ஸ்பிளென்டரை வீழ்த்தி உலகின் நம்பர் - 1 இடத்தில் ஆக்டிவா!

By Saravana

கடந்த செப்டம்பர் மாத நிலவரத்தின்படி, விற்பனையில் ஸ்பிளென்டரை விஞ்சி ஆக்டிவா ஸ்கூட்டர் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளின் விற்பனை புள்ளிவிபரத்தின்படி, ஸ்கூட்டர் விற்பனை 26 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளை, பைக் விற்பனை 15 சதவீதம் மட்டுமே உயர்வு கண்டுள்ளது. இதன் எதிரொலியால் தற்போது ஆக்டிவா விற்பனையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

 வித்தியாசம்

வித்தியாசம்

கடந்த செப்டம்பர் மாதம் 1,41,996 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்தது. அதே மாதத்தில் 1,24,217 ஸ்பிளென்டர் பைக்குகளை ஹீரோ விற்பனை செய்துள்ளது. நீண்ட காலமாக அதிகம் விற்பனையாகும் மாடலாக இருந்து வந்த ஹீரோ ஸ்பிளென்டர் செப்டம்பரில் ஆக்டிவாவிடம் தனது இடத்தை விட்டுக் கொடுத்தது. மேலும், உலகின் அதிகம் விற்பனையாகும் மாடலாக ஹீரோ இருந்து வரும் நிலையில், செப்டம்பரில் உலகின் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம் என்ற பெயரையும் ஆக்டிவா பெற்றுள்ளது. இதேநிலை, தொடர்ந்தால் ஆக்டிவா நம்பர் - 1 இடத்தை நிரந்தரமாக தக்க வைக்கும்.

 வரவேற்பு

வரவேற்பு

ஆக்டிவா ஸ்கூட்டருக்கு நகர்ப்புறங்களில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. மேலும், சண்டிகர், இம்பால், கோவா மற்றும் கேரளாவில் ஸ்கூட்டர்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னை, டெல்லி, மும்பை, புனே உள்ளிட்ட முக்கிய மார்க்கெட்டுகளிலும் ஸ்கூட்டர் மற்றும் பைக் விற்பனைக்கு இடையிலான வித்தியாசம் மிக குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரகப் பகுதிகளிலும் ஸ்கூட்டர்களுக்கான மதிப்பும், வரவேற்பும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டாப் 5 பட்டியல்

டாப் 5 பட்டியல்

முதல் இடத்தில் ஆக்டிவா, இரண்டாவது இடத்தில் ஸ்பிளென்டர், மூன்றாவது இடத்தில் ஹீரோ டீலக்ஸ், நான்காவது இடத்திவ் ஹீரோ பேஷனும், ஐந்தாவது இடத்தில் பஜாஜ் டிஸ்கவரும் பிடித்துள்ளன.

 காரணங்கள்

காரணங்கள்

ஸ்கூட்டர்களுக்கான மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்கூட்டரை விரும்புவதற்கான காரணங்களையும், அதில் இருக்கும் சில குறைபாடுகளையும் ஸ்லைடரில் காணலாம்.

விரும்புவதற்கான காரணங்கள்

விரும்புவதற்கான காரணங்கள்

  • போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எளிதாக ஓட்ட முடியும்.
    • கிளட்ச், கியர் இயக்கும் வேலையில்லை.
      • இருபாலருக்கும் ஏற்றது. குறிப்பாக, புடவை கட்டியிருந்தாலும் பிரச்னையில்லை.
        • பொருட்களை வைப்பதற்கு அதிக இடவசதி ஆகியவை ஸ்கூட்டர்களின் மவுசை வெகுவாக கூட்டியுள்ளன.
        •  வெறுக்கவும் சில காரணங்கள்

          வெறுக்கவும் சில காரணங்கள்

          • குறைந்த எரிபொருள் சிக்கனம்
            • மோசமான சாலைகளில் சிறிய டயர்களின் செயல்பாட்டில் திருப்தியிராது.
              • நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இல்லாதது.
              • தேவையை பொறுத்தே...

                தேவையை பொறுத்தே...

                நகரச் சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஸ்கூட்டர்கள் சிறப்பானதாக கூறலாம். அதேவேளை, தினசரி 50 கிமீ,க்கு மேல் இருசக்கர வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு 100சிசி அல்லது 150சிசி பைக்குகள் சிறந்ததாக இருக்கும்.

Most Read Articles
English summary
Scooters are not only the fastest growing segment of the Indian automotive market, but are increasingly taking on their most-erstwhile rival - bikes, as the gearless vehicles gain favour here. Honda Activa displaced the two-decade-old market leader Hero's Splendor motorcycle from the top slot in September.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X