125 சிசி பைக்குகளில் சிறந்த மைலேஜ் வழங்கும் டாப் 8 பைக்குகள் - முழு விவரங்கள்

By Ravichandran

உங்கள் பைக், உங்களுக்கு எவ்வளவு மைலேஜ் வழங்குகிறது?

உங்கள் பைக்கில், நீங்கள் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 80 கிலோமீட்டர் மைலேஜ் பெற முடியுமா?

நீங்கள் எரிபொருளுக்கு செய்யும் செலவுக்கு அதிகமான மைலேஜ் வழங்கும் 125 சிசி பைக்குகள் ஏராளமாக உள்ளது. இதில் இந்தியாவில் சிறந்த மைலேஜ் வழங்கும் திறன் கொண்ட டாப் 8 பைக்குகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

8) ஹீரோ இக்னைட்டர்;

8) ஹீரோ இக்னைட்டர்;

ஹீரோ இக்னைட்டர் பைக், 125 சிசி பைக் ரகத்தில் வகைபடுத்தபட்டாலும், இது எக்ஸீக்யூட்டிவ் செக்மண்ட் பைக்கின் தோற்றம் கொண்டுள்ளது. மேலும், இது ஸ்போர்ட்டியான அம்சங்கள் உடையதாக உள்ளது.

ஹீரோ இக்னைட்டர் பைக், 124.7 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 8000 ஆர்பிஎம்களில் 11 பிஹெச்பியையும், 5000 ஆர்பிஎம்களில் உச்ச பட்சமாக 11 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை;

விலை;

ஹீரோ இக்னைட்டர் (டிரம் பிரேக்) - 60,500 ரூபாய்

ஹீரோ இக்னைட்டர் (டிஸ்க் பிரேக்) - 62,600 ரூபாய்

மைலேஜ்;

மைலேஜ்;

ஹீரோ இக்னைட்டர் பைக், ஒரு லிட்டருக்கு, 55 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

7) பஜாஜ் டிஸ்கவர்;

7) பஜாஜ் டிஸ்கவர்;

பஜாஜ் அட்டோ நிறுவனம் வழங்கும் டிஸ்கவர் பைக், சிறந்த கிராஃபிக்ஸ் மற்றும் சிறந்த வகையில் காட்சி அளிக்கும் அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் பைக், 124.6 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. இதனுடைய இஞ்ஜின் 8000 ஆர்பிஎம்களில் 13 பிஹெச்பியையும், 5500 ஆர்பிஎம்களில் அதிகபட்சமாக 10.8 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை;

விலை;

பஜாஜ் டிஸ்கவர் (டிரம் பிரேக்) - 51,003 ரூபாய்

பஜாஜ் டிஸ்கவர் (டிஸ்க் பிரேக்) - 53,001 ரூபாய்

மைலேஜ்;

மைலேஜ்;

பஜாஜ் டிஸ்கவர் பைக், ஒரு லிட்டருக்கு, 58 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

6) சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ்;

6) சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ்;

சுஸுகி நிறுவனம் வழங்கும் ஸ்லிங்ஷாட் ப்ளஸ் பைக், டிசைன் படி தெளிவாகவும், கூர்மையான தோற்றம் கொண்டதாக உள்ளது. மேலும். இது சிறந்த கிராஃபிக்ஸ் மற்றும் வண்ணங்களில் கிடைக்கிறது.

சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ், 124 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ் பைக்கின் இஞ்ஜின், 7,500 ஆர்பிஎம்களில் 8.5 பிஹெச்பியையும், 3500 ஆர்பிஎம்களில் 10 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை;

விலை;

சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ் (டிரம் பிரேக்) - 53,635 ரூபாய்

சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ் (டிஸ்க் பிரேக்) - 54,857 ரூபாய்

மைலேஜ்;

மைலேஜ்;

சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ், ஒரு லிட்டருக்கு, 59 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

5) ஹோண்டா சிபி ஷைன்;

5) ஹோண்டா சிபி ஷைன்;

ஹோண்டா சிபி ஷைன் பைக், ஈர்க்கும் வகையிலான வண்ண தேர்வுகளுடன் இந்த பிரிவில், சிறந்த தோற்றம் கொண்ட பைக்காக உள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் பைக் 124.7 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 7,500 ஆர்பிஎம்களில் 10.57 பிஹெச்பியையும், 5500 ஆர்பிஎம்களில் 10.30 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை;

விலை;

ஹோண்டா சிபி ஷைன் (டிரம் பிரேக்) - 55,559 ரூபாய்

ஹோண்டா சிபி ஷைன் (டிஸ்க் பிரேக்) - 57,885 ரூபாய்

மைலேஜ்;

மைலேஜ்;

ஹோண்டா சிபி ஷைன் பைக், ஒரு லிட்டருக்கு 65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

4) ஹீரோ கிளாமர் எஃப்1;

4) ஹீரோ கிளாமர் எஃப்1;

ஹீரோ கிளாமர் எஃப்1 பைக்கிற்கு, ஃப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் ஏற்கபட்டுள்ளதால், அது நல்ல திறனை வெளிபடுத்துகிறது.

