விரைவில் இந்தியா வரும் 14 புதிய மோட்டார்சைக்கிள்கள் - முழு விவரங்கள்

By Ravichandran

அடுத்த ஆண்டு ஏராளமான மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் வெளியாக உள்ளன. அதில் எதிர்பார்க்க கூடிய 14 மோட்டார்சைக்கிள்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களுக்கு வலுவான சந்தை வாய்ப்புகள் உள்ளன. இதனால், ஏராளமான இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் போட்டி போட்டு கொண்டு, இந்தியாவில் களம் இறங்கியுள்ளனர். தற்போதைய நிலையில், ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டில், கேடிஎம் நிறுவன இரு சக்கர வாகனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்த நிலையில், இந்த செக்மென்ட்டை ஆக்கிரமிக்க பல புதிய மாடல்கள் வர இருக்கின்றன.

விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ள மோட்டார்சைக்கிள்கள் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடர்களில் காண்போம்.

1) யமஹா எம்டி-03;

1) யமஹா எம்டி-03;

யமஹா ஆர்3 மோட்டார்சைக்கிளுக்க்கு மாற்றாக ஸ்ட்ரீட் மோட்டார்சைக்கிளை தேடுபவர்களுக்கு, யமஹா எம்டி-03 சிறந்த தேர்வாக விளங்கும்.

யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிள், யமஹா ஆர்3 மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டுள்ளது. யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிளும், யமஹா ஆர்3-ல் உள்ளது போன்றே ட்வின் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள, யமஹா எம்டி-03 மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின் 42 பிஹெச்பி-யையும், 29.5 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை ; 3 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; கேடிஎம் ட்யூக் 390, பெனெல்லி டிஎன்டி 300, கவாஸாகி இசட்250

டிவிஎஸ்- பிஎம்டபுள்யூ ஜி301ஆர்;

டிவிஎஸ்- பிஎம்டபுள்யூ ஜி301ஆர்;

300 சிசி செக்மண்ட்டில், பிஎம்டபுள்யூ ஜி301ஆர் மிக முக்கியமான மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது. பிஎம்டபுள்யூ நிறுவனத்திற்கு மிக முக்கியமான வாகனமாக விளங்கும் இந்த பிஎம்டபுள்யூ ஜி301ஆர், டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கபடுகிறது.

இந்தியாவில், டிவிஎஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கபடும் இது, பிற இரு சக்கர வாகனங்களுக்கு சிறந்த போட்டியாக விளங்குகிறது. சிங்கிள்-சிலிண்டர் மோட்டார் மூலம் இயங்கும் இது, 34 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை ; 2.8 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; கேடிஎம் ட்யூக் 390, பெனெல்லி டிஎன்டி 300, கவாஸாகி இசட்250

3) ஹயோசங் ஜிடி300ஆர்;

3) ஹயோசங் ஜிடி300ஆர்;

ஹயோசங் ஜிடி300ஆர், 250 ஆர் மோட்டார்சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இது கடந்த வாரம் நடைபெற்ற இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில்

காட்சிபடுத்தபட்டது.

மேம்படுத்தபட்ட 275 சிசி, வி-ட்வின் இஞ்ஜின் கொண்ட இது, 28 பிசெஹ்பி-யையும், 23 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த ஹயோசங் ஜிடி300ஆர், தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹயோசங் 250 ஆர் மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக அமைய உள்ளது.

இது, 2016 மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

எதிர்பார்க்கபடும் விலை ; 4 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; கேடிஎம் ஆர்சி 390, யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3, கவாஸாகி நிஞ்ஜா 300, ஹோண்டா சிபிஆர்250ஆர்

Hyosung GT300R Image Source

4) பெனெல்லி டொர்னேடோ 302;

4) பெனெல்லி டொர்னேடோ 302;

பெனெல்லி டொர்னேடோ 302, தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள டிஎண்டி 300 மோட்டார்சைக்கிளின் முழுமையான பொலிவு கூட்டபட்ட மோட்டார்சைக்கிளாகும்.

டொர்னேடோ 302 புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம் கொண்டுள்ளது. டொர்னேடோ 302 முழுமையாக ஃபேரிங் செய்யபட்ட நிலையிலும், டிஎண்டி 300 மோட்டார்சைக்கிளை காட்டிலும் 16 கிலோகிராம் எடை குறைவாக உள்ளது.

