Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 12 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிதக்கும் சொர்க்கம்! பில் கேட்ஸ் பத்தி காட்டு தீயாய் பரவும் தகவல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
பெரும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் பற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் ஏற்படுத்தும் பாதகங்களால் மாற்று எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதில், ஹைட்ரஜனும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவதற்கு சர்வதேச அளவில் ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரஜன் மீது அவர்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை.

இதற்கு 2 காரணங்களை அவர்கள் முன் வைக்கின்றனர். ஹைட்ரஜன் திறனற்றது என்பது அவர்கள் சொல்லும் முதல் காரணம். ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு அதிகமாக உள்ளது என்பது அவர்கள் சொல்லும் இரண்டாவது காரணம். இருந்தபோதும் ஆட்டோமொபைல் துறையின் மற்றொரு தரப்பினர், ஹைட்ரஜன் எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த சூழலில், உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழும் பில் கேட்ஸின் ஆதரவை, ஹைட்ரஜன் வாகனம் ஒன்று பெற்றிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ், ஹைட்ரஜனில் இயங்க கூடிய உல்லாச படகு (Superyacht) ஒன்றை ஆர்டர் செய்திருப்பதாக உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த உல்லாச படகிற்கு ''அக்வா'' என பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஹைட்ரஜனில் இயங்க கூடிய உல்லாச படகை ஆர்டர் செய்த முதல் நபர் என்ற பெருமையை பில் கேட்ஸ் பெற்றுள்ளதாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் பில் கேட்ஸ் ஆர்டர் செய்துள்ள உல்லாச படகு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த சினோட் என்ற நிறுவனம் இந்த உல்லாச படகை தயாரிக்க உள்ளதாகவும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த உல்லாச படகின் நீளம் 112 மீட்டர்கள் (370 அடி) எனவும், மொத்தம் 5 தளங்களை கொண்டதாக இந்த உல்லாச படகு இருக்கும் எனவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 விருந்தினர்கள் மற்றும் 31 பணியாளர்களுக்கு தேவையான விசாலமான இட வசதியையும் இந்த உல்லாச படகு பெற்றிருக்கும் எனவும், நீச்சல் குளம், ஹெலிபேட், ஜிம் மற்றும் ஸ்பா போன்ற சகல வசதிகளையும் கொண்டதாக இந்த உல்லாச கப்பலை சினோட் நிறுவனம் வடிவமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த உல்லாச படகில், இரண்டு 1 MW மோட்டார்கள் இடம்பெற்றிருக்கும் எனவும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 31.5 கிலோ மீட்டர்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதன் ரேஞ்ச் 6,035 கிலோ மீட்டர்களாக இருக்கும் எனவும், இதுபோன்ற பிரம்மாண்டமான ரேஞ்ச்தான் கடல் பயணங்களுக்கு தேவை எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

அதே சமயம் இந்த உல்லாச படகில் பேக் அப்பிற்காக டீசல் இன்ஜின் வழங்கப்பட உள்ளதாகவும், ஒரு வேளை ஹைட்ரஜன் எரிபொருள் ஸ்டேஷனை கண்டறிய முடியாவிட்டால், மற்ற படகுகளை போலவே டீசல் இன்ஜில் இந்த அக்வா உல்லாச படகு இயங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பில் கேட்ஸ் ஆர்டர் செய்துள்ள இந்த உல்லாச படகின் விலை 644 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது.

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4,593 கோடி ரூபாய். உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் பலவும் இந்த செய்தியை பிரசுரித்துள்ள நிலையில், இது வெறும் வதந்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அக்வா உல்லாச படகை பில் கேட்ஸ் ஆர்டர் செய்துள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தையும் சினோட் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக சினோட் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், இந்த செய்திகள் அனைத்தும் உண்மையிலேயே தவறானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்வா என்பது கான்செப்ட் மாடல் மட்டுமே. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மொனாக்கோ படகு ஷோ-2019 நிகழ்வில், சினோட் நிறுவனம் இந்த அக்வா கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கான்செப்ட் மாடலைதான் சினோட் நிறுவனம் தற்போது பில்கேட்சுக்கு விற்பனை செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதனை சினோட் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சினோட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலமாக பில் கேட்ஸை சுற்றி வந்த இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.