கோவையில் விரைவு சேவையுடன் புதிய டூ வீலர் ஒர்க்ஷாப்: பாஷ் திறந்தது

Two Wheeler
கோயம்புத்தூரில் விரைவான சேவை வழங்கும் வசதிகொண்ட இருசக்கர வாகன பழுது நீக்கும் பணிமனையை பாஷ் நிறுவனம் திறந்துள்ளது.

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற பாஷ் நிறுவனம் நாடு முழுவதும் 500 கார் சர்வீஸ் ஸ்டேஷன்களை நடத்தி வருகிறது. சிறந்த சேவை வழங்கி வருவதால் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து, தற்போது இருசக்கர வாகன பழுது நீககும் சேவையிலும் களமிறங்கியுள்ளது பாஷ். டெல்லியில் இருசக்கர வாகனங்களுக்கான 10 விரைவு பழுது பார்க்கும் பணிமனைகளை திறந்துள்ள அந்த நிறுவனம், தற்போது கோயம்புத்தூரில் அதே போன்ற புதிய கான்செப்ட் மாடல் ஒர்க்ஷாப்பை திறந்துள்ளது.

பாஷ் நிறுவனத்தின் உயரதிகாரி முரளிதரன் கூறுகையில்," எங்களது இருசக்கர வாகன பணிமனையில் அனைத்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் பழுது நீக்கித் தரப்படும்.

இந்த துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, இந்த ஆண்டுக்குள் இதுபோன்று 50 ஒர்க்ஷாப்புகளை திறக்க உள்ளோம். ஒரு மாநகரத்துக்கு 10 ஒர்க்ஷாப்புகள் என்ற கணக்கில் திறக்க உள்ளோம். எங்களது ஒர்க்ஷாப்புகள் நிறைவான சேவையை வழங்கும்," என்றார்.

Most Read Articles
மேலும்... #bosch #two wheeler #பாஷ்
English summary
German based auto component maker Bosch has opened workshop concept in the two-wheeler segment in Coimbatore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X