மதுரையில் யமஹா நடத்திய "தி கால் ஆஃப் தி ப்ளூ "சந்திப்பு...

மதுரையில் யமஹா நிறுவனம் "தி கால் ஆஃப் தி ப்ளூ" என்ற சந்திப்பை நடத்தியது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்

மதுரையில் யமஹா நிறுவனம் தி கால் ஆஃப் தி ப்ளூ என்ற சந்திப்பை நடத்தியது . . . இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் . . .

ஒரு வாகனம் என்பது ஒவ்வொருவருக்கும் உணர்வுப்பூர்வமான விஷயம். ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு வாகனத்தைப் பிடித்து விட்டது என்றால் அது ஏன் பிடித்தது என்று காரணம் எல்லாம் ஆராய முடியாது. இதுவும் ஒருவகையான காதல் தான் இப்படியாக ஒரு நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கு உற்சாக மூட்டும்படி அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள். கிளப் ஆரம்பித்து சிறிய ரைடு செல்வார்கள். இப்படியாகச் சமீபத்தில் தமிழகத்தில் ஒரு கூட்டம் நடந்துள்ளது.

மதுரையில் யமஹா நிறுவனம் தி கால் ஆஃப் தி ப்ளூ என்ற சந்திப்பை நடத்தியது . . . இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் . . .

யமஹா நிறுவனம் சமீபத்தில் மதுரையில் "தி கால் ஆஃப் தி ப்ளு" என்ற தலைப்பில் தனது வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடிஏ ஸ்கேட்டர் ஆடிட்டோரியத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யமஹா நிறுவனமே நேரடியாகச் செய்திருந்தது.

மதுரையில் யமஹா நிறுவனம் தி கால் ஆஃப் தி ப்ளூ என்ற சந்திப்பை நடத்தியது . . . இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் . . .

இந்த நிகழ்ச்சிக்காக மதுரையைச் சுற்றியுள்ள யமஹா வாடிக்கையாளர்கள் அழைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட யமஹா நிறுவனத்தின் வாகனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.இது போக 1000க்கும் மேற்பட்ட யமஹா நிறுவன பைக்குகளின் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு திருவிழா போல இந்த நிகழ்ச்சி நடந்தது.

மதுரையில் யமஹா நிறுவனம் தி கால் ஆஃப் தி ப்ளூ என்ற சந்திப்பை நடத்தியது . . . இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் . . .

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு யமஹா நிறுவனத்தின் பிரிமியம் மாடல் பைக்குகளின் தொழிற்நுட்பம், செயல்திறன், மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. வந்திருந்தவர்களும் இதை ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இது மட்டுமல்ல வந்திருந்தவர்கள் யமஹாவின் பிரமியம் மாடல் பைக்குகளில் ஜிம்கானா ரைடு செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதாவது பைக்குகளை அவர்களே சிறிது தூரம் ஓட்டி பார்த்து அனுபவிக்க முடிந்தது.

மதுரையில் யமஹா நிறுவனம் தி கால் ஆஃப் தி ப்ளூ என்ற சந்திப்பை நடத்தியது . . . இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் . . .

இது போக யமஹா நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை வழங்கியது. இதில் பலர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் டெஸ்ட் ரைடிங், யமஹா நிறுவனத்தின் தயாரிப்புகளின் கண்காட்சி, பைக்கின் ஆக்சஸரீஸ்களின் கண்காட்சி ஆகியவையும் இடம் பெற்றன. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ரைடிங் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த நடத்தப்பட்டது.

மதுரையில் யமஹா நிறுவனம் தி கால் ஆஃப் தி ப்ளூ என்ற சந்திப்பை நடத்தியது . . . இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் . . .

யமஹா நிறுவனத்தைப் பொருத்தவரை தனது பிரிமியம் பைக்குகளின் ரேஞ்சில் எஃப்ஸி 25ல ஆர்15எம், மோட்டா ஜிபி எடிசன், ஆர்15வி4, ஆர்15எஸ், எஃப்ஸிஎஸ் 25, எம்டி -15 வெர்ஷன் 2.0, ஆர்15எம் 60th வோர்ல்டு ஜிபி எடிசன் ஆகிய பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்குகள் எல்லாம் மக்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற பைக்குகள் தான். இந்த குறிப்பாக ஆர்15 பைக் ரேஞ்ச்கள் மக்கள் அதிகம் ரசிக்கும்படி இருக்கிறது.

மதுரையில் யமஹா நிறுவனம் தி கால் ஆஃப் தி ப்ளூ என்ற சந்திப்பை நடத்தியது . . . இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் . . .

இந்த பைக்கை பொருத்தவரை 155 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜினை கொண்டது. இந்த பைக்கில் முக்கிய அம்சங்களாக பை பங்சனல் எல்இடி ஹெட்லைட, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், டிராக் அல்லது ஸ்டிரீட் ரைடு மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. இந்த பைக்கை வெறும் ரூ2000 முன்பணம் செலுத்தி புக் செய்து கொள்ளலாம். இந்த பைக் ரேஸிங் ப்ளு, மெட்டாலிக் ரெட், டார்க் நைட் ஆகிய 3 விதமான நிறங்களில் வெளியாகிறது.

மதுரையில் யமஹா நிறுவனம் தி கால் ஆஃப் தி ப்ளூ என்ற சந்திப்பை நடத்தியது . . . இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் . . .

இதே போல எம்டி 15 வெர்ஷன் 2.0 என்ற பைக்கும் மக்களை அதிகம் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்த பைக்கிலும் அதே 155 சிசி லிக்யூடு கூல் டு இன்ஜின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் ஆகிய அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Yamaha conducted The call of the blue meet in Madurai
Story first published: Tuesday, September 27, 2022, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X