அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டது - முழு விவரம்

By Ravichandran

பியாஜியோ நிறுவனம் உற்பத்தி செய்யும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான அப்ரிலியா பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் இரு சக்கர வாகனம் ஆகும்.

இது, முன்னதாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் தொடர்பான கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்திய வாகன சந்தைகளில் அகஸ்ட் மாதத்தில், 15-ஆம் தேதிக்கு பின்னர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவில் காணப்படும் வேறு எந்த ஸ்கூட்டரை போன்ற தோற்றமும் கொண்டில்லை.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், வெஸ்பா ஸ்கூட்டரின் இஞ்ஜினே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. டிசைனை பொருத்த வரை, இந்த 2 ஸ்கூட்டர்களும் வித்தியாசமாக உள்ளன.

விவரக்குறிப்புகள்;

விவரக்குறிப்புகள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் விவரக்குறிப்புகள் பற்றி பல்வேறு விதமான யூகங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது இதன் விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 154.4 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 7,000 ஆர்பிஎம்களில் 11.3 பிஹெச்பியையும், 5,500 ஆர்பிஎம்களில் உச்சபட்சமாக 11.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் இஞ்ஜின், இந்தியாவில் உள்ள பிற ஸ்கூட்டர்களை போல், சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

டேங்க்;

டேங்க்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃ ப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபிரண்ட் ஃ போர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக் சச்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் ட்வின் பிஸ்டன் கேளிப்பர்கள் உடைய 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் 220 மில்லிமீட்டர் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 2 பக்கத்திலும் 120/70 செக்ஷன் 14 இஞ்ச் அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கான புக்கிங், ஏற்கனவே வெஸ்பா ஷோரூம்களில் துவங்கிவிட்டது.

5,000 ரூபாய் புக்கிங் கட்டணம் செலுத்தப்படும் பட்சத்தில், இதன் புக்கிங் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

காத்திருப்பு காலம்;

காத்திருப்பு காலம்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை புக்கிங் செய்த பின், சுமார் 45 முதல் 60 நாட்கள் காத்திருப்பு காலத்துடனேயே கிடைக்கும்.

டெலிவரி;

டெலிவரி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் டெலிவரி, செப்டம்பரின் முதல் வாரத்தில் இருந்து துவங்கும்.

போட்டி;

போட்டி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இதற்கு போட்டி வாகனம் போல் எதுவுமே இல்லை.

இதற்கு முக்கிய காரணம், இதை தவிர, இதன் இணை மாடலான வெஸ்பா ஸ்கூட்டர் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் 150 சிசி ஸ்கூட்டர் ஆகும்.

விலை;

விலை;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 65,000 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலைக்கு அறிமுகம் செய்யப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஷோரூமிற்கு வந்தடைந்தது - குறைந்த விலை புக்கிங்கிற்கு முந்துங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர் படங்கள் வெளியாகியது - இந்தியாவிற்கு வருமா?

அப்ரிலியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Aprilia SR 150 Scooter's Engine Specifications are revealed ahead of its Launch. SR 150 is much awaited scooter and Aprilia's cheapest offering to be launched in Indian market. SR 150 Scooter will be launched for an introductory price of Rs. 65,000 ex-showroom (Pune). Deliveries are expected to commence from the first week of September. To know more, check here...
Story first published: Wednesday, August 3, 2016, 19:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X