பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 20,000+ பஜாஜ் பல்சர் 150 என்எஸ் பைக்குகள் ஏற்றுமதி

By Ravichandran

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சுமார் 20,000+ பல்சர் 150 என்எஸ் பைக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ, உள்நாட்டு சந்தைகளையும், சர்வதேச சந்தைகளையும் மனதில் வைத்து கொண்டு ஏராளமான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. பல்சர் 150 என்எஸ் பைக், பல்வேறு சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது வரை, இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யபடவில்லை.

ஒட்டு மொத்தத்தில், பஜாஜ் பல்சர் 150 என்எஸ் பைக், உலகளாவிய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது வரை, சுமார் 20,000+ பல்சர் 150 என்எஸ் பைக்குகள் ஏற்றுமதி செய்யபட்டது. கொலம்பியா தான், இந்த மாடல் பைக்குகளுக்கு முக்கிய சந்தையாக விளங்குகிறது. இந்தோனேஷியாவிற்கும் இந்த பைக்குகள் கணிசமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பஜாஜ் பல்சர் 150 என்எஸ் பைக், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 149 சிசி, ட்வின்-ஸ்பார்க் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 16.8 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 13 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. பஜாஜ் பல்சர் 150 என்எஸ் பைக், தற்போது உள்ள பஜாஜ் 200 என்எஸ் பைக்கின் சிறிய வடிவமாக விளங்குகிறது.

bajaj-pulsar-150ns-20000-bikes-exported-overseas

பஜாஜ் பல்சர் 150 என்எஸ் பைக், இந்தியாவில் வரும் காலங்களில் விரைவில் அறிமுகம் செய்யபடும். இது அறிமுகம் செய்யபடும் போது, ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ், சுஸுகி ஜிக்ஸர், யமஹா எஃப்இசட்-எஸ், ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆகிய பைக்குகளுடம் போட்டிபோட வேண்டி இருக்கும்.

பஜாஜ் பல்சர் 150 என்எஸ் பைக், தற்போது இந்தியாவில் விற்கபடவில்லை. ஆனால் பல்சர் 150 டிடிஎஸ்-ஐ இன்னும் விற்பனையில் உள்ளது. புது புது மாடல்களின் அறிமுகங்கள் பழைய மாடல்களின் விற்பனையை பாதித்துவிடுமோ என்ற குழப்பத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்ளது. ஆகவே, பஜாஜ் பல்சர் 150 என்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யபட நெடுங்காலம் ஆகலாம் என தெரிகிறது.

Most Read Articles
English summary
Bajaj has exported 20,000 Units of Pulsar 150NS bikes. Pulsar 150NS is sold in several international markets. Colombia is largest market for Pulsar 150NS model and Indonesia too receives few units. Pulsar 150NS is not sold in India, as Pulsar 150 DTS-i is still on sale. It is unclear, if Bajaj would introduce Pulsar 150NS would be introduced in India soon. To know more, check here...
Story first published: Monday, March 21, 2016, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X