உலகின் புரட்சிகர பிரேக் பாதுகாப்பு நுட்பத்துடன் கேடிஎம் பைக்குகள்!!

உலகின் மிக உயர்நுட்பத்திலான பிரேக் பாதுகாப்பு தொழில்நுட்பம் கேடிஎம் பைக்குகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் நிறுவனமும், பாஷ் நிறுவனமும் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் இணைந்து செயல்புரியும் வகையிலான இந்த உயரிய பாதுகாப்பை வழங்கும் இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு Motorcycle stability control system (MSC) என்று பெயரிடப்பட்டுள்ளது. அதிவேகத்தில் வளைவுகளில் திரும்பும்போதும், திடீரென பிரேக் பிடிக்கும்போது பைக் கவிழாமல் இருக்கும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் துணைபுரியும்.

கேடிஎம் பைக்குகள்

கேடிஎம் பைக்குகள்

முதலாவதாக கேடிஎம் 1190 அட்வென்ஞ்சர் மற்றும் அட்வென்ஞ்சர் ஆர் ஆகிய இரு டூரிங் ரக பைக் மாடல்களில் இந்த புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

வழுக்காது...

வழுக்காது...

இந்த தொழில்நுட்பம் பிரேக் பிடிக்கும்போது பைக்குகளின் சக்கரங்கள் வழுக்காமல் பார்த்துக் கொள்ளும்.

 சடன் பிரேக்

சடன் பிரேக்

திடீரென பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் சிக்கிக் கொள்ளாதவாறும், டர்னிங் ரேடியசை குறைத்து பைக்கை கீழே விழாதவாறு அதிக நிலைத்தன்மையுடன் செல்வதற்கு துணை புரியும்.

சீரான இயக்கம்

சீரான இயக்கம்

எஞ்சின் வேகம், சக்கரங்களின் வேகம், பிரேக் ஆற்றல் கடத்தும் வேகம் ஆகியவற்றை கண்காணித்து பைக்கை மிகுந்த நிலைத்தன்மையுடன் இயக்க துணைபுரியும். அதிவேகத்தில் ஆக்சிலேட்டரை கொடுத்து வீலிங் செய்யும்போது பைக் நிலைதடுமாறுவதும் இந்த தொழில்நுட்பத்தால் தவிர்க்கப்படும்.

 அடுத்து...

அடுத்து...

கேடிஎம் பைக்குகளை தொடர்ந்து பிஎம்டபிள்யூ, டுகாட்டி உள்ளிட்ட உயர்ரக பைக் மாடல்களிலும் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ

எம்எஸ்சி பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் செயல் விளக்கத்தை வீடியோவில் காணலாம்.

Most Read Articles
English summary
The 2014 KTM 1190 Adventure and Adventure R touring bikes have debuted with the new Motorcycle Stability Control (MSC) system from Bosch, becoming the world's first bikes to feature this revolutionary rider assistance system.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X