9 புதிய பிரிமியம் சைக்கிள்களை அறிமுகப்படுத்திய அசத்தும் ஹீரோ

Hero Cycles
நகர்ப்புற வாடிக்கையாளர்களை குறி வைத்து 9 புதிய பிரிமியம் ரக சைக்கிள்களை ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும், உடலை கட்டுறுதியாக்கவும் சைக்கிள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. மேலும், நகர்ப்புற வாசிகள் பெரும்பாலும் பிரிமியம் ரக சைக்கிள்களையே விரும்புகின்றனர்.

இதைக் கருத்தில்க்கொண்டு அர்பன் டிரையல் என்ற பிராண்டில் புதிய சைக்கிள்களை ஹீரோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சைக்கிள்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களுடன் வந்துள்ளது.

ரூ.40,000 முதல் ரூ.1.1 லட்சம் வரையிலான விலையில் புதிய சைக்கிள்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுகுறித்து ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் தலைவர் பிரவீன் பாட்டீல் கூறுகையில்," உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைவரும் விரும்புகின்றனர்.

ஆனால், அதற்கான நேரம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால், சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை பெறுவதோடு எரிபொருள் மிச்சப்படுத்த முடியும். மேலும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கலாம்.

இதை மனதில் கொண்டே புதிய பிரிமியம் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த புதிய சைக்கிள்கள் நகர்ப்புற வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்," என்றார்.

Most Read Articles

English summary
The world largest cycle manufacturing company Hero is introducing nine models of the 'Urban Trail' premium range cycles that are priced between Rs 40,000 and Rs 1.1 lakh, as it bets on the growing health consciousness amongst city slickers
Story first published: Tuesday, July 3, 2012, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X