பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...

பொது சாலையில் வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...

இன்றைய அதிநவீன உலகில் தொழில்நுட்பம் வெகுவாக மேம்பட்டு விட்டது. எனவே தவறு செய்பவர்கள் மிக எளிதாக அதிகாரிகளிடம் சிக்கி கொள்கின்றனர். இதன்படி ஹைதராபாத்தில் பொது சாலையில் அபாயகரமான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை காவல் துறையினர் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஏபிஎன் தெலுங்கு செய்தி வெளியிட்டுள்ளது.

பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...

பொது சாலையில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில், மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஸ்டண்ட் செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த இளைஞரும் அதையேதான் செய்துள்ளார். எனவே காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்த கைது தொடர்பான தகவல், சைபராபாத் காவல் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் நிறை, குறைகள்... விரிவாக விளக்கும் வீடியோ!

பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் பொது சாலையில் இரவு நேரத்தில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்த யாரோ ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளதை போல் தெரிகிறது. இதன்பின் சமூக வலை தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கியது. சைபராபாத் காவல் துறையினரும் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...

அதன்பின் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அந்த இளைஞரை தேட தொடங்கினர். இதன் மூலம் அந்த இளைஞரின் இருப்பிடத்தை கண்டறிந்து, காவல் துறையினர் அவரை கைது செய்தனர். பொது சாலையில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டிய காரணத்திற்காக ஐபிசி மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...

ஆனால் அந்த இளைஞரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்கு காவல் துறையினர் பரிந்துரை செய்து விட்டனரா? என்பது சரியாக தெரியவில்லை. பொது சாலையில் இவ்வாறு அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டுவதால், அந்த வாகனத்தின் ஓட்டுனருக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...

இதனை இளைஞர்கள் பலர் உணர்வதில்லை. தொடர்ச்சியாக பலர் பொது சாலையில் சாகசத்தில் ஈடுபட்டு காவல் துறையினரால் கைதாகி வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இன்று தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. சாலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமாக இதுபோன்ற நபர்களை காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...

வாகனங்களில் ஸ்டண்ட் செய்யும் நபர்கள் மட்டுமல்லாது, தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பது போன்ற மற்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அபராதம் விதிப்பதற்கும் தற்போது சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

போட்டோ மற்றும் வீடியோ ஆதாரத்தின் மூலம் வாகனத்தின் உரிமையாளருக்கே நேரடியாக அபராத சலான்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. எனவே சாலையில் காவல் துறையினர் இல்லை என்ற அசட்டு தைரியத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீற வேண்டாம். கேமராக்கள் கண்காணிக்கின்றன என்பதை உணர்ந்து, போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுங்கள். இது அனைவருக்கும் நல்லது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Young Man Arrested For Performing Bike Stunts In Hyderabad - Viral Video. Read in Tamil
Story first published: Friday, March 5, 2021, 12:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X