ஹீரோ கிளாமர் எஃப்1 பைக், 124.8 சிசி இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது. ஹீரோ கிளாமர் எஃப்1 பைக்கின் இஞ்ஜின், 7000 ஆர்பிஎம்களில் 9 பிஹெச்பியையும், 4000 ஆர்பிஎம்களில் 10.35 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை;

விலை;

ஹீரோ கிளாமர் எஃப்1 பைக் மட்டும் தான், டிரம் பிரேக் இல்லாமல் வெரும் டிஸ்க் பிரேக் தேர்வு மட்டும் கொண்டுள்ளது.

ஹீரோ கிளாமர் எஃப்1 (டிஸ்க் பிரேக்) - 65,600 ரூபாய்

மைலேஜ்;

மைலேஜ்;

ஹீரோ கிளாமர் எஃப்1 பைக், ஒரு லிட்டருக்கு 72 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

3) டிவிஎஸ் ஃபீனிக்ஸ்;

3) டிவிஎஸ் ஃபீனிக்ஸ்;

டிவிஎஸ் ஃபீனிக்ஸ் பைக், மேம்பட்ட மற்றும் சிறந்த தோற்றங்களுடன் நன்கு திறன்பட செயல்படுகிறது.

டிவிஎஸ் ஃபீனிக்ஸ் பைக், 124.5 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 8000 ஆர்பிஎம்களில் 11 பிஹெச்பியையும், 5500 ஆர்பிஎம்களில் 10.8 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை;

விலை;

டிவிஎஸ் ஃபீனிக்ஸ் (டிரம் பிரேக்) - 52,369 ரூபாய்

டிவிஎஸ் ஃபீனிக்ஸ் (டிஸ்க் பிரேக்) - 54,392 ரூபாய்

மைலேஜ்;

மைலேஜ்;

டிவிஎஸ் ஃபீனிக்ஸ் பைக், ஒரு லிட்டருக்கு 77 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

2) யமஹா சல்யூட்டோ;

2) யமஹா சல்யூட்டோ;

இந்த டாப் 8 பைக்குகளின் பட்டியலில் உள்ள வேறு எந்த பைக்குகளையும் விட, யமஹா நிறுவனம் வழங்கும் சல்யூட்டோ பைக், நல்ல ஃபேரிங் மற்றும் டேங்க் ஃபிரேம் கொண்டுள்ளது. இது நல்ல ஸ்போர்ட்டியான தோற்றமும் கொண்டுள்ளது.

யமஹா சல்யூட்டோ பைக்கிற்கு, 125 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. இதனுடைய இஞ்ஜின், 7000 ஆர்பிஎம்களில் 8 பிஹெச்பியையும், 4500 ஆர்பிஎம்களில் உச்சபட்சமாக 10.1 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை;

விலை;

யமஹா சல்யூட்டோ பைக், டிரம் பிரேக் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது.

யமஹா சல்யூட்டோ (டிரம் பிரேக்) - 52,600 ரூபாய்

மைலேஜ்;

மைலேஜ்;

யமஹா சல்யூட்டோ பைக், ஒரு லிட்டருக்கு 78 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

1) ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர்

1) ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர்

ஸ்பிளென்டர் பைக்கிற்கு ஹீரோ என்ற வார்த்தை இணைக்கபட்டிருப்பதனால், இது இத்தனை ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்க வைத்திருக்கிறது. மேலும், வேறு எந்த பிராண்டும், ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக்கை இதன் முதன்மையான இடத்தில் இருந்து அசைக்க கூட முடியவில்லை.

ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர், 124.7 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக்கின் இஞ்ஜின், 7000 ஆர்பிஎம்களில் 9 பிஹெச்பியையும், 4000 ஆர்பிஎம்களில் உச்சபட்சமாக 10.35 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை;

விலை;

ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக், டிரம் பிரேக் தேர்வில் மட்டுமே வழங்கபடுகிறது.

ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் - 53,600 ரூபாய்

மைலேஜ்;

மைலேஜ்;

ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக், ஒரு லிட்டருக்கு 83 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
Could you get 80 km/l mileage in your Bike? There are lots of Bikes in 125cc Segment. To know more about the Top 8 Bikes in 125cc Segment, which gives maximum mileage for the fuel, filled by you, check here...
Story first published: Friday, April 29, 2016, 18:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X