Just In
- 10 min ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 51 min ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 2 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 3 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
Don't Miss!
- Finance லிங்கிடுன்-ல் 'open to work' பேட்ஜை பயன்படுத்தாதீங்க! ஹெச்ஆர் அதிகாரிகள் எச்சரிக்கை..!
- News சம்மர்லயும் சளி பிடிக்கிற அளவுக்கு நான் ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 ப்ரீ-புக்கிங் துவங்கியது
டுகாட்டி நிறுவனம், இந்தியாவில் தங்களின் ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்களின் ப்ரீ-புக்கிங்கை துவங்கியுள்ளது. இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை தயாரித்து வழங்குவதில் புகழ் பெற்றுள்ளது.
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்கள் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
புக்கிங்;
டுகாட்டி நிறுவனம் தயாரிக்கும் ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் காரணமாக, ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிளின் ப்ரீ-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.
புக்கிங் கட்டணம்;
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிளின் ப்ரீ-புக்கிங், 2 லட்சம் ரூபாய் என்ற டோக்கன் கட்டணத்துடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அறிமுகத்திற்கான காரணம்;
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான முக்கியமான காரணமே, இவற்றின் இஞ்ஜின்கள் தற்போது யூரோ 4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமாக உள்ளது.
முன்னதாக, இந்த 2 மாடல்களுமே யூரோ 3 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமான 821சிசி இஞ்ஜின்கள் கொண்டிருந்தன.
கிடைக்கும் வண்ணங்கள்;
டுகாட்டி ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள், ஸ்டார் வைத் சில்க் மற்றும் டுகாட்டி ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மோட்டார்சைக்கிள், டுகாட்டி ரெட் நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.
இஞ்ஜின்;
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்களுக்கு, டுகாட்டியின் 937 சிசி, எல்-ட்வின் லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இந்த இஞ்ஜின், 112 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 98 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
இவற்றில் பொருத்தபட்டுள்ள புதிய எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம், இந்த 2 மோட்டார்சைக்கிள்களையும் யூரோ 4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமானதாக மாற்றியுள்ளது.
மோட்கள்;
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்கள், ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என 3 டிரைவிங் மோட்களுடன் கிடைக்கிறது.
மேலும், இந்த 2 மோட்டார்சைக்கிள்களிலும் ரைட் பை திராட்டில் என்ற புதிய அம்சம் சேர்க்க்கபட்டுள்ளது.
டயர்கள்;
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மோட்டார்சைக்கிளுக்கு, பிரெல்லி ஸ்கார்பியன் ட்ரெயில் 2 டயர்கள் பொருத்தபட்டுள்ளது.
டுகாட்டி ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிளுக்கு, கூடுதல் டிராக்ஷன் மற்றும் ரைட் கண்ட்ரோல் அளிக்கும் பிரெல்லி டையாப்லோ ராஸ்ஸோ 2 டயர்கள் பொருத்தபட்டுள்ளது.
விலை;
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இவை தற்போது விற்பனையில் உள்ள மாடல்களை காட்டிலும் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதர தொடர்புடைய செய்திகள்;
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்
டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம்
டுகாட்டி தொடர்புடைய செய்திகள்
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
-
900 கி.மீ தூரத்தை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து செல்லலாம்! இந்தியாவின் வேகமான புல்லட் ரயில் இது தான்!
-
மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்