டிஎண்டி 300 மோட்டார்சைக்கிளில் உள்ள இஞ்ஜின் 11,500 ஆர்பிஎம்களில் 35 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. ஆனால், டிஎண்டி 300 மோட்டார்சைக்கிளின் அதே இன்-லைன் ட்வின் இஞ்ஜினை கொண்டுள்ள டொர்னேடோ 302, 12,000 ஆர்பிஎம்களில் 35 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை ; 3 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; கேடிஎம் ஆர்சி 390, யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3, கவாஸாகி நிஞ்ஜா 300, ஹோண்டா சிபிஆர்250ஆர்

5) கேடிஎம் ஆர்சி 390;

5) கேடிஎம் ஆர்சி 390;

கேடிஎம் ஆர்சி 390 மோட்டார்சைக்கிளை ஸ்லிப்பர் கிளட்ச்சுடன் இந்தியாவில் அறிமுகம் செய்ய கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

ஆஸ்திரிய நாட்டு மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனமான கேடிஎம், ட்யூக் 390-யிலும் இந்த மாற்றத்தை செய்திருந்தது. மற்றொரு முக்கியமான விஷயம், கேடிஎம் அண்டர்பெல்லி எக்ஸ்ஹாஸ்ட்டை மாற்றி, டிரெடிஷனல் சைட் மவுண்டட் (பக்கவாட்டில் பொருத்தபட்டுள்ள) எக்ஸ்ஹாட்டை பொருத்தியுள்ளது. இது யூரோ 4 விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்யபட்ட மாற்றமாகும்.

தொடர்ந்து சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்ட் இஞ்ஜினையே கொண்டுள்ள கேடிஎம் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள், 43 பிஹெச்பி-யையும், 35 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை ; 2.15 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3, கவாஸாகி நிஞ்ஜா 300, ஹோண்டா சிபிஆர்250ஆர்

6) டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் சிக்ஸ்டி2;

6) டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் சிக்ஸ்டி2;

டுகாட்டி நிறுவனம் மூலம் வழங்கபடும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் சிக்ஸ்டி2, அழகான தோற்றம் கொண்டுள்ள மற்றும் மிக விலை குறைந்த மோட்டார்சைக்கிளாகும்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் சிக்ஸ்டி2, 399 சிசி, எல்-ட்வின் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 41 பிஹெச்பி-யையும், 35 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டுகாட்டி நிறுவனம், இந்த மோட்டார்சைக்கிளை விலை குறைவாக மாற்றும் நோக்கில், இன்வர்டட் ஃபிரண்ட் ஃபோர்க்குகளை விடுத்து, வழக்கமான நான் - அட்ஜஸ்டபல் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளை பொறுத்தியுள்ளது. இதில் ஸ்டாண்ட் அம்சமாக ஏபிஎஸ் பொறுத்தபட்டுள்ளது.

இது 2016-ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

எதிர்பார்க்கபடும் விலை ; 5 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; கேடிஎம் ட்யூக் 390, பெனெல்லி டிஎண்டி 300, கவாஸாகி இசட்250

7) ஹயோசங் அக்விலா300;

7) ஹயோசங் அக்விலா300;

ஹயோசங்கின் ஜிடி250ஆர் மேம்படுத்தபட்டு ஜிடி300ஆர் மோட்டார்சைக்கிளாக மாற்றபட்டுள்ளது போல், அக்விலா மோட்டார்சைக்கிளும் மேம்படுத்தபட்டுள்ளது.

