ரூ.25,495 விலையில் புதிய இ-ஸ்கூட்டர்: லோஹியா அறிமுகம்

Genius e scooter
அழகிய வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத தொழில்நுட்பம் கொண்ட பேட்டரியுடன் புதிய இ-ஸ்கூட்டரை லோஹியா ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த லோஹியா ஆட்டோ நிறுவனம் இ-ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே, ஃபேம் மற்றும் ஓமா ஸ்டார் ஆகிய இரண்டு இ-ஸ்கூட்டர்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், இளம் பெண்களை கவரும் வகையில் அழகிய வடிவமைப்புடன் கூடிய புதிய இ-ஸ்கூட்டர் லோஹியா ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது. ஜீனியஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இ-ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கிமீ செல்லலாம் என லோஹியா தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாத இந்த இ-ஸ்கூட்டரில் ஒரு கிமீ செல்வதற்கு வெறும் 10 பைசா மட்டுமே செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளம் பெண்கள் எளிமையாக கையாளும் வகையில் இலகு எடை கொண்டதாக இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரை போக்குவரத்து துறையில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதேபோன்று, இந்த ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்சும் தேவையில்லை. நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த இ-ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில், விஆர்எல்வி தொழில்நுட்பம் கொண்ட 48 வோல்ட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பராமரிப்பு இல்லாமல் சிறப்பாக செயல்படக்கூடியது என்று லோஹியா தெரிவித்துள்ளது. டெல்லியில் இந்த இ-ஸ்கூட்டர் ரூ.25,495 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
UP based electric bike maker Lohia Auto launched a new electric bike named 'Genius' with the price tag of Rs. 25,495 (ex-showroom, Delhi). The new Genius is equipped with a special VRLA maintenance free battery type with a capacity of 48V. Battery charging time is 6-8 hours and it can run upto 70 km.
Story first published: Friday, October 7, 2011, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X