லோஹியா ஆட்டோவின் நரைன் இ-ரிக்ஷாக்கள் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

லோஹியா ஆட்டோ நிறுவனம், நரைன் எலக்ட்ரிக் பாஸஞ்ஜர் மற்றும் கார்கோ இ-ரிக்ஷாக்களை அறிமுகம் செய்துள்ளது.

நரைன் எலக்ட்ரிக் பாஸஞ்ஜர் மற்றும் கார்கோ ரிக்ஷாக்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

நரைன் ரிக்ஷா...

நரைன் ரிக்ஷா...

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் லோஹியா ஆட்டோ நிறுவனம், பயணியர் (பாஸஞ்ஜர்) இ-ரிக்ஷா, நரைன் என்ற பெயரிலும், கார்கோ இ-ரிக்ஷாவை நரைன் எல்சி என்ற பெயரிலும் அறிமுகம் செய்துள்ளது. வேறு சில மாடல்கள் உருவாக்கபட்டு வருகிறது.

இந்த நரைன் இ-ரிக்ஷாக்கள் இந்திய சாலைகளில் போக்குவரத்து மற்றும் அதன் ஸ்டைலை மாற்றும் வகையில் அமைக்கபட்டுள்ளது.

பயணியர் இ-ரிக்ஷா;

பயணியர் இ-ரிக்ஷா;

நரைன் இ-ரிக்ஷா, 1950 வாட் எலக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது. மேலும், உயர்திறன் மிக்க பேட்டரி கெப்பாசிட்டி கொண்டுள்ளது.

சிங்கிள் சார்ஜ் மூலம், நரைன் இ-ரிக்ஷா 100 கிலோமீட்டர் செல்லும் திறன் உடையதாக உள்ளது. உச்சபட்சமாக, இது 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

நரைன் இ-ரிக்ஷா, 2040 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் உடையதாக உள்ளது.

இந்த இ-ரிக்ஷா-வில் 4 பயணியர்கள் சவுகரியமாக அமர்ந்து செல்ல முடியும். நல்ல இட வசதி கொண்ட இது, அதிக அளவிலான லெக்ரூம் வசதியும் கொண்டுள்ளது.

கார்கோ இ-ரிக்ஷா;

கார்கோ இ-ரிக்ஷா;

நரைன் எல்சி என்று அழைக்கப்படும் கார்கோ இ-ரிக்ஷா, சிலிண்டர், கார்டன் பாக்ஸ்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்லகூடியதாக இருக்கும். இதை, ஐஸ் கிரீம் கடை போன்றும் மாற்றி கொள்ளலாம்.

நரைன் எல்சி கார்கோ இ-ரிக்ஷா, நரைன் இ-ரிக்ஷா போன்றே ஒரே மாதிரியான தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஸ்போக்குகளால் ஆன இந்த நரைன் எல்சி கார்கோ இ-ரிக்ஷாவில், சமமான எடை பகிர்மானத்தை உறுதி செய்து, அனைத்து நிலப்பரப்புகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த நரைன் எல்சி கார்கோ இ-ரிக்ஷா, மாசு உமிழ்வை வெகுவாக குறைத்துவிடும். அதுவும் மாசு உமிழ்வு அதிகம் உள்ள நகரங்களுக்கு, இது மிகவும் உபயோகமானதாக உள்ளது.

இந்த நரைன் இ-ரிக்ஷாவில் இருந்து சத்தம் பிரச்னை இல்லை, மாசு உமிழ்வு பிரச்னை இல்லை. இதற்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் அவசியம் இல்லை.

மேலும், இந்த இ-ரிக்ஷா, 2 வருட வாரண்டியுடன் வெளியாகிறது.

சிஇஓ கருத்து;

சிஇஓ கருத்து;

லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான ஆயுஷ் லோஹியா, இந்த இ-ரிக்ஷா வாகனங்களின் அறிமுகம் குறித்து மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

இது குறித்து மேலும் கூறுகையில், நரைன் இ-ரிக்ஷா மூலம், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் எலக்ட்ரிக் வெஹிகிள் புரட்சி கொண்டு வருவதே நோக்கமாக உள்ளது. இதற்காக, நாங்கள் டீலர்ஷிப் (ஷோரூம்) நெட்வர்க்கை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

சிக்கலற்ற வாகன உரிமை கொண்டாட்டத்திற்கும், இனிமையான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் நரைன் இ-ரிக்ஷா 2-வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. லோஹியா ஆட்டோ மட்டும் தான், எலக்ட்ரிக் இ-ரிக்ஷா மீது 2-வருட வாரண்டி வழங்கும் ஒரே நிறுவனமாக உள்ளது" என ஆயுஷ் லோஹியா தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Lohia Auto Industries has launched electric rickshaws in India, which is called by name 'Narain'. Lohia Auto is bringing two models to start with - Passenger Electric rickshaws is called as Narain and Cargo E-Rickshaws is called as Narain LC. Narain e-rickshaws are powered by 1950 watt electric motor. On single charge, passenger e-rickshaw can run for 100 kms. To know more, check here...
Story first published: Wednesday, June 15, 2016, 21:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X