பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்

By Ravichandran

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பிரிமியம் கம்யூட்டர் செக்மண்ட்டில், நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது குரூஸர் செக்மண்ட்டில், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் மூலம் நுழைய திட்டமிட்டு வருகிறது.

குரூஸர் செக்மண்ட்டை பொருத்த வரை, அடிப்படையில் அதிகபடியான ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வாகனங்கள் தான் என்பது குறிப்பிடதக்கது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் குறித்த கூடுதல் டாப் 5 முக்கியமான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

விவரக்குறிப்புகள்;

விவரக்குறிப்புகள்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கும் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கிற்கு, கேடிஎம் பைக்கின் 373.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தபடுகிறது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் குரூஸிங் அம்சங்களை கவனித்துக் கொள்ளும் வகையில் இதன் இஞ்ஜின் ரீ-ட்யூன் செய்யபடும். பஜாஜ் பல்சர் சிஎஸ் 400 பைக்கின் இஞ்ஜின் 43 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 35 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் உச்சபட்சமாக மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. இது ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 25-28 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், ஏபிஎஸ் வசதியுடன் வருவதோடு மட்டுமல்லாமல், இதன் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரம் ஆகிய இரண்டிற்குமே டிஸ்க் பிரேக்குகள் பொருத்தபட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் முன் பக்கத்தில், தலைகீழாக உள்ள போர்க் சஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் மோனோ-ஷாக் சஸ்பென்ஷனும் வழங்கபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

நேக்கர் ஃபிரேம் கொண்ட பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், அதன் குடும்பத்தின் பிற பைக்குகளை காட்டிலும் கூடுதல் கட்டு மஸ்தாக காட்சி அளிக்கிறது.

பிரகாசமான ஹாலஜன் ஹெட்லேம்ப்களுடன் ஆன இதன் ஃப்யூவல் டேங்க், செதுக்கபட்டது போன்ற டிசைன் கொண்டுள்ளது. கேடிம் ட்யூக் பைக்கில் உள்ளது போன்ற மிட்ஷிப் எக்ஸ்ஹாஸ்ட் இந்த பல்சர் சிஎஸ்400 பைக்கிலும் காணப்படுகிறது.

இதன் பின்புறத்தில் உள்ள எல்இடி டெயில்லேம்ப்கள் மேற்புரமாக வளைந்த தோற்றம் கொண்டுள்ளது. பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் குரூஸர் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்காக கருதபடுவதால், இதன் ஹேண்டில் பார் வழக்கமான முறையில் அமைந்திருக்கும். இதன் ரைட் பொசிஷன் அம்சம் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்

பைக் ரைட் குறித்து அதிக தகவல்கள் வழங்கும் வகையில், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் டேங்க் மீது டிஜிட்டல் டிஸ்பிளே, மவுண்ட் செய்யபட்டிருக்கும்.

இதன் மூலம், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தங்களை டூரர் செக்மண்ட்டில் நிலைநிறுத்தி கொள்ள விரும்புவது தெளிவாகிறது. பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் ஸ்விட்ச் கியர்களும் ஒளியலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், இந்த மே அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் அறிமுகம் செய்யபடலாம். இதன் அறிமுக தேதிக்கு முன்னதாகவே, பஜாஜ் ஆட்டோ நிறுவன டீலர்கள், புக்கிங்கை துவக்கி விடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கும் பைக்குகளிலேயே, பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் தான் சிறந்த திறன்மிக்க மாடலாக இருக்கும். மேலும், இது தான், இந்நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கும்.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் சோதனை ஓட்டங்களின் போது எடுக்கபட்ட ஏராளமான ஸ்பை படங்கள் வெளியாகி கொண்டே வருகிறது. இதன் மூலம் இந்த பைக் விரைவில் வெளியாகலாம் என கட்டாயம் நம்பலாம்.

மேலும், இந்த பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின், 200 சிஎஸ் வடிவமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

விலை;

விலை;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கிற்கு, கேடிஎம் பைக்கின் 390 இஞ்ஜின் பொருத்தபட்டாலும், இதன் விலை கேடிஎம் பைக்கிற்கு நிகராக நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் இல்லை.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் விலை, 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே விற்கபட வாய்ப்புகள் உள்ளது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்த பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கை, கேடிஎம் பைக்கிற்கு நிகராக நிலை நிறுத்தி கொள்ள முடியாது. கேடிஎம் தயாரிப்புகள், அதற்கு என பிரத்யேகமான ரசிகர்களை கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

குரூஸர் செக்மண்ட்டானது, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளால் ஆளபட்டு வருகிறது.

சென்னையை மையமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் ஆதிக்கத்தை எந்த நிறுவனமும் அசைக்க கூட முடியவில்லை.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், குரூஸர் செக்மண்ட்டில் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் அறிமுகத்தின் மூலம், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கத்திற்கு சவால் வழங்க முயற்சிக்கிறது.

இதோடு மட்டுமல்லாமல், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், மஹிந்திரா மோஜோ பைக்குடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள் -1;

இதர தொடர்புடைய செய்திகள் -1;

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக, களமிறங்கும் பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிள்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் விரைவில் விற்பனைக்கு வருகிறது

பஜாஜ் சிஎஸ்400 பைக்கின் சோதனைகளின் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியீடு

இதர தொடர்புடைய செய்திகள் -2;

இதர தொடர்புடைய செய்திகள் -2;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், ஃபிப்ரவரி 1-ல் அறிமுகம்?

பஜாஜ் பல்சர் தொடர்புடைய செய்திகள்

பல்சர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Bajaj Auto being dominant force in premium commuter segment, wants to move to cruiser segment, which is currently dominated by Royal Enfield, with introduction of Bajaj Pulsar CS400. This is fitted with KTM's 373.2cc engine. It has top speed of 165km/h and gives mileage of 25-28 km/l. To know about top 5 things about Bajaj Pulsar CS 400 bike, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X