ஒருமுறை சார்ஜ் போட்டால் இவ்வளவு தூரம் போலாமா? அறிமுகமான அதிவேக ஆட்டோ...

ஒரு முறை சார்ஜ் போட்டால் 100 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையிலான ஆட்டோ ஒன்றை ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயார் செய்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஒருமுறை சார்ஜ் போட்டால் இவ்வளவு தூரம் போலாமா? அறிமுகமான அதிவேக ஆட்டோ...

ஐதராபாத்தை மையாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஜீரோ 21 ரீநியூயபில் எனர்ஜி சொல்யூஷன். இந்நிறுவனம் டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரால் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் இவர்கள் ஏற்கனவே பெட்ரோல் டீசல் வாகனங்களை எலெக்டரிக் வாகனங்களாக மாற்றும் உதிரிப்பாகங்களைத் தயாரித்து அதை மாற்றிக்கொடுக்கும் பணியையும் செய்து வந்தனர்.

ஒருமுறை சார்ஜ் போட்டால் இவ்வளவு தூரம் போலாமா? அறிமுகமான அதிவேக ஆட்டோ...

தற்போது இந்நிறுவனம் 2 அதிவேக எலெக்டரிக் ஆட்டோக்களை தயார் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. அதன்படி டீர் மற்றும் ஸ்மார்ட் மூல் எக்ஸ் என இரண்டு ஆட்டோக்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது. இது பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களாக விற்பனைக்கு வரவுள்ளது.

ஒருமுறை சார்ஜ் போட்டால் இவ்வளவு தூரம் போலாமா? அறிமுகமான அதிவேக ஆட்டோ...

டீர் ஆட்டோக்களை பொருத்தவரை 48V பேட்டரியுடன் அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஆட்டோவாக உருவாக்கப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 110 கி.மீ வேகத்தில் பயணிக்கும்.

ஒருமுறை சார்ஜ் போட்டால் இவ்வளவு தூரம் போலாமா? அறிமுகமான அதிவேக ஆட்டோ...

ஸ்மார்ட் மூல் எக்ஸ் ஆட்டோவை பொருத்தவரை 72V பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 55 கி.மீ. வேகம் தான் இந்த ஆட்டோவிலும் அதிகபட்ச வேகம். ஆனால் இது முழு சார்ஜில் 125.கி.மீ வரை இயங்கும். இந்த ரேஞ்ச் என்பது 750 கிலோ எடையுடன் கணக்கிடப்பட்டுள்ளது.

ஒருமுறை சார்ஜ் போட்டால் இவ்வளவு தூரம் போலாமா? அறிமுகமான அதிவேக ஆட்டோ...

தற்போது இந்நிறுவனம் வாகனங்களை சண்டிகர், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த மாநிலங்களில் பல நகரங்களில் ஆட்டோக்களை பெட்ரோல்/ டீசல் இன்ஜினில் பயன்படுத்தத் தடை உள்ளது.

ஒருமுறை சார்ஜ் போட்டால் இவ்வளவு தூரம் போலாமா? அறிமுகமான அதிவேக ஆட்டோ...

ஜீரோ 21 நிறுவனத்தைப் பொருத்தவரை ஏற்கனவே பெட்ரோல்,டீசல் அல்லது சிஎன்ஜி வாகனமாக இருந்ததை பெட்ரோல் வாகனமாக மாற்றும் உபகரணங்களைத் தயாரித்து வந்தனர். தற்போது சொந்தமாக ஆட்டோக்களை தயாரித்து வருகின்றனர். இதில் டீர் பயணிகள் வாகனமாகவும், ஸ்மார்ட் மூல் எக்ஸ் சரக்கு வாகனமாகவும் பயன்படும்.

ஒருமுறை சார்ஜ் போட்டால் இவ்வளவு தூரம் போலாமா? அறிமுகமான அதிவேக ஆட்டோ...

இதில் ஸ்மார்ட் மூல் ஆட்டோவை பொருத்தவரை பல விதமான பயன்பாட்டிற்கு உதவுகிறது திறந்தவெளி லக்கேஜ் கேரியர், மூடப்பட்ட லக்கேஜ் கேரியர், தெருவோர கடைகள் நடத்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட லக்கேஜ் கேரியர் ஆகிய விதங்களில் இந்த வாகனம் உதவும்.

ஒருமுறை சார்ஜ் போட்டால் இவ்வளவு தூரம் போலாமா? அறிமுகமான அதிவேக ஆட்டோ...

ஆட்டோவை பொருத்தவரை ஒரு முறை சார்ஜ் போட்டால் 100 கி.மீ மேல் பயணிக்கும் என்பதால் சுமார் ஒரு நாளுக்கு ஒரு முறை சார்ஜ் ஏறினால் ஆட்டோவை ஓட்டுநர்கள் பயன்படுத்த முடியும். இது நகர்ப் பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர்களுக்குச் சுலபமாக இருக்கும்.

Most Read Articles
English summary
Zero21 unveils two high speed electric three wheelers
Story first published: Tuesday, June 28, 2022, 16:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X