5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

பிரபல தனியார் நிறுவனம் நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

மின்வாகனங்களைச் சார்ந்து இயங்கும் ஜிப் (Zypp) நிறுவனம் இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 5 ஆயிரம் பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை திறக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன் என்பது மின் வாகனங்களுக்கு தேவையான பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் வழங்கும் ஓர் மையமாகும். இதனையே ஜிப் விரைவில் நாடு முழுவதும் அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது.

5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

இரண்டு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு பயன்படுகின்ற வகையிலேயே இந்த ஸ்வாப்பிங் பேட்டரி ஸ்டேஷன்கள் செயல்பட இருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து நிலையங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஜிப் திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், இப்பணியில் நிறுவனம் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

தற்போது நாட்டின் குறிப்பிட்ட ஆறு நகரங்களில் மட்டுமே ஜிப் நிறுவனத்தின் ஸ்வாப்பபிள் பேட்டரி ஸ்டேஷன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றை விரிவாக்கும் செய்யும் முயற்சியிலேயே நிறுவனம் இறங்கியிருக்கின்றது. ஆகையால், தற்போது டெல்லி மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் மட்டுமே காணப்பட்டு வரும் மின் வாகனங்களுக்கான சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி மையங்கள் விரைவில் நாடு முழுவதும் காட்சியளிக்க இருக்கின்றன.

5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

நடப்பாண்டில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, புனே,சண்டிகர், லக்னோ, மீரட், இந்தோர், போபால் ஆகிய 30க்கும் மேற்பட்ட நகரங்களிலேயே முதலில் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதையடுத்தே நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களை நோக்கி நகர திட்டமிட்டிருப்பதாக ஜிப் நிறுவனத்தின் சிஇஓ கூறியிருக்கின்றார்.

5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

அந்தவகையில், மூன்று ஆண்டுகளுக்குள்ளாக 100 நகரங்களில் பேட்டரிக்கான மையங்களை நிறுவ நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதன்மூலம் மின்வாகனங்களின் வளர்ச்சிக்கு தடை கல்லாக இருக்கும் அடிப்படை வசதி பற்றாக்குறை கணிசமாக ஒழிக்கப்படும். மேலும், மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க இது மிக உதவியாக இருக்கும்.

5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

இந்த பணிக்காக ஜிப் நிறுவனம் ரூ. 50 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு ஸ்வாப்பபிள் பேட்டரி மையத்தை உருவாக்க ரூ. 1 லட்சம் என்கிற அளவில் இந்த தொகை ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

ஜிப் நிறுவனம் எலெக்ட்ரிக் மின்சார இருசக்கர வாகனங்களை ஷேர் திட்டத்தின் அடிப்படையில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகின்றது. அந்தவகையில், நிறுவனத்திடம் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மின்சார இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருப்பதாக நிறுவனம் கூறுகின்றது.

5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

ஆகையால் தங்கள் நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கு ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்களின் வருகை அதிக பயனை அளிக்கும் என நம்புகின்றது. அதேசமயம், இதுபோன்று அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதனால் மின் வாகனங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்ய முடியும். தற்போது வரை மக்கள் மின் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுவதற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே காரணம் ஆகும்.

5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?

எனவேதான், தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசும் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் மற்றும் சிறப்பு வசதிகள் சிலவற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. மேலும், நாட்டின் முன்னணி ஆயில் நிறுவனங்களும் தங்களின் எரிபொருள் நிலையங்களில் சார்ஜிங் மையங்களைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Most Read Articles
English summary
Zypp Plans To Build 5000 Battery Swapping Stations With In 3 Years In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X