மோட்டோ குஸ்ஸி வி7 ஸ்டோன் பைக்கை களமிறக்கும் பியாஜியோ!

By Saravana

கடந்த வாரம் கோவாவில் நடந்த இந்திய பைக் திருவிழாவில் பியாஜியோ நிறுவனம் தனது கீழ் செயல்படும் அப்ரிலியா, வெஸ்பா மற்றும் மோட்டோ குஸ்ஸி மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை பார்வைக்கு வைத்திருந்தது. அதில், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மோட்டோ குஸ்ஸி வி7 என்ற கிளாசிக் மோட்டார்சைக்கிள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக தற்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

சோதனைகள் முடிந்த பின்னர் இந்த புதிய பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய பியாஜியோ திட்டமிட்டிருக்கிறது.ஏற்கனவே, மோட்டோ குஸ்ஸி பிராண்டில் பெல்லாஜியோ, கிரிஸோ, ஸ்போர்ட்ஸ் 8வி மற்றும் கலிஃபோர்னியா 1400 ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களை பியாஜியோ விற்பனை செய்துவரும் நிலையில், 5வது மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது மோட்டோ குஸ்ஸி வி7 ஸ்டோன் பைக். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பாரம்பரிய ஸ்டைல்

பாரம்பரிய ஸ்டைல்

பாரம்பரிய டிசைன் கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் டிரையம்ஃப் போனிவிலி, கவாஸாகி இசட் 800 ஆகிய பைக் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

மோட்டோ குஸ்ஸி வி7 பைக் மாடலில் 744சிசி ஏர்கூல்டு வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.இந்த எஞ்சின் 50 பிஎச்பி பவரையும், 58 என்எம் டார்க்கையும் வழங்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

மோட்டோ குஸ்ஸி வி7 ரேஸர் பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மோட்டோ குஸ்ஸி டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டிருக்கும்.

இறக்குமதி மாடல்

இறக்குமதி மாடல்

இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

 டீலர் எண்ணிக்கை

டீலர் எண்ணிக்கை

தற்போது பியாஜியோவின் வெஸ்பா பிராண்டு அளவுக்கு மோட்டோ குஸ்ஸி பிரபலமாகவில்லை. இந்த நிலையில், மோட்டோ குஸ்ஸி பிராண்டுக்காக புதிய டீலர்களை திறக்க பியாஜியோ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 பழமையான நிறுவனம்

பழமையான நிறுவனம்

ஐரோப்பாவின் பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்று மோட்டோ குஸ்ஸி. 1921ம் ஆண்டு ஸ்தாபிதம் செய்யப்பட்டது. தற்போது வி7 II ரேஸர், வி7II ஸ்டோன், வி7 II ஸ்பெஷல், கலிஃபோர்னியா டூரிங், கலிஃபோர்னியா கஸ்டம், நார்ஜ் ஜிடி8வி, ஸ்டெல்வியோ என்டிஎக்ஸ் 1200 8வி, கிரிஸோ 1200 8வி எஸ்இ, நெவடா மற்றும் 1200 ஸ்போர்ட் ஆகிய பைக் மாடல்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து வருகிறது.

 
Most Read Articles

English summary
Moto Guzzi is planning on launching its V7 Stone for Indian market. They are looking at introducing this retro styled motorcycle in 2015 itself. It seems like the Italian manufacturer is enticed by the success of brands like Triumph and Harley-Davidson in India.
Story first published: Saturday, February 28, 2015, 15:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X