ஜீரோ நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் மோட்டர்சைக்கிள் மாடல்கள் அறிமுகம்

By Ravichandran

ஜீரோ மோட்டர்சைக்கிள்ஸ் தங்களது 2016 எலக்ட்ரிக் மோட்டர்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஜீரோ மோட்டர்சைக்கிள்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் விரிவான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மேலும் இரண்டு புதிய எலக்ட்ரிக் மோட்டர்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

சூப்பர்மோட்டோ-இன்ஸ்பையர்ட் ஜீரோ எஃப்.எக்ஸ்.எஸ் மற்றும் டியூவல் ஸ்போர்ட் மாடல் ஜீரோ டிஎஸ்ஆர் என்ற பெயரில் இவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. புதிய மோட்டார் டிசைன்கள், விரைவான சார்ஜிங், மேம்பட்ட லித்தியம்-அயான் செல் பேட்டரிகள் கொண்டதாக இவை வந்துள்ளன.

செயல்திறன்

செயல்திறன்

இவற்றில் உள்ள ஐ.பி.எம் எனப்படும் புதிய இசட்-ஃபோர்ஸ் இண்டீரியர் பர்மெனன்ட் மேக்னட் வேகமாக குளிர்ந்து, அதிக திறனை வெளிபடுத்துகிறது.

இதனால், முன்பை காட்டிலும், தற்போது இந்த வாகனங்களின் திறன் அதிகரித்துள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

முழுமையான சார்ஜிங் செய்த பின், நெடுஞ்சாலைகளில் 157 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும். அதேபோல், நகருக்குள் பயணிக்கும் போது, 317 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.

மின் மோட்டார்

மின் மோட்டார்

ஜீரோ டிஎஸ்ஆர் மாடலில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 67 ஹார்ஸ்பவரையும், 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஜீரோ எஃப்.எக்ஸ்.எஸ் பைக்கின் மின் மோட்டார் அதிகபட்சமாக 27 ஹார்ஸ்பவர் மற்றும் 44 ஹார்ஸ்பவர் வெளிபடுத்த கூடிய வகையில், இரு விதமான ட்யூனிங் வசதிகளுடன் கிடைக்கின்றது. ஆனால், இரு விதமான ட்யூனிங் செய்யும் போதும், உச்சகட்ட டார்காக 95 என்எம் வெளிபடுத்தும்.

விலை

விலை

ஜீரோ எஃப்.எக்ஸ்.எஸ் எலக்ட்ரிக் பைக் 8,495 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 5.51 லட்ச ரூபாய்) விலையிலும், ஜீரோ டிஎஸ்ஆர் மாடல் எலக்ட்ரிக் பைக் 15,995 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 10.38 லட்ச ரூபாய்) விலையில் கிடைக்கின்றது.

ஜீரோ எலக்ட்ரிக் பைக் மாடல்கள்

ஜீரோ எலக்ட்ரிக் பைக் மாடல்கள்

இந்த இரு புதிய எலக்ட்ரிக் பைக்களின் அறிமுகத்துடன், ஜீரோ மோட்டர்சைக்கிள்ஸ் சார்பாக, ஜீரோ எஸ், ஜீரோ எஸ்ஆர், ஜீரோ டிஎஸ், ஜீரோ டிஎஸ்ஆர், ஜீரோ எஃப்.எக்ஸ், ஜீரோ எப்எக்ஸ்எஸ் உள்ளிட்ட 6 விதமான பைக்குகள் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Zero Motorcycles unveil their 2016 Electric Motorcycles Lineup. Supermoto-inspired Zero FXS and the dual sport model Zero DSR are the two new Electric Motorcycles from Zero Motorcycles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X