இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

By Ravichandran

2 சக்கர வாகனங்களின் சந்தை இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றதாக உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் உள்ள அனைத்து வாகனங்களும் ஏற்கனவே 2 சக்கர வாகனங்களை வழங்கி கொண்டிருக்கின்றனர் அல்லது வழங்க திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர். இந்திய ஏராளமான வாகனங்கள் கிடைப்பதால், இங்கு கிடைக்கும் வாகனங்களின் தேர்வுகளால் மக்கள் மனம் குழம்புவது சகஜமான விஷயமாகும்.

இந்தியாவின் டாப்-10, 2 சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களின் பட்டியல் வழங்கபடுகிறது. இந்தியாவில் வாகனங்களை அறிமுகம் செய்யும் அல்லது அது குறித்த விளம்பர நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கபட்டுள்ளது. ஆச்சர்யமூட்டும் வகையில் இந்த பட்டியலில் சில சர்வதேச வாகன உற்பத்தி நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.

டாப்-10, 2 சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

10) ஹார்லி-டேவிட்சன்;

10) ஹார்லி-டேவிட்சன்;

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் வழங்கும் 2 சக்கர வாகனங்களை தயாரிக்க ஹரியானாவின் குர்கான் பகுதியில் உற்பத்தி ஆலை உள்ளது.

தற்போது, இந்தியாவில் விற்பனையில் உள்ள ஸ்ட்ரீட் 750 க்ரூஸர், 2011-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தயாரிக்கபட்டு விற்பனை செய்யபடுகிறது.

இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் 2 சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லி-டேவிட்சன், ஸ்ட்ரீட் 500 பைக்கையும் இந்தியாவில் உற்பத்தி செய்து, இங்கிருந்து பல்வேறு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

09) மஹிந்திரா;

09) மஹிந்திரா;

மோட்டோ ஜிபி தடத்தில் இடம் பிடித்த, இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஒரே நிறுவனம் மஹிந்திரா மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.

இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

சமீபத்தில் தான் மஹிந்திரா நிறுவனம், தங்களின் முதல் 300 சிசி பைக்கான மஹிந்திரா மோஜோவை அறிமுகம் செய்தது.

இதோடு மட்டுமல்லாமல், மஹிந்திரா நிறுவனம், பியூஜோ நிறுவனத்தின் 2 சக்கர வாகன பிரிவில் பெரிய பங்குதாரராக உள்ளது.

8) கேடிஎம்;

8) கேடிஎம்;

ஆஸ்திரியாவை மையமாக கொண்டு இயங்கும் கேடிஎம், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மூலம் இந்தியாவிற்குள் பிரவேசம் செய்தது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்த கேடிஎம் நிறுவனத்திற்கு டியூக் மற்றும் ஆர்சி ரேஞ்ச் பைக்குகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய உதவி செய்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கபடும் இந்த பைக்குகள் ஐரோப்பிய மற்றும் பிற வாகன சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது.

இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

ரேஸ்களுக்கு உபயோகிக்கபடும் மோட்டார்சைக்கிள்களை இந்திய வாகன சந்தைகளில், நியாயமான விலையில் வழங்குவதே கேடிஎம் நிறுவனத்தின் தாரக மந்திரமாக உள்ளது.

7) சுஸுகி;

7) சுஸுகி;

சுஸுகி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு ஆரம்ப கட்ட விற்பனை வெற்றிகரமாக அமையவில்லை.

ஜிக்ஸர் ஸ்ட்ரீட் ஃபைட்டர் மற்றும் முழுவதும் பொலிவு கூட்டபட்ட ஜிக்ஸர் எஸ்எஃப் பைக் மற்றும் பல்வேறு புதிய ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யபட்டதால், சுஸுகி நிறுவனத்தின் விற்பனை அளவுகள் கூடியுள்ளது.

இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் 2 சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுஸுகி, இந்தியாவில் இன்னும் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

6) யமஹா;

6) யமஹா;

யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான மாடல்களை வழங்கி வந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்எக்ஸ் மற்றும் ஆர்டி ரேஞ்ச் 2-ஸ்ட்ரோக் பைக்குகள் வழங்கபட்டு வந்தது.

இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

இதையடுத்து, கொஞ்ச காலமாக அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இல்லாத நிலை இருந்தது.

