உலகின் அதிவேக டாப்- 10 ரயில்கள் விபரம்!

Written By:

சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடும் போட்டிக்கு மத்தியில், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பான் வென்றிருக்கிறது. சமீபத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்ட நிலையில், மும்பை- ஆமதாபாத் இடையில் ஓடப்போகும் முதல் புல்லட் ரயில் குறித்த கனவுகள் இந்தியர்கள் மனதில் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க துவங்கியிருக்கின்றன.

இந்த நிலையில், உலகில் தற்போது இயக்கப்படும் புல்லட் ரயில்கள் மற்றும் அதன் வேகம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளும் விதத்தில் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது. மேலும், முதல் ஸ்லைடில் இந்திய புல்லட் ரயிலின் வேகம் மற்றும் சில முக்கியத் தகவல்களையும், தொடர்ந்து பிற நாடுகளில் இயக்கப்படும் புல்லட் ரயில்களின் விபரங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலமாக, இந்திய புல்லட் ரயிலுடன், உலகில் இயக்கப்படும் புல்லட் ரயில்களை ஒப்புமை செய்து பார்க்க ஏதுவாகும். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

01. இந்தியாவின் புல்லட் ரயில்

01. இந்தியாவின் புல்லட் ரயில்

மும்பை- ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மணிக்கு 320 கிமீ வேகம் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 2 மணிநேரத்தில் கடந்துவிடும். நாட்டின் இரு முக்கிய வர்த்தக நகரங்களுக்கு இடையிலான இந்த புல்லட் ரயில் திட்டம் 2023ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. உலகின் அதிவேக ரயில்கள் குறித்த தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

02. மாக்லேவ் புல்லட் ரயில்- ஜப்பான்

02. மாக்லேவ் புல்லட் ரயில்- ஜப்பான்

உலகின் அதிவேக ரயிலாக ஜப்பானில் சோதிக்கப்பட்டு வரும் மாக்லேவ் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின்போது மாக்லேவ் ரயில் மணிக்கு 603 கிமீ வேகத்தை தொட்டு புதிய சாதனை படைத்தது. அதற்கு முன்னர் மாக்லேவ் ரயில் மணிக்கு 581 கிமீ வேகத்தை தொட்டு சாதனைப் படைத்திருந்தது. அதாவது, சென்னையிலிருந்து திருநெல்வேலியை ஒரு மணிநேரத்தில் சென்றடைந்துவிடும்.

03. டிஆர்-09, ஜெர்மனி

03. டிஆர்-09, ஜெர்மனி

மாக்லேவ் ரயிலுக்கு அடுத்தாக ஜெர்மனியில் இயக்கப்படும் டிரான்ஸ்ரேபிட் எனப்படும் டிஆர்-09 மோனோரயில் அதிவேக ரயிலாக இருக்கிறது. மணிக்கு 500 கிமீ வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும். ஆனால், பாதுகாப்பு கருதி அதிகபட்மசாக 450 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.

04. ஷாங்காய் மாக்லேவ்- சீனா

04. ஷாங்காய் மாக்லேவ்- சீனா

ஷாங்காய் மாக்லேவ் ரயில் மணிக்கு 430 கிமீ வேகம் வரை தொடக்கூடியது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக சராசரியாக மணிக்கு 251 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.

05. ஹார்மோனி சிஆர்எச்380ஏ- சீனா

05. ஹார்மோனி சிஆர்எச்380ஏ- சீனா

உலகிலேயே அதிக தூரத்துக்கு புல்லட் ரயில் சேவையை அளிக்கும் நாடு சீனாதான். அங்கு இயக்கப்படும் 50 சதவீதம் அளவுக்கு புல்லட் ரயில்களாக இருக்கின்றன. இந்தநிலையில், சீனாவின் ஹார்மோனி சிஆர்எச்380ஏ என்ற புல்லட் ரயில் சோதனை ஓட்டத்தின்போது, மணிக்கு 416.6 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்தது. ஆனால், வணிக ரீதியில் தற்போது மணிக்கு சராசரியாக 380 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது.

06. டிஜிவி ரெசியூ- பிரான்ஸ்

06. டிஜிவி ரெசியூ- பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் இயக்கப்படும் இந்த புல்லட் ரயில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் பறக்கும். இந்திய புல்லட் ரயில் திட்டத்தை கைப்பற்ற பிரான்ஸ் நாடும் போட்டியிட்டது.

07. சீமென்ஸ் வெலாரோ இ-ஏவிஎஸ்103- ஸ்பெயின்

07. சீமென்ஸ் வெலாரோ இ-ஏவிஎஸ்103- ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் இயக்கப்படும் சீமென்ஸ் வெலாரோ புல்லட் ரயில் மணிக்கு சராசரியாக 350 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. சோதனை ஓட்டத்தின்போது இந்த ரயில் மணிக்கு 400 கிமீ வேகத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

08. டால்கோ 350

08. டால்கோ 350

ஸ்பெயின் நாட்டின் டால்கோ ரயில் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 365 கிமீ வேகத்தை தொட்டது. ஆனால், வர்த்தக ரீதியில் தற்போது சராசரியாக மணிக்கு 350 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது.

இந்திய ரயிலின் வேகம்

இந்திய ரயிலின் வேகம்

2023ல் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்குள், மணிக்கு 600 கிமீ வேகத்திலான ரயிலை ஜப்பான் வர்த்தக ரீதியில் இயக்க தொடங்கியிருக்கும். இருந்தாலும், இந்தியாவுக்கு மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் ரயில் இந்திய போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read the world fastest bullet trains details in tamil.
Please Wait while comments are loading...

Latest Photos