லடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா!! அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...!

இந்தியாவில் சூப்பர் பைக் வைத்துள்ள எவர் ஒருவருக்கும் தனது பைக்கில் லடாக் சென்றுவர வேண்டும் என்கிற ஆசை இருக்க தான் செய்கிறது. இதற்குமுன் மக்கள் பலர் கார்களில், மோட்டார்சைக்கிள்களில், சைக்கிளில் பயணம் செய்துள்ளதை பார்த்துள்ளோம்.

லடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா!! அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...!

இவ்வளவு ஏன், நமது தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் இந்திய வரைப்படத்தை மாட்டிக்கொண்டு, நடந்தே லடாக்கிற்கு பயணம் செய்து வருகின்றனர். சமூக வலைத்தள பக்கங்களில் இந்த விஷயம் ட்ரெண்டிங் ஆகவே, இதனை பின்பற்றி பல தமிழக இளைஞர்கள் லடாக்கிற்கான தனது நடைப்பயணத்தை துவங்கி வருகின்றனர்.

லடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா!! அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...!

ட்ரெண்டாகி வரும் அதேசமயம், இணையத்தில் கேலி செய்யக்கூடிய விஷயமாக மாறியுள்ள இந்த லடாக் நடைப்பயணத்திற்கான காரணம் என்ன என்பது தற்போது வரையில் தெரியவில்லை. ஆனால் உண்மையில் லடாக்கிற்கு மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வதே கடினமானது, அப்படியிருக்க, நடைப்பயணம் எல்லாம் மிகவும் கடினம்.

லடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா!! அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...!

யாரேனும் ஒரு சிலரால் மட்டுமே முழுவதுமாக நடைப்பயணம் செய்து தமிழ்நாட்டில் இருந்து லடாக்கை அடைய முடியும். பலரால் முடியாது என்பதே உண்மை. அந்த அளவிற்கு லடாக்கிற்கு செல்லும் சாலைகள் எவ்வளவு ஆபத்தானது? என்னென்ன சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்? என்பவற்றை பெங்களூரில் இருந்து லடாக்கிற்கு தனது சுஸுகி ஹயபுஸாவில் சென்ற ஒருவர் வீடியோவாக தொகுத்து வழங்கியுள்ளார்.

ஆர்பி மோட்டோ விலாக்ஸ் (RB MotoVlogs) என்கிற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவினை மேலே காணலாம். சுஸுகி ஹயபுஸாவில் ஒருவர் லடாக்கிற்கு செல்வது இது முதல்முறை அல்ல. ஆனால் தென்னிந்தியாவில் இருந்து இந்த சுஸுகி சூப்பர்பைக்கில் ஒருவர் லாட்க்கிற்கு பயணம் செய்திருப்பது இதுதான் முதல்முறையாக இருக்க வேண்டும்.

லடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா!! அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...!

லடாக்கிலும் சரி, லடாக்கிற்கு செல்லும் வழிகளிலும் சரி சாலைகள் மிகவும் கரடுமுரடாக, நன்கு உயரத்தில் இருக்கும் என்பது நமக்கு தெரியும். இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த வீடியோ அமைந்துள்ளது. சாலை ஒன்றின் ஓரத்தில் ஒரு மோட்டார்சைக்கிள் ரைடர்கள் குழுவை இந்த ஹயபுஸா ரைடர் சந்திப்பதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது.

லடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா!! அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...!

அதன்பின் அந்த குழுவுடன் இந்த பெங்களூர் ஹயபுஸா பைக் உரிமையாளரும் லடாக்கிற்கான பயணத்தை துவங்குகிறார். பொருட்களை வைத்து செல்ல, இந்த குழுவுடன் ஒரு எஸ்யூவி கார் ஒன்றும் கூடவே பயணித்து வருவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. சில தொலைவு கடந்த பின்பு வானிலை மாறுகிறது.

லடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா!! அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...!

சிறிது நேரத்திலேயே மழை பெய்ய துவங்குகிறது. இவர்கள் சென்று கொண்டிருந்த சாலை மறைய ஆரம்பிக்க, மழையிலும் மண்ணும், பாறையும் நிறைந்த சாலையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது, இந்த ஹயபுஸா ரைடர் தனது பைக்கின் பின் சக்கரம் தனது கட்டுப்பாட்டில் இல்லை எனவும், பாறைகளும் வழுக்குகின்றன எனவும் கூறுவதை கேட்க முடிகிறது.

லடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா!! அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...!

இவர் பைக்கில் அதிக த்ரோட்டலை கொடுக்கவில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் ட்ராக்‌ஷன் கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த கடினமான பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த இந்த மோட்டார்சைக்கிள் குழுவினரின் பயணத்திற்கு இடையிடையே சில ஆற்று கிளைகளும் வருவதை பார்க்கலாம்.

லடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா!! அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...!

இந்த குழுவில் உள்ள மற்றவர்கள் இத்தகைய பயணத்திற்கு ஏற்ப அட்வென்ச்சர் பைக்குகளையும், க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களையும் வைத்துள்ளனர். இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் மட்டுமே சுஸுகி ஹயபுஸா என்ற சூப்பர்பைக் உடன் பயணம் செய்துள்ளனர்.

இதனாலேயே இவருக்கு மட்டும் இந்த பயணத்தின்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, குறுக்கே வரும் சிறு சிறு ஆற்று கிளைகளை கடக்கும்போது மற்ற ரைடர்களை காட்டிலும் இவர் சற்று அதிகமாகவே தடுமாற்றம் அடைவதை பார்க்க முடிகிறது. இதில் இருந்து இத்தகைய அட்வென்ச்சர் பயணங்களுக்கு சூப்பர்பைக் ஏற்றதாக இருக்காது என்பதை இவர் புரிந்து கொண்டிருப்பார்.

லடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா!! அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...!

ஒருமுறை நீரை கடக்கும்போது தடுமாறி விழுந்த இந்த ஹயபுஸா ரைடரை மற்றவர்கள் அருகே வந்து தூக்கிவிட்டு, பைக்கை நிறுத்த வேண்டாம், பரப்பில் தொடர்ந்து மெதுவாக ஆக்ஸலேரேட்டரை கொடுத்தவாறு நகர்ந்து கொண்டே இருங்கள் என கூறுகின்றனர். நீர் நிலைகளை கடக்கும்போது ஹயபுஸாவின் பின்சக்கரம் முற்றிலுமாக கண்ட்ரோலில் இல்லாத போன்றே வீடியோவில் தெரிகிறது.

ஒருவேளை இந்த ரைடருக்கு இவ்வாறான பயணங்களில் போதிய அனுபவம் இல்லாமல் இருக்கலாம். எனவே லடாக் போன்ற கரடுமுரடான சாலைகளை கொண்ட பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் பயணம் செய்பவர்களின் அனுபவம் முக்கியமாகும். பகல் முழுவதும் பயணம் செய்த இந்த குழு இரவு வந்தவுடன் ஒரு இடத்தில் பைக்குகளை நிறுத்திவிட்டு உரையாடுவதில் இந்த வீடியோ முடிவடைகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore to Ladakh on a Suzuki Hayabusa superbike Vlogger shows how it’s done.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X