ஒய்இசட்எஃப்-ஆர்15 மற்றும் எஃப்இசட் ரேஞ்ச் பைக்குகளின் அறிமுகத்தினால், யமஹா நிறுவனம் முன்பு கொண்டிருந்த சந்தை மதிப்பை பெற்றுவிட்டது.

5) ராயல் என்பீல்டு;

5) ராயல் என்பீல்டு;

ராயல் என்பீல்டு நிறுவனம், கிளாசிக் மற்றும் ரெட்ரோ ஸ்டைல் கொண்ட குரூஸர் பைக்குகளை வழங்கி பெயர் பெற்ற நிறுவனம் ஆகும்.

தி ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் தான், ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும் முதல் அட்வென்ச்சர் பைக் ஆகும்.

இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

தற்போதைய நிலையில், இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் 2 சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு, உலகின் அனைத்து பகுதிகளிலும் தங்களின் சந்தைகள் பரப்ப முயற்சித்து வருகின்றனர்.

04) டிவிஎஸ் மோட்டார்ஸ்;

04) டிவிஎஸ் மோட்டார்ஸ்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், வழக்கமான மற்றும் பெர்ஃபார்மன்ஸ் பைக்குகளை வழங்குவதனால், இந்தியாவில் புகழ்மிக்க பிராண்டாக மாறியுள்ளது.

சமீபத்தில், புதிய இஞ்ஜின் மற்றும் டிசைன் மொழி வழங்கி, தங்களின் அப்பாச்சி மோட்டார்சைக்கிள் ரேஞ்ச் மோட்டார்சைக்கிளை, டிவிஎஸ் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.

இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

தமிழ்நாட்டின் சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய 2 சக்கர மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளனர்.

03) பஜாஜ்;

03) பஜாஜ்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தற்போது கவாஸாகி மற்றும் கேடிஎம் உள்ளிட்ட 2 சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அசெம்பிலிங் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளில் உதவி புரிந்து வருகின்றனர்.

இதோடு மட்டுமல்லாமல், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் தனிப்பட்ட முறையில் இந்திய வாகன சந்தைகளுக்கும், சர்வதேச வாகன சந்தைகளுக்கும் ஏராளமான பைக்குகளை வழங்கி வருகின்றனர்.

இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

வாடிக்கையாளர்கள் எந்த மாதிரியான வாகனங்களை வாங்க விரும்புவார்கள், அவற்றை எந்த விலையில் வாங்க விரும்புவார்கள் என்று நன்கு புரிந்து வைத்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு வாகனங்களை வழங்கி வருகிறது.

02) ஹீரோ மோட்டோகார்ப்;

02) ஹீரோ மோட்டோகார்ப்;

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் 2 சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், இந்திய வாகன சந்தைகளில் மிகப்பெரிய மற்றும் மிக வலுவான போர்ட்ஃபோலியோவை கொண்டுள்ளது.

இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

ஹீரோ மோட்டோகார்ப், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் சரியான கலவையை கொண்டுள்ளனர்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், தங்களின் தயாரிப்புகளை பல்வேறு சர்வதேச சந்தைகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

01) ஹோண்டா;

01) ஹோண்டா;

ஹோண்டா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்கள் ஆரம்பகட்டத்தில் கூட்டாளிகளாக இருந்தனர். எனினும், இந்த ஒற்றுமை நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இந்த ஹோண்டா நிறுவனம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இருந்த கூட்டணியை துண்டித்து கொண்டு தனியாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவில் டாப்-10 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் - முழு விவரங்கள்

ஹோண்டா நிறுவனம், தற்போதைய நிலையில், லிட்டர் கிளாஸ் மோட்டார்சைக்கிள்கள் (1,000 சிசி) முதல் முற்றிலும் புதுமையான தயாரிப்புகளான ஹோண்டா நவி உள்ளிட்ட வாகனங்களையும் அறிமுகம் செய்து வருகின்றனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

150சிசி மார்க்கெட்டில் அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக் மாடல்கள்!

எம் நெஞ்சை கொள்ளை கொண்ட யமஹா ஆர்எக்ஸ்100 பைக்!

போக்குவரத்து நெரிசலை குறைக்க மடக்கக்கூடிய சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
The Two-wheeler market is very popular segment in Indian market. Almost every manufacturer already have their presence or planning to establish presence in two-wheeler segment. Here is the list of Top 10 Leading Two-Wheeler Manufacturers In India During 2016. To know more about Top 10 Two-Wheeler Manufacturers and their offerings, check here...
Story first published: Tuesday, April 26, 2016, 12:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more