இந்தியாவில் சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் விற்பனை உயர்ந்தது - ஏன் தெரியுமா?

By Ravichandran

இந்தியாவில் சுஸுகி நிறுவனம் தயாரித்து வழங்கும் ஹயபுசா சூப்பர் பைக்கின் விற்பனை உயர்ந்துள்ளது.

ஹயபுசா சூப்பர் பைக்கின் உயர்ந்து வரும் விற்பனை குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹயபுசா சூப்பர் பைக்...

ஹயபுசா சூப்பர் பைக்...

ஹயபுசா சூப்பர் பைக், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் சுஸுகி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் இரு சக்கர வாகனம் ஆகும்.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக், ஒரு கட்டத்தில், சட்டப்படி இயக்கக்கூடிய உலகிலேயே மிகவும் வேகமான உற்பத்தி நிலை மோட்டார்சைக்கிளாக இருந்தது.

விற்கப்பட்ட விதம்;

விற்கப்பட்ட விதம்;

முன்னதாக, சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக், சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட வடிவிலேயே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விற்கப்பட்ட விலை;

விற்கப்பட்ட விலை;

இந்நிலையில், சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக், 16 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்பட்டது.

இந்தியாவில் அசெம்பிளி;

இந்தியாவில் அசெம்பிளி;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் சுஸுகி நிறுவனம், ஹயபுசா சூப்பர் பைக்கை இந்தியாவிலேயே அசெம்பிளி செய்ய துவங்கினர்.

செமி-நாக் டவுன் ஸ்டேடஸ் (semi-knockdown status) எனப்படும் பாதி கட்டி முடிக்கப்பட்ட வடிவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை குறைப்பு;

விலை குறைப்பு;

இதனால், ஹயபுசா சூப்பர் பைக்கின் விலை 16 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் குறைந்து, தற்போது 13.57 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஈர்க்கும் வகையிலான விலையில் விற்கப்பட்டு வருகிறது.

விற்பனையில் முன்னேற்றம்;

விற்பனையில் முன்னேற்றம்;

இந்தியாவில், சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக், குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

2016 ஃபிப்ரவரி மாதத்தில் இருந்து, ஹயபுசா சூப்பர் பைக்கின் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார், 150% என்ற அளவில் விற்பனை கூடியுள்ளது.

விற்பனை விவரம்;

விற்பனை விவரம்;

இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 18 சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கும், ஏப்ரல் மாதத்தில் 13 சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கும், மே மாதத்தில் 17 சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கும், ஜூன் மாதத்தில் 15 சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கும் விற்பனையானதாக சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது.

போட்டி;

போட்டி;

இந்திய வாகன சந்தைகளை பொருத்த வரை, சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கிற்கு, கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-14ஆர் ஹைப்பர் பைக் தான் போட்டியாக விளங்குகிறது.

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-14ஆர் ஹைப்பர் பைக், 17.90 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கும், கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-14ஆர் ஹைப்பர் பைக்கும் சட்டப்படி இயக்கக்கூடிய உலகிலேயே மிகவும் வேகமான உற்பத்தி நிலை மோட்டார்சைக்கிள் பட்டத்திற்கு போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியாவிலேயே ஹயபுசா சூப்பர் பைக்கை அசெம்பிள் செய்ய சுஸுகி முடிவு

ஹயபுசா தொடர்புடைய செய்திகள்

கவாஸாகி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Suzuki Hayabusa Witnesses Boost in Sales, Due to Assembly in India. Suzuki Hayabusa was once fastest road legal production motorcycle. Hayabusa was imported into India as Completely Built Unit (CBU) and bore price of Rs. 16 lakh ex-showroom (Delhi). Owing to Hayabusa facing semi-knockdown status, this bike witnessed price reduction of Rs. 2.5 lakh and Sales also increased heavily...
Story first published: Friday, July 29, 2016, 19:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X