இன்னும் ஒன்றரை ஆண்டில் கஃபே ரேஸ் மோட்டார்சைக்கிள்: ராயல் என்பீல்டு

Enfield cafe racer
ரேஸ் பிரியர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் புதிய கஃபே ரேஸ் மோட்டார்சைக்கிள் மாடலை ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

கஃபே ரேஸ் மோட்டார்சைக்கிள்களை வடிவமைக்க தற்போது ரேஸ் பிரியர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சாதாரண மோட்டார்சைக்கிள்களை மறுவடிவமைப்பு செய்து கஃபே ரேஸ் பைக்குகளாக அவற்றை மாற்றுகின்றனர்.

கஃபே ரேஸ் மோட்டார்சைக்கிள்களுக்கு பிரத்யேக கிட்டுகள் கிடைக்கின்றன. இவை விலை அதிகம் என்பதுடன் அதை கொண்டுவந்து புதிய கஃபே ரேஸ் பைக்காக மாற்றுவதில் அதிக நடைமுறை சிரமங்கள் உள்ளன.

இந்த நிலையில், ரேஸ் பிரியர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் புதிய கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்துகிறது.

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே கஃபே ரேஸ் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை ராயல் என்பீல்டு காட்சிக்கு வைத்திருந்தது. ஆனால், இந்த மோட்டார்சைக்கிள் எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியாமல் ரேஸ் பிரியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டிற்குள் புதிய கஃபே ரேஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக ராயல் என்பீல்டு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வெங்கி பத்மநாபன் கூறுகையில்,"தற்போது உற்பத்தி திறன் போதுமானதாக இல்லை. இதற்காக, உலகத்தரம் வாய்ந்த புதிய ஆலையை சென்னை அருகே கட்டி வருகிறோம். இந்த ஆலையில் உற்பத்தி துவங்கியவுடன் கஃபே ரேஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அந்த பைக் யூசிஇ500எஞ்சினுடன் விற்பனைக்கு வரும்," என்றார்.

Most Read Articles
English summary
Royal Enfield will launch the Café Racer motorcycle within 18 months. It will be equipped with UCE500 engine. This bike will solved all expectations of bike racers and enthusiats.
Story first published: Monday, October 3, 2011, 11:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X