புல்லட் ரயிலை விஞ்சும் தொழில்நுட்பம்... உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வெற்றிகரமாக இயக்கம்...

ஜெர்மனி நாட்டில் உலகின் முதல் ஹைட்ரஜன் பவர் ரயில் இயக்கப்பட்டது. ஹைட்ரஜன் பவர் ரயில் என்பது, டீசல் இன்ஜினிற்கு பதிலாக ஹைட்ரஜன் பவர் மூலம் இயங்கும் இன்ஜினை கொண்டு இயக்கப்படுவதாகும்.

ஜெர்மனி நாட்டில் உலகின் முதல் ஹைட்ரஜன் பவர் ரயில் இயக்கப்பட்டது. ஹைட்ரஜன் பவர் ரயில் என்பது, டீசல் இன்ஜினிற்கு பதிலாக ஹைட்ரஜன் பவர் மூலம் இயங்கும் இன்ஜினை கொண்டு இயக்கப்படுவதாகும்.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

போக்குவரத்திற்காக மனிதன் கண்டு பிடித்த சிறந்த கண்டுபிடிப்பு ரயில்தான். ஒரு நேரத்தில் அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குறைந்த செலவிலும், வேகமாகவும் பயணிக்க ஏற்ற போக்குவரத்து முறை ரயில்தான்.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

இந்த ரயில் போக்குவரத்தில் விபத்திற்கான வாய்ப்புகள் குறைவு. பயணிகளுக்கான செளகரியம் அதிகம் என ரயில்களில் உள்ள பலன்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் மனிதனின் இந்த கண்டுபிடிப்பு எளிதாக வரவில்லை.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

ரயில்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் ஸ்டீம் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. அதாவது நிலக்கரியை எரித்து அதில் இருந்து வரும் ஆவியை கொண்டு ரயிலை இயக்குவது. முதலில் ரயிலை இயக்குவது மிக கடினமான காரியமாக இருந்தது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

பின்னர் டீசல் லோகோ மோட்டிவ் இன்ஜின் கொண்டு வரப்பட்டது இந்தியாவில் இந்த ரக இன்ஜின்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. டீசலை எரிபொருளாக கொண்டு இந்த ரக இன்ஜின்கள் இயங்குகின்றன.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

இந்த டீசல் இன்ஜின்கள் அதிக வேகத்தில் பயணிக்க கூடியது. ஸ்டீம் இன்ஜின்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமான மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அதை ஒப்பிடும் போது டீசல் இன்ஜின்கள் குறைவான அளவு மாசுபாட்டையே ஏற்படுத்துகின்றன.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

அதன்பின் வந்ததுதான் மின்சாரத்தில் இயங்கும் ரயில் இன்ஜின்கள். இந்த இன்ஜின் வந்த பின்பு ரயிலின் தோற்றங்கள் பலவகையாக மாறியுள்ளது. ரயில் வழித்தடங்களில் மின் வயர்கள் அமைத்து, அதில் இருந்து மின்சாரத்தை ரயிலின் இன்ஜினிற்கு கடத்தி அதை கொண்டு ரயில்கள் இயக்கப்பட்டன.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

பெரு நகரங்களில் பலர் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. கிட்டத்தட்ட மின்சார ரயிலை பலர் ஒரு டவுன் பஸ் போலவே பயன்படுத்தி வந்தனர். இது வந்த பின்னர் ரயில்வே துறைக்கு அதிகமான லாபம் கிடைக்க துவங்கியது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

இன்று புல்லட் ரயில், மெட்ரோ ரயில், மோனோ ரயில் என பலவகையான ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இந்தியாவில் புல்லட் ரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டமும் மிக வேகமாக நடந்து வருகிறது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

இதனிடையே ஜெர்மனி நாட்டில் முதல் ஹைட்ரஜன் பியூயல் செல்லில் இயங்கும் ரயில் தயாரிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் ஹைட்ரஜன் பியூயல் செல் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹைட்ரஜன் பியூயல் செல் மூலம் மின்சாரம் உற்பத்தியாகி அது மின் மோட்டாருக்கு செல்கிறது. அதன் மூலம்தான் ரயில் இயங்கும்.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