ஜிடி300ஆர் மோட்டார்சைக்கிளில் உள்ள மோட்டார் தான் அக்விலா300 மோட்டார்சைக்கிளிலும் பொறுத்தபட்டுள்ளது. ஆனால், இதன் க்ரூசிங்-கில் சில மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள இதன் இஞ்ஜின், 27 பிஹெச்பி-யையும், 23.5 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ரைடிங்கை பாதுகாப்பானதாக மாற்ற, இதில் ஏபிஎஸ் வசதி பொறுத்தபட்டுள்ளது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, இது அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

எதிர்பார்க்கபடும் விலை ; 3.2 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; ராயல் என்ஃபீல்டு 350, பஜாஜ் அவெஞர் குரூஸ், யூஎம் ரெனெகேட் (விரைவில் வெளியாக உள்ள)

Hyosung Aquila 300 Image Source

8) யூஎம் ரெனெகேட் ஸ்போர்ட் எஸ்;

8) யூஎம் ரெனெகேட் ஸ்போர்ட் எஸ்;

ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகமாகும் யூஎம் ரெனெகேட் ஸ்போர்ட் எஸ், இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் ஷோவில் காட்சிபடுத்தபட்டது.

இந்த யூஎம் ரெனெகேட் ஸ்போர்ட் எஸ் மோட்டார்சைக்கிள், எண்ட்யூரன்ஸ் பிரேக்குகள், கேப்ரியல் சஸ்பென்ஷன், மற்றும் டிவிஎஸ் டையர்களுடன் காட்சிபடுத்தபட்டது.

இந்த யூஎம் ரெனெகேட் ஸ்போர்ட் எஸ், 278 சிசி சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 26 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை ; 2 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; ராயல் என்ஃபீல்டு 350, பஜாஜ் அவெஞர் குரூஸ்

UM Renegade Sport S Image Source

9) பெனெல்லி டிஆர்கே502;

9) பெனெல்லி டிஆர்கே502;

பெனெல்லி மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஏறக்குறைய தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் இந்தியாவில் வழங்குகின்றது.

அவ்வகையில், பெனெல்லி நிறுவனம் தங்களின் டிஆர்கே502 மோட்டார்சைக்கிளையும் 2016-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு கொண்டு வரும் என தெரிகிறது.

பெனெல்லி டிஆர்கே502 மோட்டார்சைக்கிள், 500 சிசி பேரலல்-ட்வின் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 47 பிஹெச்பி-யையும், 45 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பெனெல்லி டிஆர்கே502 அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான மோட்டார்சைக்கிளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சாகசங்களை விரும்பும் விரும்பிகளுக்கு இது சிறந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது.

எதிர்பார்க்கபடும் விலை ; 5 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் சிக்ஸ்டி2 (விரைவில் வெளியாக உள்ள), கவாஸாகி வெர்சிஸ் 650 (விரைவில் வெளியாக உள்ள)

10) ஹயோசங் ஜிடி650ஆர்;

10) ஹயோசங் ஜிடி650ஆர்;

மேம்படுத்தபட்ட ஜிடி300ஆர் மற்றும் அக்விலா போல், ஜிடி650ஆர் மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக மறுவடிவமைக்கபட்டுள்ளது.

ஜிடி650ஆர் டிசைன்களில் பல்வேறு மாற்றங்கள் இருந்தாலும், இஞ்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை. இதன், 647சிசி, வி-ட்வின் லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் 73 பிஹெச்பி-யையும், 55 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இது 6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை ; 5.5 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; பெனெல்லி டிஎன்டி600ஐ, ஹோண்டா சிபி600எஃப், கவாஸகி ஈஆர்-6என்

Hyosung GT650R Image Source

11) கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர்;

11) கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர்;

கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர் சில வாரங்களுக்கு முன்பு இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவின் போது, சில மேம்பாடுகளை பெற்றது.

மேம்பாடுகள் பெற்ற இந்த மோட்டார்சைக்கிளுக்கு விண்டர் எடிஷன் என்று பெயரிடபட்டது.

இந்த மோட்டார்சைக்கிளுக்கு, கவாஸாகி வேர்ல்ட் சூப்பர் பைக் டீம் மூலம் ஏராளமான உள்ளீடுகள் பெறபட்டது.

இந்த கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர், 998 சிசி, இன் - லைன், 4-சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது 197 பிஹெச்பி-யையும், 113 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை ; 11 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1, ஹோண்டா சிபிஆர்1000ஆர், பிஎம்டபுள்யூ எஸ்1000ஆர்ஆர், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000

12) யமஹா எம்டி-10;

12) யமஹா எம்டி-10;

ஒய்இசட்எஃப்-ஆர்1 மோட்டார்சைக்கிளின் நேக்கட், ஸ்ட்ரீட் பைக் வெர்ஷனாக கருதப்படும் எம்டி-10 மோட்டார்சைக்கிளை யமஹா நிறுவனம் வெளியிட்டது.

