விரைவில் பெங்களூரை அதகளப்படுத்தப் போகும் ஜாவா, யெஸ்டி பைக்குகள்!

வரும் 13ந் தேதி பெங்களூரில் 12வது ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கான சர்வதேச தின கொண்டாடப்பட உள்ளது. பெங்களூரிலுள்ள ஜாவா ரசிகர்கள் அமைப்பு சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர், வில்சன் கார்டன் 10வது கிராஸ் சாலையில் உள்ள ஹொம்பேகவுடா பள்ளி மைதானத்தில் இந்த விழா நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் ஜாவா, யெஸ்டி பைக்குகளை வைத்திருக்கும் உரிமையாளர்களும், மைசூர் ஐடியல் ஜாவா தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களும், ஏராளமான ஜாவா பைக்குகளின் ரசிகர்களும் பங்குபெற உள்ளனர்.


பிரத்யேக மாடல்கள்

பிரத்யேக மாடல்கள்

இரட்டை சைலென்சர்களும், அந்த பைக்குகளின் அலாதி சப்தமும் வாடிக்கையாளர்களை மட்டுமல்ல, பெரும் ரசிகர்களையும் கவர்ந்த ஒன்றாக இருந்தது.

 ஏற்றுமதி

ஏற்றுமதி

நம் நாட்டு மார்க்கெட்டில் மட்டுமின்றி இலங்கை உள்பட 60க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் இந்த பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

 பிராண்டு மாற்றம்

பிராண்டு மாற்றம்

முதலில் ஜாவா பிராண்டிலும், பின்னர் யெஸ்டி பிராண்டிலும் பைக்குகள் வெளியிடப்பட்டன.

 மாடல்கள்

மாடல்கள்

175சிசி, 250சிசி மற்றும் 350சிசி மாடல்களில் இந்த பைக்குகள் விற்கப்பட்டன. ஒருகாலத்தில் இந்திய பைக் மார்க்கெட்டின் அதிசக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்களாக இவை விளங்கின.

 உற்பத்தி

உற்பத்தி

கடந்த 1960 முதல் 1996 வரை மைசூரில் இருந்த ஐடியல் ஜாவா தொழிற்சாலையில்தான் ஜாவா, யெஸ்டி பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன.

வர்த்தம் நொடித்தது

வர்த்தம் நொடித்தது

இந்த நிலையில், நவீன தொழில்நுட்பத்தில் வந்த புதிய பைக் மாடல்களும், தொழிலாளர் பிரச்னை, மாசுக்கட்டுப்பாடு பிரச்னை போன்றவற்றால் யெஸ்டி பைக்குகளின் விற்பனை குறைந்தன. இதையடுத்து, கடந்த 1996ம் ஆண்டு இந்த பைக்குகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டன.

சர்வதேச தினம்

சர்வதேச தினம்

ஜாவா, டெஸ்டி பைக்குகளின் காதலர்களையும், உரிமையாளர்களையும் ஒன்று சேர்க்கும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை இரண்டாவது வாரம் ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

 பைக் அணிவகுப்பு

பைக் அணிவகுப்பு

வரும் 13ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் சர்வதேச தின விழா கொண்டாட்டத்தின்போது வில்சன் கார்டனிலிருந்து காலை 10.30 மணிக்கு மைசூர் ரோடில் உள்ள ரஸ்தா கஃபேவுக்கு பைக் அணிவகுப்பும் நடைபெற இருக்கிறது.

 பெங்களூரில் அதிகம்

பெங்களூரில் அதிகம்

தற்போது பெங்களூரில் 600 ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள் நல்ல கண்டிஷனில் உள்ளன. இந்த பைக்குகளின் அருமை, பெருமைகளை தெரிந்த சில மெக்கானிக்குகள் பெங்களூரில் உள்ள பைக்குகளை பொக்கிஷமாக கருதி பழுது நீக்கி, பராமரிப்புப் பணிகளை செய்து தருகின்றனர்.

 தொடர்புக்கு

தொடர்புக்கு

ஜாவா, யெஸ்டி பைக்குகளின் சர்வதேச தின கொண்டாட்டத்தில் பங்குபெற விரும்புவோர் லோகேஷ் (மொபைல் எண் - 9880033994) மற்றும் அம்ரித் அப்பய்யா (9880105455) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

படங்கள்

படங்கள்

ஏற்கனவே பெங்களூரில் நடந்த சர்வதேச ஜாவா, யெஸ்டி பைக் தின விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
The International Jawa Yezdi Day is an annual celebration held on the second Sunday of every July across the globe to celebrate the power and legacy of these 175, 250 & 350cc bikes. Come Sunday, the 13th of July, you will witness a spectacle that happens only once in a year the largest gathering of Jawa’s and Yezdi’s in Bangalore. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X