இந்த ஹைட்ரஜன் பியூயல், சுற்றுச்சுழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த ரயிலில் இருந்து கழிவுகளாக வெறும் ஸ்டீம் மற்றும் தண்ணீர்தான் வெளியேறும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

இந்த ரயிலை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிஜிவி எனும் புல்லட் ரயில் தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த அல்ஸ்டாம் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த ரயில் முதன் முறையாக வட ஜெர்மனியில் உள்ள கக்ஸ் ஹைவன், ப்ரீமர் ஹெவன், ப்ரீமர்வோர்டே, மற்றும் பாக்ஸ்டெக்யூட் ஆகிய நகரங்களுக்கு இடையே சுமார் 100 கி.மீ தூரம் இயக்கப்பட்டது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

இந்த ஹைட்ரஜன் பியூயல் செல்லில் இயங்கும் இந்த ரயில் ஒரு முழு சார்ஜில் சுமார் 1000 கி.மீ வரை இயங்கும். இது சுற்றுச்சூழலுக்கு எந்த மாசுபாட்டையும் ஏற்படுத்தாது என்பதுடன், எவ்வித சப்தத்தையும் எழுப்பாது. மேலும் எலெக்ட்ரிக் அல்லாத டீசலுக்கு மாற்று சக்தியாக இந்த பியூயல் செல் பயன்படுத்தப்படுகிறது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

தற்போது இந்த ரயில் இன்ஜினை தயாரித்துள்ள நிறுவனம், இதை அதிக அளவில் தயாரித்து, விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாகவும், நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் விற்பனை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

ஹைட்ரஜன் பியூயல் செல் என்றால் என்ன?

ஹைட்ரஜன் பியூல் செல் என்பது, ஹைட்ரஜனையும், ஆக்ஸிஜனையும், ஒரு சிறப்பான பிளேட் மூலம் இணைய வைத்து, அதன்மூலம் மின்சாரத்தை உருவாக்கி, இன்ஜினை இயங்க வைக்கும்.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

இதில் ஹைட்ரஜன் என்பது அலுமனிய டேங்கில் அடைக்கப்பட்டிருக்கும், ஆக்ஸிஜனை காற்றில் இருந்து எடுத்து கொள்கின்றனர். உதாரணமாக கிரில் பகுதி வழியாக வரும் வெளிகாற்றில் இருந்து ஆக்ஸிஜன் எடுக்கப்படுகிறது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

இந்த ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் கலக்கும்போது குறிப்பிடத்தக்க மின்சாரமும், தண்ணீரும் வெளியாகிறது. இதில் மின்சாரமானது, பிளாட்டினம் மூலம் கடத்தப்பட்டு மின்சார இன்ஜினிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

இந்த செயல்பாடு நடக்கும்போது எந்தவித சத்தமும் வெளியாவது இல்லை. இதனால் வாகனமும் சத்தமே இல்லாமல் இயங்ககூடியதாக இருக்கிறது. ஆனால் இதன் விலைதான் சற்று அதிகம்.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

ஹைட்ரஜன் பியூயல் செல்லை பொறுத்தவரை, ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலக்கும்போது உருவாகும், மின்சாரத்தை பிளாட்டினத்தால் மட்டுமே கடத்த முடிகிறது. இதனால்தான் இதற்கு அதிக விலையாகிறது. முடிந்த அளவிற்கு குறைந்த பிளாட்டினத்தை பயன்படுத்தும் வகையில் இதன் டிசைன் அமைந்தால் அதன் விலையை பெரும் அளவிற்கு குறைக்கலாம்.

உலகின் முதல் ஹைட்ரஜன் பியூயல் ரயில் அறிமுகம்

பாலாவின் பார்வையில்...:

எதிர்காலத்தில் எலெக்ட்ரிக்கிற்கு போட்டியாக இந்த ஹைட்ரஜன் பியூயல் செல் தொழிற்நுட்பம்தான் வரும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த இரண்டு தொழிற்நுட்பமும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாவைதான். எனினும் ஹைட்ரஜனை நிரப்ப அதிகமாக பியூயல் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட வேண்டும்.அப்பொழுதுதான் இது மக்கள் மத்தியில் அதிக அளவிற்கு பயன்பாட்டிற்கு வரும்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Worlds first hydrogen powered train unveiled Germany. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X