ரூ.3,000 முதல் பிரிமியம் சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹீரோ

Hero Cycle
டெல்லி: ரூ.3,000 முதல் ரூ.20,000 விலையில் புதிய பிரிமியம் சைக்கிள் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்கிறது ஹீரோ.

உலகின் மிகப்பெரிய சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற வகையில் புதிய மாடல் சைக்கிள்களை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், இதற்கு ஒருபடி மேலே சென்று, பிரிமியம் சைக்கிள் தயாரிப்பிலும் ஹீரோ இறங்கியுள்ளது. வரும் நவம்பர் மாதம் புதிய பிரிமியம் சைக்கிள்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

ரூ.3,000 முதல் ரூ.20,000 விலையில் பிரிமியம் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்படும் என்று ஹீரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹீரோ சைக்கிள்ஸ் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் கூறியதாவது:

" வரும் நவம்பரில் பிரிமியம் சைக்கிள்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். தற்போது ஹீரோ சைக்கிள்கள் மல்டி பிராண்டு ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், விரைவில் ஹீரோ சைக்கிள்களுக்கென பிரத்யேக ஷோரூம்களை திறக்க உள்ளோம். முதலில் டெல்லி, இந்தூர் மற்றும் வடமத்திய பகுதியில் உள்ள நகரங்களில் 40 ஷோரூம்களை திறக்க இருக்கிறோம்.

லூதியானாவில் ஏற்கனவே உள்ள ஆலையில் புதிய பிரிமியம் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தவிர, ரூ.50 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி பிரிவும் அமைத்து வருகிறோம். அடுத்த ஆண்டு மத்தியில் அதில் உற்பத்தி துவங்கப்படும்.

தவிர, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரிமியம் சைக்கிள்களை ஏற்றுமதி செய்ய ஹீரோ திட்டமிட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நாடுகளில் தகுதிவாயந்த இறக்குமதியாளரை நியமிக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Most Read Articles

English summary
The world's largest bicycle maker Hero Cycles today said it will foray into the premium segment by launching products in Rs 3,000-Rs 20,000 range by November this year and will set up exclusive outlets for selling them.The company is setting up a dedicated unit to roll out the premium cycles at Ludhiana. It is also scouting for partners in the US, Germany, Japan and the UK to export the cycles under a contract manufacturing deal. "Hero Cycles is working on a whole new range of premium brands. These will be targeted to all segments starting from kids. We are looking to introduce a completely new premium brand by November," Hero Cycles Managing Director told PTI.
Story first published: Tuesday, August 9, 2011, 10:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X