையே சீனா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது டெஸ்லா கார்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், இந்தியாவில் இன்னும் களமிறங்கவில்லை. டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகையை இங்குள்ள வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கும் அவர்களின் எதிர்பார்ப்பு அனேகமாக அடுத்த ஆண்டு நிறைவேறலாம். ஆம், டெஸ்லா நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Woman Trying To Steal Tesla Model S Arrested. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X