சொந்தமாக அலுமினிய ஃபிரேம் சைக்கிள் தயாரிக்கும் ஹீரோ சைக்கிள்

Hero cycles
உயர்தர அலுமினிய ஃபிரேம் கொண்ட சைக்கிள்களை சொந்தமாக தயாரிக்க உள்ளது ஹீரோ. இதற்காக, புதிய உற்பத்தி பிரிவையும் கட்டியுள்ளது.

சைக்கிள் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான ஹீரோ இதுவரை சைக்கிளுக்கான அலுமினிய ஃபிரேம்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. இலகு எடை, அதிக உறுதி என்பதே இந்த அலுமினிய ஃபிரேம் சைக்கிள்களின் சிறப்பு. இந்த அலுமினிய ஃபிரேம்கள் சூப்பர் பைக்குகள் மற்றும் உயர்ரக பைக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், தற்போது அலுமினிய ஃபிரேம் கொண்ட உயர்தர சைக்கிள்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இதையடுத்து, சைக்கிளுக்கான உயர்தர அலுமினிய ஃபிரேம்களை சொந்தமாக தயாரிக்க ஹீரோ முடிவு செய்தது. இதன்மூலம், குறைவான விலையில் அலுமினிய ஃபிரேம் சைக்கிள்களை விற்பனை ேசெய்ய முடியும் என்பது திட்டம்.

இதற்காக, ரூ.21 கோடி முதலீட்டில் காஸியாபாத்தில் உள்ள தனது ஆலையில் புதிய அலுமினிய ஃபிரேம் உற்பத்தி பிரிவை அமைத்துள்ளது ஹீரோ. இந்த புதிய உற்பத்தி பிரிவை நிறுவனத்தின் இணை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பவன் முஞ்சால் நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து ஹீரோவின் அர்பன் டிரையல் பிராண்டு தலைவர் பர்வீன் வி பாட்டீல் கூறுகையில்," வாடிக்கையாளர்களின் கவனம் தற்போது உயர்ரக சைக்கிள்கள் மீது திரும்பியுள்ளது. அதற்கு தக்கவாறு எங்களது தயாரிப்புகளையும் மாற்றி வருகிறோம்.

காஸியாபாத் ஆலையில் நாள் ஒன்றுக்கு 18,500 சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், தேவையை நிறைவு செய்ய முடியவில்லை. எனவே, ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், அலுமினிய ஃபிரேம் சைக்கிள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்," என்றார்

Most Read Articles

English summary
Country's leading bicycle manufacturer Hero Cycles Ltd, , on Tuesday announced the setting up of a new assembly unit.The New unit has been set up with an investment of Rs 21 crores in phase I and will go to about 50 crores in phase II.
Story first published: Wednesday, August 15, 2012, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X