ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

ஹியாகார் என்ற யுகே-வை சேர்ந்த கார்-பகிர்வு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, வாகன ஓட்டுனர்களுக்கு சவாலாக, உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட 36 நகரங்களை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நமது தேசிய தலைநகர் டெல்லி உள்ளிட்டவை அடங்கும் இந்த லிஸ்ட்டை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

வாகன ஓட்டுனர்களுக்கு மிகவும் மன அழுத்தத்தை வழங்ககூடிய நகரங்களை உள்ளடக்கும் இந்த லிஸ்ட்டில் தலைநகர் டெல்லி மட்டுமில்லாமல் மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களும் உள்ளன. ஏகப்பட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

போக்குவரத்து நெரிசலின் தீவிரம், தனிநபர் கார்களின் எண்ணிக்கை, மக்களின் போக்குவரத்து தேர்வுகள், நகரத்தில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, சாலைகளின் தரம், நகர அடர்த்தி மற்றும் வருடத்திற்கு சராசரியாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை என்பவை இந்த காரணிகளில் அடங்குகின்றன.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

உலகளவில் உள்ள பெரு நகரங்கள் ஒவ்வொன்றிற்கும் இந்த காரணிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. மொத்த மதிப்பெண்கள் 10 ஆகும். இதில் மும்பை 10ற்கு 7.4 மதிப்பெண்களையும், டெல்லி 5.9 மதிப்பெண்களையும், பெங்களூர் 4.7 மதிப்பெண்களையும் பெற்றுள்ளன.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

ஹியாகார் வெளியிட்டுள்ள இந்த லிஸ்ட்டில் தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த அமெரிக்க நகரத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் 2.1 ஆகும். அதாவது லிமாவில் தான் வாகன ஓட்டுனர்களுக்கு இந்த உலகிலேயே குறைந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

மேற்கூறப்பட்ட காரணிகளில் அனைத்திலும் டிக் செய்யப்பட்டுள்ள மும்பை இந்த மதிப்பெண்களுக்கு ஏற்ற நகரமே ஆகும். ஏனெனில் மும்பையின் முக்கிய பகுதிகளான பல்கார்க் மற்றும் தானேவில் மழை பெய்தால் சாலையில் முற்றிலுமாக நகரவே முடியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

இப்போது கூட கடந்த 24 மணிநேரமாக மும்பையில் சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. மும்பையில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் பல பேருந்து வழித்தடங்கள் திசை திருப்பப்பட்டுள்ளன. மும்பையின் போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற மும்பை - டெல்லி விரைவு சாலை இன்னமும் கட்டமைப்பு பணிகளில் உள்ளது.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

2019 மார்ச் 9ஆம் தேதியில் இருந்து நடைபெற்றுவரும் இந்த சாலை அமைப்பு பணிகள் 2023 ஜனவரியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லிக்கும் மும்பைக்கும் இடையேயான தூரத்தை சுமார் 280கிமீ வரையில் குறைக்கும் இந்த புதிய விரைவு சாலையினை சமீபத்தில் தான் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட்டார்.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

பார்வையிட்டது மட்டுமின்றி, கியா கார்னிவல் எம்பிவி காரில் மணிக்கு 170கிமீ வேகத்தில் பயணித்து சோதனை செய்து பார்த்தது அந்த சமயத்தில் இணையத்தில் வைரலானது. இந்த புதிய விரைவு சாலை மஹாராஷ்டிரா மற்றும் தலைநகர் டெல்லிக்கு இடையே ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை இணைக்கிறது.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

சிறந்த கட்டமைப்பு மற்றும் தரமான சாலைகளில் பயணம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு மக்கள் பணம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த விரைவு சாலையின் மூலம் ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது ரூ.1,000 கோடியில் இருந்து ரூ.1,500 கோடி வரையில் அரசாங்கத்திற்கு டோல்கேட்கள் மூலமாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

பயண தூரம் 280கிமீ வரையில் குறைவதால், பயண நேரமும் வெகுவாக குறையும். இதுகுறித்து அமைச்சர் அளித்த தகவலின்படி, சண்டிகரில் இருந்து டெல்லியையும், டெல்லியில் இருந்து டெக்ராடூனையும் வெறும் 2 மணிநேரத்தில் அடைந்துவிடலாம். இந்த விரைவு சாலை கட்டுமான பணிகள் சுமார் ரூ.98,000 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

கிட்டத்தட்ட 1,200கிமீ தூரத்திற்கு இன்னும் கட்டுமான பணிகள் உள்ளன. மொத்தம் 8 பாதைகளை கொண்டதாக இந்த விரைவுசாலை உருவாக்கப்பட்டு வருகிறது. இவை ஒவ்வொன்றும் சராசரியாக 21 மீட்டர்கள் அகலம் கொண்டவை என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!

இதற்காகவே முன்னெச்சரிக்கையாக, 8 பாதைகளில் இருந்து 12 பாதைகள் வரையில் விரிவுப்படுத்தி கொள்ளும் வகையில் இந்த விரைவு சாலை உருவாக்கப்படுகிறது. தற்போதைக்கு டெல்லி- மீரட் இடையேயான பகுதி மட்டும் பொது பயன்பாட்டிற்கு பகுதி வாரியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் முழுவதுமாக அடுத்த அக்டோபர் மாதத்தில் திறக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
World's most stressful city to drive, India's capital Delhi in the list.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X