சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

டோல்கேட் விதிகள் தொடர்பாக உங்களுக்கு ஏராளமான சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கலாம். இதில், ஒரு சூப்பரான விதிமுறை குறித்து இந்த செய்தியில் விளக்கியுள்ளோம்.

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

இந்தியாவில் பாஸ்ட்டேக் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India - NHAI) மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் 1ம் தேதியில் இருந்து அனைத்து வாகனங்களுக்கு பாஸ்ட்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் அப்போது பாஸ்ட்டேக் ஸ்டிக்கரை வாங்கவில்லை. எனவே 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல், டோல்கேட்டில் கட்டணம் செலுத்த அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமும் இந்த உத்தரவு முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

அதற்கு பதிலாக மேலும் ஒரு மாத காலம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பாஸ்ட்டேக் வாங்குவதற்கான கால அவகாசம் வரும் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கின்ற காரணத்தால், வாகன உரிமையாளர்கள் அனைவரும் பாஸ்ட்டேக் வாங்குவதில் தற்போது மும்முரமாக உள்ளனர்.

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

பாஸ்ட்டேக் எப்படி செயல்படுகிறது? என்பது கண்டிப்பாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் இது குறித்து தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்களை உங்கள் வாகனத்தின் முன் பக்க விண்டுஷீல்டில் பொருத்தி கொள்ள வேண்டும். அத்துடன் இதற்கு நீங்கள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

இதன்பின்பு உங்களது வாகனம் டோல்கேட்டிற்கு செல்லும்போது, அங்கிருக்கும் சென்சார்கள் இந்த டேக்கை ஆட்டோமெட்டிக்காக கண்டறிந்து, உரிய கட்டணத்தை உங்கள் கணக்கில் இருந்து எடுத்து கொள்ளும். பின் உங்கள் கணக்கில் பணம் தீர்ந்த பிறகு நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். பாஸ்ட்டேக் மூலம் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

டோல்கேட்களில் கட்டணம் செலுத்த நீங்கள் காத்து கொண்டிருக்க தேவையில்லை. இதன் மூலமாக உங்கள் நேரம் மிச்சமாகும். அத்துடன் கட்டணம் செலுத்த காத்து கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் வாகனத்தின் எரிபொருள் வீணாவதும் பாஸ்ட்டேக் மூலம் தவிர்க்கப்படும். மேலும் நீங்கள் தங்கு தடையின்றி பயணம் செய்து கொண்டே இருக்க முடியும்.

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

டோல்கேட்களில் சில சமயங்களில் பயங்கரமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாஸ்ட்டேக் மூலம் அந்த பிரச்னை தவிர்க்கப்படும். வாகனங்களின் தடையற்ற இயக்கத்தை பாஸ்ட்டேக் உறுதி செய்கிறது. அத்துடன் காகித பயன்பாட்டையும் பாஸ்ட்டேக் குறைக்கிறது. இதுபோல் பாஸ்ட்டேக்கால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

பாஸ்ட்டேக் குறித்த அடிப்படையான தகவல்கள் பலருக்கும் தெரிந்தாலும் கூட, ஏராளமான சந்தேகங்களும் நிலவி கொண்டுதான் உள்ளன. வாகனத்தில் இருக்கின்ற பாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஸ்கேனரால் 'ரீட்' செய்ய முடியாவிட்டால் என்ன ஆகும்? என்பது அவ்வாறான சந்தேகங்களில் ஒன்று. இதுபோன்ற சூழல்களில், ரொக்கமாக கட்டணத்தை செலுத்த வேண்டுமோ? என பலர் எண்ணி கொண்டுள்ளனர்.

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

ஆனால் அது முற்றிலும் தவறு. உங்கள் வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஸ்கேனரால் 'ரீட்' செய்ய முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட டோல்கேட்டை நீங்கள் இலவசமாக கடக்க முடியும். விதிமுறைகள் இப்படித்தான் உள்ளது. ஆனால் இப்படி ஒரு விதிமுறை இருப்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

ஸ்கேனரால் பாஸ்ட்டேக்கை 'ரீட்' செய்ய முடியாத பட்சத்தில், டோல்கேட்டை இலவசமாக கடக்க உங்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் விதி. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில், சுங்கச்சாவடிகளை இலவசமாகவே கடக்க வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (கட்டணம் மற்றும் வசூலை தீர்மானித்தல்) திருத்த விதிகள் 2018 தெளிவாக கூறுகிறது.

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

''எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஸன் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு டோல்கேட்டை, போதுமான அளவு பேலன்ஸ் தொகையுடன், சரியான மற்றும் இயங்க கூடிய நிலையில் உள்ள பாஸ்ட்டேக் அல்லது அதுபோன்ற டிவைஸ்களுடன் ஒருவர் கடக்கும்போது, எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஸன் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு காரணமாக, பாஸ்ட்டேக் அல்லது அதுபோன்ற டிவைஸ் மூலமாக அவரால் டோல்கேட் கட்டணத்தை செலுத்த முடியவில்லை எனில், அந்த பயன்பாட்டாளரை எவ்வித கட்டணமும் இன்றி டோல் பிளாசாவை கடக்க அனுமதிக்க வேண்டும்''

சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

விதிமுறைகளில் இவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது. இங்கே எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஸன் கட்டமைப்பு என குறிப்பிடப்பட்டிருப்பது ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் உள்பட அனைத்து விதமான உபகரணங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த விதிமுறையை உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் நீங்கள் தெரியப்படுத்தினால், அவர்களும் பயன்பெறுவார்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
You Can Cross Toll Plaza For Free If Scanner Can't Read FASTag Sticker. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X