செயல்திறனில் அசத்தும் புதிய விக்டரி எம்பல்ஸ் டிடி எலக்ட்ரிக் பைக்!

By Saravana

போலரிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் விக்டரி மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய அத்தியாயத்தில் காலடி பதித்துள்ளது. விக்டரி எம்பல்ஸ் டிடி என்ற புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சாலையில் சட்ட ரீதியில் இயக்குவதற்கான அம்சங்கள் பொருந்திய உலகின் முதல் மோட்டார்சைக்கிள் மாடலாக இதனை விக்டரி நிறுவனம் குறிப்பிடுகிறது.

எலக்ட்ரிக் பைக்

எலக்ட்ரிக் பைக்

கடந்த ஜனவரியில் பிரம்மோ என்ற எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை போலரிஸ் கீழ் செயல்படும் விக்டரி மோட்டார்சைக்கிள் நிறுவனம் கையகப்படுத்தியது. பின்னர், அந்த நிறுவனத்தின் பிரம்மோ எம்பல்ஸ் ஆர் பைக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கியிருக்கிறது. பிரம்மோ எம்பல்ஸ் ஆர் பைக்கின் பல பாகங்களை இந்த புதிய விக்டரி எம்பல்ஸ் டிடி மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், ஏற்கனவே பிரம்மோ எம்பல்ஸ் ஆர் பைக்கை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் வசதியை விக்டரி டீலர்கள் மூலமாக பெறும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

மின் மோட்டார்

மின் மோட்டார்

விக்டரி எம்பல்ஸ் டிடி பைக்கில் ஏசி இன்டக்ஷன் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக இந்த மின் மோட்டார் 54 எச்பி பவரையும், 80.7 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

விக்டரி எம்பல்ஸ் டிடி பைக்கில் ஏசி இன்டக்ஷன் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக இந்த மின் மோட்டார் 54 எச்பி பவரையும், 80.7 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

விக்டரி எம்பல்ஸ் டிடி பைக்கில் ஏசி இன்டக்ஷன் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக இந்த மின் மோட்டார் 54 எச்பி பவரையும், 80.7 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

விக்டரி எம்பல்ஸ் டிடி பைக்கில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், பிரம்மோ எம்பல்ஸ் ஆர் பைக்கிற்கும் இதற்குமான வித்தியாசம் இதன் பேட்டரி மேம்படுத்தப்பட்டிருப்பதுதான். முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். இதுவே 2 ஸ்டேஜ் சார்ஜர் மூலமாக 4 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2 ஸ்டேஜ் சார்ஜர் கூடுதல் ஆக்சஸெரீயாக வழங்கப்படுகிறது.

 செயல்திறன்

செயல்திறன்

விக்டரி எம்பல்ஸ் டிடி பைக் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 104 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என்ற இருவிதமான ஓட்டுதல் நுட்பங்களில் இயக்க முடியும். ஈக்கோ என்ற டிரைவிங் ஆப்ஷனில் இயக்கும்போது செயல்திறன் சற்,று குறைவாக இருக்கும். ஆனால், கூடுதல் பயண தூரத்தை பேட்டரி சார்ஜ் வழங்கும். ஸ்போர்ட் மோடில் வைக்கும்போது பைக்கின் செயல்திறன் அதிகமிருக்கும். ஆனால், பேட்டரி சார்ஜ் வேகமாக குறையும்.

 விலை

விலை

அமெரிக்காவில் 19,999 டாலர் விலையில் இந்த புதிய விக்டரி எம்பல்ஸ் டிடி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது. வரவேற்பை பொறுத்து உலக அளவில் இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு கொண்டு செல்ல விக்டரி திட்டமிட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மதிப்பு உயர்ந்து, அதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படும்போது, இந்த பைக்கை போலரிஸ் நிறுவனம் அறிமுகம் செய்யலாம்.

Most Read Articles
English summary
Victory motorcycles has started a new chapter in the world of electric motorcycles with the road legal Victory Empulse TT. It is an electric street bike based on Brammo's Empulse R.
Story first published: Tuesday, August 4, 2015, 9:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X