ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...

ஆஸ்திரேலியாவில் உலகின் முதல் பறக்கும் மின்சார கார் டேக்-ஆஃப் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...

உலகின் முதல் பறக்கும் மின்சார கார் டேக்-ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மிக விரைவில் இப்-பறக்கும் மின்சார கார் பயன்பாட்டிற்கு வரும்நிலையில் இந்த சோதனையோட்டம் ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்டிருக்கின்றது.

ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...

நடப்பாண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டிற்குள் ஆலாடா ஏர்ஸ்பீடர் எம்கே3 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பறக்கும் மின்சார கார் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நான்கு மீட்டர் நீளமுள்ள மல்டி-காப்டர் ரக மின்சார பறக்கும் காராகும்.

ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...

ஆஸ்திரேலியா விமானத்துறையின் ஒப்புதலுடன் தெற்கு ஆஸ்திரேலியாவின் பாலை வன பகுதியில் வைத்து இந்த பறக்கும் மின்சார கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. அப்போது வெற்றிகரமாக பறக்கும் கார் டேக்-ஆஃப் ஆகி மீண்டும் தரையிறங்கியிருக்கின்றது. இந்த சோதனையோட்ட வெற்றியை அடுத்து விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...

130 கிலோ எடையில் மின்சார பறக்கும் கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதிக வேகம், கூடுதல் ரேஞ்ஜை வழங்கும் பொருட்டில் இலகு ரக பறக்கும் காராக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக வேகத்தில் பறக்கும் வேண்டும் என்பதற்காக மின்சார பறக்கும் வாகனத்தை எஃப்1 ஸ்போர்ட்ஸ் ரக கார் உருவத்தில் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...

இது மணிக்கு 150 கிமீ முதல் 250 கிமீ வரையிலான வேகத்தில் பறக்கும். விமானத்தின் காக்பிட் பகுதியுடன் பறக்கும் கார் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆய்வு பணிகளில் இவ்வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் டெலிரோபோக்கள் வாயிலாக பறக்கும் கார் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், பயன்பாட்டிற்கு வரும்போது மனிதர்கள் அமர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கும்.

ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...

இந்த பறக்கும் மின்சார கார் குறித்து நிறுவனம் கூறியாதவது, "நாங்கள் காக்பிட்டில் ஒரு ரோபோவை நிலை நிறுத்தியுள்ளோம். அது தரையில் ஒரு பைலட்டுடன் இணைக்கப்பட்டது. பைலட் தலையைத் திருப்பும்போது, ​​ரோபோவும் தலையைத் திருப்பும். இவ்வாறு பைலட்டின் அனைத்து செயல்களையும் காப்பி செய்து அது செயல்படும் திறனில் அது உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...

இவ்வாறே பறக்கும் கார் ஆஸ்திரேலியாவில் சோதனையோட்டத்தை மேற்கொண்டிருக்கின்றது. 15 நிமிடம் ஆயுள்கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி மூலம் பறக்கும் கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. பயன்பாட்டிற்கு வரும்போது இது ஓலா, உபேர் போன்ற ரைடு-ஷேரிங் நிறுவனங்களின்கீழ் வரும் என நிறுவனம் கூறியிருக்கின்றது.

ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...

ஆகையால், மிக விரைவில் இவ்வுலகில் பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த பறக்கும் காரின் சோதனையோட்டம் அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
World's First Lithium-Polymer Battery Powered Flying e-Car Takes Off In Australia. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X