மிச்செலின் இந்தியா நிறுவனத்தின், உயர் செயல்திறன் கொண்ட சைக்கிள் டயர்கள் அறிமுகம்

By Ravichandran

மிச்செலின் இந்தியா நிறுவனம், உயர் செயல்திறன் (ஹை-பெர்ஃபார்மன்ஸ்) கொண்ட சைக்கிள் டயர்களை அறிமுகம் செய்கின்றனர்.

சமீப காலமாக, மிச்செலின் இந்தியா ஏராளமான பிரிமியம் டயர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள், மிச்செலின் நிறுவனம் இந்திய சந்தைகளின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த டயர்கள் தயாரிக்கும் நிறுவனம், இந்தியர்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட சைக்கிள் டயர்களை வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, ரோட் ரேஞ்ச், மவுண்டெயின் பைக் ரேஞ்ச் மற்றும் சிட்டி டிரெக்கிங் ரேஞ்ச் ஆகிய வகைகளில் சைக்கிள் டயர்கள் வழங்கப்படுகிறது. இந்த மிச்செலின் டயர்கள் பெரும்பாலான சைக்கிள் கடைகளிலும், www.trailsofindia.com என்ற இணையதளத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

michelin-india-introduces-high-performance-bicycle-tyres-in-india

மிச்செலின் நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட சைக்கிள் டயர்கள் மற்றும் ட்யூப்கள், 690 ரூபாய் முதல் 2,699 ரூபாய் + வரிகள் என்ற விலைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ரோட் ரேஞ்ச் வகையில், மிச்செலின் ப்ரோ4 சர்வீஸ் கோர்ஸ், மிச்செலின் ப்ரோ4 எண்ட்யூரன்ஸ், மிச்செலின் ப்ரோ4 காம்ப் சர்வீஸ் கோர்ஸ், மிச்செலின் லித்தியான் 2, மிச்செலின் டைனமிக் ஸ்போர்ட் ரோட் ஆகிய டயர்கள் கிடைக்கிறது.

மவுண்டெயின் பைக் ரேஞ்ச் வகையில், மிச்செலின் வைல்ட் கிரிப்'ஆர் (Wild Grip'R) மற்றும் வைல்ட் ராக்க'ர் (Wild Rock'r) ஆகிய டயர்கள் கிடைக்கிறது.

michelin-india-introduces-high-performance-bicycle-tyres-for-india

சிட்டி டிரெக்கிங் ரேஞ்ச் வகையில், மிச்செலின் ப்ரோடெக் மேக்ஸ் மற்றும் மிச்செலின் ப்ரோடெக் கிராஸ் ஆகிய டயர்கள் கிடைக்கிறது.

பிரிமியம் சைக்கிள் சந்தை, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த செக்மண்ட் இந்தியாவில் சுமார் 25% முதல் 30% வரை வளர்ந்து வருகிறது. இந்தியர்கள் சைக்கிள்களை இயக்குவதன் லாபங்களை மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். அதிலும், குறிப்பிட்ட சதவிகிதத்தினர், அட்வென்சர் (சாகச) நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

Most Read Articles

English summary
Michelin India introduces High-Performance premium Bicycle Tyres in Indian Market. A road range, mountain bike range and city trekking range of bicycle tyres are offered. Michelin bicycle tyres are available at bicycle stores and through www.trailsofindia.com/. Tyres and Tubes from Michelin ranges between Rs. 690 to Rs. 2,699, plus taxes. To know more, check here...
Story first published: Wednesday, March 30, 2016, 19:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X