இதன் திறன்கள் குறித்து யமஹா நிறுவனம் எந்த விதமான தகவல்களையும் வெளியிடவில்லை. ஆனால், எம்டி-10 மோட்டார்சைக்கிள் ஆர்1 மாடலில் இருந்த அதே இன்-லைன், 4 -சிலிண்டர்கள கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.

ஆனால், சாலைகளில் (ஸ்ட்ரீட்-ப்ரெண்ட்லி எனப்படும்) இயக்கும் வகையில், இந்த எம்டி-10 மோட்டார்சைக்கிள் கொஞ்சம் டி-ட்யூன் செய்யபட்டுள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை ; 20 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; எம்வி அகஸ்டா புருடேல் 1090, டுகாட்டி மான்ஸ்டர் 1200எஸ், பிஎம்டபுள்யூ எஸ்1000ஆர்

13) டிரயம்ஃப் ஸ்பீட் ட்ரிபிள்;

13) டிரயம்ஃப் ஸ்பீட் ட்ரிபிள்;

ஸ்பீட் ட்ரிபிள் மோட்டார்சைக்கிளும் மறுவடிவம் செய்யபட்டுள்ளது. 2016 டிரயம்ஃப் ஸ்பீட் ட்ரிபிள், இதன் இஞ்ஜின் முதல் மோட்டார்சைக்கிளின் தோற்றம் உட்பட சுமார் 104 புதிய மேம்பாடுகளை பெற்றுள்ளது.

2016 டிரயம்ஃப் ஸ்பீட் ட்ரிபிள் ட்ரிபிள் மோட்டார்சைக்கிளின் திறன் குறித்து எந்த விதமான தகவல்களையும், பிரட்டனை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், இது தற்போது சந்தையில் கிடைக்கும் இந்த நிறுவனத்தின் மாடல்களை காட்டிலும் அதிக திறன்மிக்கதாக இருக்கும் என தெரிகிறது.

எதிர்பார்க்கபடும் விலை ; 12 லட்சம் ரூபாய்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; எம்வி அகஸ்டா புருடேல் 1090, பிஎம்டபுள்யூ எஸ்1000ஆர்

14) டுகாட்டி எக்ஸ்டியாவெல்;

14) டுகாட்டி எக்ஸ்டியாவெல்;

டுகாட்டி நிறுவனம் மட்டும் தான், இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவின் போது, தங்கள் நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிளின் போது, மேம்படுத்தி வெளியிட்டிருந்தனர்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் சிக்ஸ்டி2 காட்சிபடுத்தப்படும் போது தான், டுகாட்டி எக்ஸ்டியாவெல் மோட்டார்சைக்கிளும் காட்சிபடுத்தபட்டது. இந்த டுகாட்டி எக்ஸ்டியாவெல் பார்ப்பதற்கு மட்டும் ஆக்ரோஷம் நிறைந்ததாக இல்லை, தோற்றதிற்கு ஏற்றவாறு செயல்பாட்டிலும் ஆற்றல் நிறைந்ததாக உள்ளது.

1,262 சிசி இஞ்ஜின் கொண்ட டுகாட்டி எக்ஸ்டியாவெல், 156 பிஹெச்பி-யையும் 129 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கபடும் விலை ; 21 லட்சம்

போட்டி மோட்டார்சைக்கிள்கள் ; யமஹா வி-மேக்ஸ்

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ;

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ;

இந்த பட்டியலில் வழங்கப்பட்ட 14 புதிய மோட்டார்சைக்கிள்களும் சமீபத்தில் இத்தாலியின் மிலன் நகரில் நடந்த இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ என்பது இரு சக்கர வாகனங்களுக்காக பிரத்யேகமாக நடைபெறும் மோட்டார் ஷோ ஆகும்.

Most Read Articles

English summary
Upcoming Motorcycles In India and Top 14 Motorcycles To Lookout For are presented to you. Many Motorcycles were introduced and showcased in the EICMA Motorcycle Show. The Following are the list of Motorcycles, which Motorcycle Enthusiasts can lookout for in the near future.
Story first published: Saturday, November 28, 2015, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more