வரலாற்றை திருத்தி எழுத 22 லட்சம் செலவிட்ட தொழிலதிபர்... மக்களின் இந்த எண்ணம் சுக்குநூறாக நொறுங்கியது

வரலாற்றை திருத்தி எழுத தொழிலதிபர் ஒருவர் 22 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளார். இது என்னவென்று தெரிந்தால் உங்கள் எண்ணம் அடியோடு மாறிவிடும்.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாகனங்களில் ஒன்று ஆட்டோ ரிக்ஸா. டவுன் பஸ்ஸில் செல்வதை விட ஆட்டோவில் சென்று இறங்கினால், தனி கவுரவம் என்று நினைத்த காலமெல்லாம் உண்டு. தற்போது ஓலா, உபேர் போன்ற 'கேப்' (Cab) நிறுவனங்கள் விஸ்வரூபமெடுத்து விட்டன.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

என்றாலும் இன்றும் கூட தங்கள் சௌரியமான பயணங்களுக்கு ஆட்டோக்களை மட்டுமே நம்பியுள்ள பலர் இருக்கவே செய்கின்றனர். எப்படிப்பட்ட சிறிய சந்து பொந்து என்றாலும், ஆட்டோக்கள் எளிதாக சென்று விட்டு திரும்பி விடும்.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

ஆனால் ஆட்டோக்கள் ஆமை போல மிகவும் மெதுவாகதான் பயணிக்கும். ஆட்டோக்களில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு அது நன்கு தெரியும். ஆனால் ஆட்டோக்கள் மிகவும் மந்தமானவை என்ற அடையாளத்தை மாற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறார் மேட் எவ்ரார்ட் (Matt Everard).

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

இவர் இங்கிலாந்தின் எஸக்ஸ் பகுதியை சேர்ந்த தொழிலதிபர். சரக்கு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது இவர் படைத்துள்ள சாதனை ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் கின்னஸ் உலக சாதனைகளில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

மேட் எவ்ரார்ட் கடந்த 2017ம் ஆண்டு ''டக் டக்'' ஒன்றை வாங்கினார். ஆட்டோ ரிக்ஸாக்கள்தான் ''டக் டக்'' என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. இ-பே (eBay) விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து இந்த ஆட்டோ ரிக்ஸா வாங்கப்பட்டது.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

இது 1971ம் ஆண்டு மாடல் ஆகும். தாய்லாந்தில் உருவாக்கப்பட்டது. ஆட்டோ ரிக்ஸாவை வாங்கிய உடனேயே மேட் எவ்ரார்ட் அதனை மாடிபிகேஷன் செய்ய தொடங்கி விட்டார். அந்த ஆட்டோ ரிக்ஸாவில் 350 சிசி 2-ஸ்ட்ரோக் இன்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

ஆனால் மேட் எவ்ரார்ட் அதற்கு பதிலாக புதிய 1.3 லிட்டர் ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜினை பொருத்தினார். அத்துடன் மிகவும் சிறப்பான முறையில் அந்த இன்ஜின் ட்யூனிங்கும் செய்யப்பட்டது. இந்த ஆட்டோ ரிக்ஸாவை மேட் எவ்ரார்ட் 3 ஆயிரம் யூரோக்களுக்கு வாங்கியிருந்தார்.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

இந்திய மதிப்பில் கணக்கிட்டால் அதன் விலை தோராயமாக 2.74 லட்ச ரூபாய். ஆனால் ஆட்டோ ரிக்ஸாவை மாடிபிகேஷன் செய்வதற்காக மட்டும் அவர் செலவிட்ட தொகை 20 ஆயிரம் யூரோக்கள். இந்திய மதிப்பில் சொல்வதென்றால் சுமார் 18.25 லட்ச ரூபாய்!

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

ஆனால் இந்த செலவு தற்போது அவருக்கு பெரும் புகழை சம்பாதித்து கொடுத்துள்ளது. எனவே இது ''வொர்த்'' ஆன செலவுதான். ஆட்டோ ரிக்ஸாக்கள் மெதுவானது என்ற உங்கள் எண்ணத்தை இந்த வினாடியோடு விட்டு விடுங்கள்.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

மேட் எவ்ரார்ட் தான் மாடிபிகேஷன் செய்த ஆட்டோ ரிக்ஸாவில், மணிக்கு அதிகபட்சமாக 119.584 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்து தற்போது உலக சாதனை படைத்துள்ளார். இதுவே மைல்களில் கணக்கிட்டால், மணிக்கு அதிகபட்சமாக 74.306 மைல்கள்.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

இதன் மூலம் உலகின் மிக வேகமாக ஆட்டோ ரிக்ஸா என்ற சாதனையை இது படைத்துள்ளது. கின்னஸ் உலக சாதனைகள் நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 109.43 கிலோ மீட்டர்கள் என்பதே முந்தைய சாதனையாக இருந்து வந்தது.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

தற்போது அதனை மேட் எவ்ரார்ட் முறியடித்துள்ளார். இத்தனைக்கும் மேட் எவ்ரார்ட் உலக சாதனை முயற்சியாக ஆட்டோ ரிக்ஸாவை இயக்கும்போது, அவரது உறவினரான ரஸ்ஸல் ஷெர்மான் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக வேகமான ஆட்டோ இதுதான்... இதன் டாப் ஸ்பீடு எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் மலைத்து போவீர்கள்

இங்கிலாந்தின் யார்க்ஸையர் பகுதியில் உள்ள எல்விங்டன் ஏர் ஃபீல்டு பகுதியில் இந்த உலக சாதனையை மேட் எவ்ரார்ட் நிகழ்த்தினார். உலக சாதனை நிகழ்த்தி முடித்த உடன் அவர் கூறுகையில், ''மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். உடனடியாக சாம்பெயின் பாட்டிலை திறக்க போகிறேன்'' என்றார். இனி ஆட்டோக்கள் மெதுவாகதான் செல்லும் என யாராவாது சொல்வீர்கள்???

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
World's Fastest Auto Rickshaw Clocks 119kph. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X