விரைவாக 2 சக்கர, 3 சக்கர வாகனங்களுக்கு பிஎஸ்-6 மாசு விதியை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு

By Ravichandran

2 சக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு என புதிய பாரத் ஸ்டேஜ் பிஎஸ்-6 விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டிற்குள், புதிய பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்) 6 விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. ஆரம்ப கட்டத்தில், இந்த நெறிமுறைகள், பயணியர்வாகனங்களுக்கும், கமர்ஷியல் வாகனங்களுக்கு மட்டுமே அரசு வழங்கி இருந்தது.

இந்திய வாகன சந்தைகளின் விற்பனை தொடர்பான புள்ளி விவரங்கள் படி, இந்தியாவில் விற்கபடும் வாகனங்களில் 80 சதவிகித வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாகவே உள்ளது. ஒவ்வொரு வருடமும் சராசரியாக, இந்தியாவில் 2 கோடி வாகனங்கள் விற்கபட்டு வருகிறது. இதில், சுமார் 1.6 கோடி வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாகவும், 5.3 லட்சம் வாகனங்கள் 3 சக்கர வாகனங்களாக உள்ளன.

government-implement-bs-vi-norms-specially-for-two-and-three-wheelers

புதிய பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்) நெறிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்பு, 2020-ஆம் ஆண்டிற்குள் தேவையான பிஎஸ் 6 நெறிமுறைகளுக்கு தகுந்த அளவில் எரிபொருள் கிடைக்குமா என்ற சந்தேகங்கள் நிலவி வந்தது.

இது குறித்து தெளிவு படுத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், பிஎஸ் 6 நெறிமுறைகளை நடைமுறை படுத்த தேவையான எரிபொருள் கட்டாயம் கிடைக்கும் என கூறியுள்ளது.

மேலும், மாசு வெளிப்பாடு தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க, நெடுஞ்சாலை துறை அமைச்சகம், கன ரக தொழிற்சாலை அமைச்சகம், சுற்றுசூழல் அமைச்சகம், மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஆகிய 4 அமைச்சகங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி கொண்ட்டிருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.

Most Read Articles
English summary
Government has planned to implement BS-VI Norms For 2 wheelers and 3 wheelers very soon. These norms are planned in order to implement Bharat Stage (BS) VI norms for two and three-wheelers by 2020. It is important to note that, almost 80 percent of the vehicles sold in India are two-wheelers. Hence, these new norms seems to be need of the hour.
Story first published: Tuesday, February 2, 2016, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X