நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் எது தெரியுமா..? தெரிஞ்சுக்கோங்க இல்லனா வருத்தப்படுவீங்க...

நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் ஒன்று கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் எது தெரியுமா..? தெரிஞ்சுக்கோங்க இல்லனா வருத்தப்படுவீங்க...

நாட்டிலேயே மிக நீளமான ரயில் நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை ரயில்வேத்துறை அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக தெரிவித்துள்ளது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் ரயில் நிலையங்களிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் ரயில் நிலையம் இருக்கின்றது.

நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் எது தெரியுமா..? தெரிஞ்சுக்கோங்க இல்லனா வருத்தப்படுவீங்க...

இதனையே மிஞ்சுகின்ற அளவில் புதிய ரயில் நிலையம் ஒன்று தற்போது கர்நாடகா மாநிலத்தில் உருவாகி வருகின்றது. அண்மையில் ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி எனும் பெயர் மாற்றம் பெற்ற ஹூப்ளி ரயில் நிலையமே நாட்டின் மிக நீளமான ரயில் நிலையமாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.

நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் எது தெரியுமா..? தெரிஞ்சுக்கோங்க இல்லனா வருத்தப்படுவீங்க...

தற்போது ரயில்வேத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ரயில் 1,500 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் கட்டமைக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. தற்சமயம், நாட்டின் மிக நீளமான ரயில் நிலையமாக இருக்கும் கோரக்பூர் ரயில் நிலையத்தின் ஒட்டுமொத்த நீளம் 1366 மீ ஆகும். இதனை மிஞ்சும் வகையிலேயே ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் எது தெரியுமா..? தெரிஞ்சுக்கோங்க இல்லனா வருத்தப்படுவீங்க...

தற்போது ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்த புகைப்படங்களையும் ரயிலேவேத்துறை அமைச்சகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த ரயில் 'ஹூப்ளி' என்றே அழைக்கப்ட்டு வந்தது. இதனை முந்தைய கர்நாடகா அரசு 'ஹூப்பள்ளி' என்று பெயர் மாற்றம் செய்தது.

நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் எது தெரியுமா..? தெரிஞ்சுக்கோங்க இல்லனா வருத்தப்படுவீங்க...

2015ம் ஆண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இதன் பெயர் மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த பெயரை மறைந்த சிவ பக்தன் ஸ்ரீ சித்தரூதா சுவாமி அவர்களின் நினைவாக அவரின் பெயரையே ரயில் நிலையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. வெகுநாட்களாக கர்நாடக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது.

நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் எது தெரியுமா..? தெரிஞ்சுக்கோங்க இல்லனா வருத்தப்படுவீங்க...

இந்த நிலையில் கர்நாடகா அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு இந்த மாதத்தின் (நவம்பர்) மத்தியில்தான் ஒப்புதல் வழங்கியது. இந்த பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து நாட்டின் வரலாற்றில் இடம்பிடிக்கின்ற வகையில் மிக நீளமான ரயில் நிலையமாக இது உருமாறிக் கொண்டிருக்கின்றது. அதேசமயம், மத்திய அரசு, இந்த ரயில் நிலையம், உலகிலேயே மிக நீளமான ரயில் நிலையம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
World's Longest Platform Is Being Constructed In Karnataka Here Is Full Details. Read In Tamil.
Story first published: Saturday, November 21, 2020, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X