இந்தியாவிலேயே ஹயபுசா சூப்பர் பைக்கை அசெம்பிள் செய்ய சுஸுகி முடிவு

By Saravana

சுஸுகி பைக் ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் அசெம்பிள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் இந்த சூப்பர் பைக்கை வாங்கும் வாய்ப்பு கிட்ட உள்ளது. சுஸுகி ஹயபுசா பைக்கை இந்தியாவில் அசெம்பிள் செய்ய முடிவு செய்ததற்கான காரணங்கள் மற்றும் இதனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் என்பது பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வரவேற்பு

வரவேற்பு

ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகளுக்கான வரவேற்பு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. வலுவான வர்த்தக வாய்ப்பு இருப்பதால், பல முன்னணி சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிலேயே பைக்குகளை அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளன. சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவில் விலையுயர்ந்த பைக்குகளுக்கான வரவேற்பு 50 சதவீதம் வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவிக்கின்றன. எனவே, இந்த விஷயத்தில் முந்திக்கொள்ள சுஸுகி முடிவு செய்துள்ளது.

மானேசரில் தயாரிப்பு

மானேசரில் தயாரிப்பு

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள சுஸுகி தொழிற்சாலையில் தற்போது சாதாரண வகை பைக்குகளும், ஸ்கூட்டர்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதே ஆலையில்தான் ஹயபுசா சூப்பர் பைக்கை அசெம்பிள் செய்ய சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதுவரை இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்ட ஹயபுசா இனி உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து மானேசரில் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும்.

விலை குறையும்

விலை குறையும்

ரூ.15.95 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரும் விலையில், ஹயபுசா சூப்பர் பைக் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும்போது ரூ.5 லட்சம் விலை குறையும். இதனால், ரூ.10.95 லட்சம் விலையில் இந்த ஹயபுசா விற்பனை செய்யப்படும். எனவே, இந்திய வாடிக்கையாளர்கள் சரியான விலையில் ஹயபுசாவை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

இதர மாடல்கள்

இதர மாடல்கள்

ஹயபுசா சூப்பர் பைக்கை தொடர்ந்து, தனது 800சிசி பைக் மாடல்களையும் மானேசர் ஆலையில் அசெம்பிள் செய்ய சுஸுகி முடிவு செய்துள்ளது. இதனால், விலையுயர்ந்த பைக் செக்மென்ட்டில் மிக முக்கிய இடத்தை அந்த நிறுவனம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஹயபுசா பற்றி...

ஹயபுசா பற்றி...

1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சுஸுகி ஹயபுசா, உடனடியாக ஒரு உலக சாதனை பெருமையை பெற்றது. அப்போதைய நேரத்தில் உலகின் அதிவேக வர்த்தக ரீதியிலான தயாரிப்பு நிலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமை ஹயபுசாவுக்கு கிடைத்தது. அதாவது, சுஸுகி ஹயபுசா பைக் மணிக்கு அதிகபட்சமாக 312 கிமீ வேகத்தில் செல்லுமென தெரிவிக்கப்பட்டது.

தலைமுறை மாற்றம்

தலைமுறை மாற்றம்

1999 முதல் 2007ம் ஆண்டு வரை முதல் தலைமுறை மாடல் இருந்தது. அதற்கடுத்து, 2008ம் ஆண்டு முதல் இரண்டாம் தலைமுறை மாடல் விற்பனை செய்யப்படுகிறது. ஹயபுசாவின் அதிசக்திவாய்ந்த எஞ்சின் பற்றிய தகவல் அடுத்த ஸ்லைடில்...

எஞ்சின்

எஞ்சின்

ஹயபுசா சூப்பர் பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,340சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் அதிகபட்சமாக 197 எச்பி பவரையும், 138.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. 6 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

முன்புறத்தில் டியூவல் டிஸ்க் பிரேக் அமைப்பும், பின்புறத்தில் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக் 266 கிலோ எடை கொண்டது.

இதெல்லாம் கேட்கப்படாது...

இதெல்லாம் கேட்கப்படாது...

இந்த பைக்கை வாங்குவோர் மைலேஜை பற்றி கவலைப்படக்கூடாது. இருப்பினும், நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் மைலேஜை தெரிவிப்பது எமது கடமை. இந்த பைக் லிட்டருக்கு சராசரியாக 9 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Suzuki Motorcycles is now planning of locally assembling their superbikes in India.
Story first published: Friday, April 24, 2015, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X