சர்வதேச அளவில் டெக்னாலஜி பார்ட்னர் தேடும் ஹீரோ ஹோண்டா

Hero Honda Logo
டெல்லி: ஹீரோ ஹோண்டா குழுமத்திலிருந்து ஹோண்டா விலகியதையடுத்து, புதிய தொழில்நுட்ப பார்ட்னர்களை தேடும் முயற்சிகளை ஹீரோ நிறுவனம் துவங்கியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளராக திகழும் ஹீரோ ஹோண்டா நிறுவனத்திற்கு, ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஹீரோ ஹோண்டாவிலிருந்து ஹோண்டா திடீரென விலகிவிட்டதால், புதிய தொழில்நுட்ப பார்ட்னர்களை தேடவேண்டிய கட்டாயம் ஹீரோஹோண்டாவுக்கு ஏற்பட்டுள்ளது.

வரும் 2014ம் ஆண்டு வரை தொழில்நுட்ப உதவிகளை ஹோண்டா வழங்கும் என்றாலும், தற்போதே தனது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளை விரிவாக்கம் செய்யும் பணிகளை ஹீரோ ஹோண்டா முடுக்கிவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலம், குர்கானில் உள்ள தொழிற்சாலையிலேயே சிறிய அளவிலான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை ஹீரோ ஹோண்டா கொண்டுள்ளது.

ஆனால், தற்போது இந்த மையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணிகளை ஹீரோ ஹோண்டா துவங்கியுள்ளது.

இதுகுறித்து ஹீரோ ஹோண்டா மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் அனில் துவா கூறியதாவது:

"குர்கான் ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான புதிய வடிவமைப்பு எஞ்சினியர்களை பணிக்கு அமர்த்தி வருகிறோம்.

மேலும், சர்வதேச அளவில் தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்களையும், உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம்," என்றார்.

Most Read Articles
English summary
Hero Honda is intensifying research and development programme, scouting for technology partner across the globe and even keeping the option of acquiring firms open. The firm that has a licence agreement with Honda till 2014 said it will also be hiring “hundreds” as it looks to develop its own technology.
Story first published: Wednesday, July 6, 2011, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X