Just In
- 11 hrs ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 12 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 14 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- 16 hrs ago
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
Don't Miss!
- News
மெல்ல உயரும் கொரோனா... உலகம் முழுவதும் ஒரே நாளில் 740,209 பேர் பாதிப்பு
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க கார் சாவி மட்டும் எப்பவும் தனியாதான் இருக்கணும்... வேற எந்த சாவியும் கூட இருக்க கூடாது... ஏன் தெரியுமா?
கார் சாவியுடன் வேறு எந்த சாவியையும் ஏன் இணைத்து வைத்திருக்க கூடாது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு சிலர் தங்களது காரின் சாவியுடன் நிறைய சாவிகளை இணைத்து வைத்திருப்பதை பார்க்க முடியும். எனவே காரின் சாவி கொத்து அதிக எடையுடன் காணப்படும். காரின் சாவியுடன் வீடு, அலுவலகம் மற்றும் இதர சாவிகளையும் ஒன்றாக சேர்த்து வைத்திருப்பது உங்களுக்கு பல்வேறு வகைகளில் சௌகரியமாக இருக்கலாம்.

ஆனால் இதன் காரணமாக உங்களுக்கு பல்வேறு பிரச்னைகளும் ஏற்படும். இந்த விஷயங்கள் பலருக்கும் தெரிவதில்லை. உங்கள் காரின் சாவி கொத்து அதிக எடையுடன் இருந்தால், அது காரின் இக்னீஷன் சிலிண்டரில் (Ignition Cylinder) பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் ஒவ்வொரு முறை வளைவுகளில் திரும்பும்போதும், குண்டும், குழியுமான சாலைகளில் பயணம் செய்யும்போதும் உங்கள் காரின் சாவியானது, இக்னீஷனிற்குள் சற்றே நகர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இயக்கம் காரணமாக, காலப்போக்கில் இக்னீஷன் சிலிண்டரின் உள் பாகங்கள் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

அதிலும் குறிப்பாக உங்கள் கார் சாவியுடன் நிறைய சாவிகள் இணைக்கப்பட்டிருந்தால், இந்த சேதம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்பது இந்த துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்து. ஒருவேளை இக்னீஷன் சிலிண்டர் தேய்மானம் அடைந்து விட்டால், உங்கள் காரை ஸ்டார்ட் செய்வதில் நீங்கள் பிரச்னைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த பிரச்னை ஏற்பட்டால் உங்களுக்கு தேவையில்லாமல் வீண் செலவுகள் ஏற்படும். அத்துடன் காரில் ஏற்படும் பிரச்னைகள் உங்களுக்கு தேவையற்ற மன உளைச்சலையும் ஏற்படுத்தலாம். உங்கள் காரின் சாவியுடன் நிறைய சாவிகளை இணைத்து வைக்க கூடாது என சொல்வதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

ஒரு வேளை காரின் சாவி தொலைந்து விட்டால் மற்ற சாவிகளும் தொலைந்து விடும் என்பதுதான் அந்த காரணம். தொலைந்து போன சாவிகளுக்கு உங்களிடம் மாற்று சாவி இல்லாவிட்டாலும் நிலைமை சிக்கலாகி விடும் என்பதை மறந்து விட வேண்டாம். எனினும் மேற்கண்ட பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு எளிமையான வழிகள் இருக்கின்றன.

உங்கள் சாவிகளை ஒட்டுமொத்தமாக கார் சாவியுடன் இணைத்து வைப்பதற்கு பதிலாக தனித்தனி வளையங்களில் (Rings) வைக்கலாம். இதன் மூலம் காரின் இக்னீஷன் சிலிண்டர் சேதம் அடைவதற்கான வாய்ப்பு குறையும். அதேபோல் உங்களின் அனைத்து முக்கியமான சாவிகளுக்கும் மாற்று சாவிகளையும் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பான இடங்களில் இந்த மாற்று சாவிகளை வைக்கலாம். ஒருவேளை உண்மையான சாவி தொலைந்து விட்டால் இந்த மாற்று சாவி உங்களுக்கு உதவி செய்யும். அடுத்த முறை நீங்கள் கார் ஓட்ட செல்லும்போது உங்கள் காரின் சாவி கொத்து அதிக எடை இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்கள் காரின் சாவி கொத்து அதிக எடையுடன் இருந்து, இக்னீஷனில் பிரச்னைகள் ஏற்பட்டால், அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் காரை ஒப்படைப்பது அவசியம். அல்லது உங்களுக்கு தெரிந்த நல்ல மெக்கானிக்கை அணுகலாம். ஆனால் இதற்கு செலவு ஆகும் என்பதால், முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதுதான் உங்களுக்கும், உங்கள் காருக்கும் நல்லது.
-
அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க மத்தது எதுக்குங்க!
-
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
-
கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!