கிளட்ச் இல்லாத புதிய மாடல் பைக்- டிவிஎஸ் அறிமுகம்

By

TVS Motors launches Clutch-Free Bike
சென்னை: கிளட்ச் இல்​லா​மல் தானியங்கி கியர் வசதி கொண்ட புதிய பைக் மற்​றும் ஸ்கூட்​டரை டி.வி.​எஸ் மோட்​டார்ஸ் அறி​மு​கப்​ப​டுத்​தி​யுள்ளது.

'டிவி​எஸ் ஜைவ் பைக்' மற்றும் 'டிவி​எஸ் வீகோ ஸ்கூட்டர்' ஆகிய இப்புதிய மாடல்களை டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறு​வ​ன தலை​வர் வேணு ஸ்ரீனி​வா​சன் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

இப்புதிய பைக், கிளட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் வகை​யில் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது. பைக் எந்த கிய​ரில் சென்று கொண்​டி​ருந்​தா​லும் உட​ன​டி​யாக நியூட்​ர​லுக்​குக் கொண்டு வர முடி​யும். கியரை படிப்​ப​டி​யா​கக் குறைத்து நியூட்​ர​லுக்கு வர வேண்​டிய அவ​சி​யம் இல்லை. பைக்கை எந்த கிய​ரில் நிறுத்​தி​னா​லும்,​ அதே கிய​ரில் வண்​டியை தொடர்ந்து ஓட்டலாம். ​

110 சிசி என்​ஜின்,​ 12 லிட்​டர் கொள்​ள​ளவு பெட்​ரோல் டேங்க் ஆகி​ய​வற்​று​டன் கூடு​த​லாக பைக் இருக்​கை​யின் அடி​யில் பொருள்​களை வைத்​துக் கொள்ள இட வசதி உள்​ளது. இதன் விலை ரூ. 41 ஆயி​ரம். நீ​லம்,​ சிவப்பு,​ கருப்பு ஆகிய நிறங்​க​ளில் உள்​ளன.​

டிவி​எஸ் வீகோ ஸ்கூட்டரில், 110 சிசி என்​ஜின்,​​ 12 அங்​குல அலாய் வீல்​கள் பொருத்​தப்​பட்​டுள்ளன. பின்​பு​றத்​தில் பெட்​ரோல் டேங்க் அமைக்​கப்​பட்​டுள்​ளது. ஐந்து லிட்​டர் கொள்​ள​ளவு பெட்​ரோல் டேங்க்,​ செல்​போன் சார்ஜ் செய்​யும் வசதி உள்​ளிட்​டவை இதில் உள்​ளன. விலை ரூ. 42 ஆயி​ரம்.

அறிமுக நிகழ்ச்சியின் போது, டி.வி.எஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், 'போக்​கு​வ​ரத்து நெரிச​லின்​போது கியர்​க​ளை அடிக்கடி மாற்​றிக் கொண்​டி​ருப்​ப​தும்,​ கிளட்சை உப​யோ​கிப்​ப​தும் வாகன ஓட்​டி​க​ளுக்கு சிர​ம​மான விஷ​யமாக உள்ளது.

இதனால் புதிய ஜைவ் பைக் போக்​கு​வ​ரத்து நெரிச​லில் செல்பவர்களுக்கு மிக​வும் பய​னுள்​ள​தாக இருக்கும். ​

இந்த இரண்டு மாடல்களுமே டிசம்​பர் மாதத்​தில் விற்​ப​னைக்கு வரும்' என்​றார்.

Most Read Articles

Story first published: Thursday, November 26, 2009, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X