2017-ல் ஹீரோ மோட்டோகார்ப், 10 பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டம்

By Ravichandran

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்தியாவின் மற்றும் உலகின் மிகப்பெரிய 2 வீலர் நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம், 2017 நிதி ஆண்டில், 15 புதிய பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த 15 புதிய அறிமுகங்கள், இந்திய வாகன சந்தைகளிலும், சர்வதேச சந்தைகளிலும் மேற்கொள்ளப்படும் அறிமுகங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த 2017-ஆம் நிதி ஆண்டில், ஹீரோவின் ஐ3எஸ் ஐடில்-ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் (i3S (idle-stop-start) technology) உடைய புதிய அச்சீவர், ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் மற்றும் பேஷன் ப்ரோ ஆகிய பைக்குகளும் அறிமுகம் செய்யப்படும்.

hero-motocorp-new-launches-2017-financial-year

இந்த வருங்கால அறிமுகங்கள் குறித்து ஹீரோ மோட்டோகார்ப்பின் சேர்மேன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் பவன் முஞ்சால் மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், "இந்திய வாகன சந்தைகளிலும், சர்வதேச சந்தைகளிலும், இந்த நிதியாண்டில் மொத்தம் 15 அறிமுகங்கள் காத்திருக்கின்றன. அவற்றில், 3 பைக்குகள், இந்திய வாகன சந்தைகளில், இந்த பண்டிகை காலங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்படும்.

இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், குஜராத்தில் உற்பத்தி ஆலை செயல்பாட்டிற்கு வந்துவிடும். ஹீரோ நிறுவனத்திற்காக அர்ஜென்டினாவில் ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர் நியமிக்கபட்டுள்ளதாகவும், அர்ஜென்டினாவில் ஹீரோ பிராண்ட், 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும். மேலும், நைஜீரீயாவிலும், ஹீரோ பிராண்டின் விற்பனை நடவடிக்கைகள் தொடங்கிவிடும்" என பவன் முஞ்சால் தெரிவித்தார்.

Most Read Articles

English summary
Hero MotoCorp, India's largest and World's largest two-wheeler manufacturer plans to launch 15 new products for Financial Year (FY) of 2017. These new products include those ones that will be launched in domestic and international markets. New launches lined up for FY 2017 include the new Achiever 150 motorcycle, the Hero Super Splendor, and the Passion PRO. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X