டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு... முன்பதிவு குவிகிறது!

By Saravana Rajan

கடந்த 30ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் மாடலான டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவு குவிந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் மட்டும் 1,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த புதிய மின்சார பைக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, இந்திய மின்சார வாகன மார்க்கெட்டை புதிய கோணத்திற்கு திருப்பியிருக்கிறது. இந்த புதிய பைக்கிற்கு இவ்வளவு முன்பதிவு குவிந்து வருவதற்கு காரணமான இதன் சிறப்பம்சங்களை இப்போது தொடர்ந்து படிக்கலாம்.

டிசைன்

டிசைன்

மிரட்டலான இதன் டிசைன் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹெட்லைட், முறுக்கேறிய உடல் அமைப்பு, வால்பகுதி என அனைத்தும் ஸ்போர்ட்ஸ் ரக பைக் போன்று மிக கவர்ச்சியாக இருக்கிறது. டிசைன் மட்டும் இருந்தால் போதுமா?

பிக்கப்

பிக்கப்

இந்த பைக்கில் இருக்கும் மின்மோட்டார் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என்பதால், ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் உள்ள பல பைக் மாடல்களை இந்த மின்சார பைக் தூக்கியடிக்கும் என்பதும் அடுத்த காரணம். மணிக்கு 100 கிமீ வேகம் வரை சர்வசாதாரணமாக செல்லும்.

 விலை

விலை

இந்த பைக்கின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் விலை. ஆம், ரூ.1.25 லட்சம் என்ற மிக சவாலான விலையில் மிக சக்திவாய்ந்த எலக்ட்ரிக் பைக் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை ஒப்பிடும்போது இது மிக சவாலான விலையே.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு!

செயல்திறனிலும், தோற்றத்தில் மட்டுமல்ல, வசதிகளிலும் அசத்துகிறது. இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் 4.3 இன்ச் டிஎஃப்டி திரை மூலமாக பல்வேறு தகவல்களை பெற முடியும். ஏன் கார் போன்று நேவிகேஷன் தகவல்களை கூட துல்லியமாக பெற முடியும்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு!

அதுமட்டுமில்லை, TIROS (Tork Intuitive Response Operating System) என்ற சாப்ட்வேரின் மூலமாக, இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை டார்க் நிறுவனத்தின் சர்வர் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலமாக, அவ்வப்போது வெளியிடப்படும் நவீன தொழில்நுட்பங்களை இந்த பைக்கில் பெற முடியும்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு!

டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக பைக்கின் வேகம், பேட்டரியிலிருந்து மின்சாரம் செலவிடப்படும் அளவு, இருக்கும் சார்ஜில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் போன்ற விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். விருப்பத்தின்பேரில் டிரைவிங் மோடுகளை தேர்வு செய்து மின் மோட்டாரின் செயல்திறனை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு!

இந்த மின்சார பைக்கில் ஐபி67 சான்று பெற்ற லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக இரண்டு மணிநேரத்தில் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகும். இதில் உள்ள குயிக் சார்ஜ் என்ற வசதி மூலமாக ஒருமணிநேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு!

வெறும் 130 கிலோ மட்டுமே எடை கொண்டிருப்பதால், கையாள்வதும் இயக்குவதும் எளிதாக இருக்கும். இதனால், மிக குறைவான எரிபொருள் செலவு கொண்ட பைக்காகவும் இருக்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு!

பைக் திருடுபோவது தவிர்க்கும் ஆன்ட்டி தெஃப்ட் பாதுகாப்பு தொழில்நுட்பம், அப்படியே திருடு போனாலும் பைக் எங்குள்ளது என்பதை கண்டறியும் வசதி, இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் ஆப்ஷனலாக கொடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு!

மொத்தத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த ஸ்மார்ட் பைக்காகவும், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்களுடன், மிக சரியான விலை கொண்ட பைக் மாடலாக பெட்ரோல் பைக்குகளை விஞ்சி நிற்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு!

பெங்களூர், புனே நகரங்களில் முதலில் விற்பனைக்கு வந்துள்ளது. டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு!

கடந்த 7 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சி மற்றும் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் ஐந்தாவதாக தயாரிக்கப்பட்ட டார்க் டி6எக்ஸ் பைக்தான் உற்பத்தி நிலையை எட்டியிருக்கிறது. மராட்டிய மாநிலம், புனே அருகில் சகன் என்ற இடத்தில் உள்ள டார்க் நிறுவனத்தின் ஆலையில் இந்த பைக் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஆரவார வரவேற்பு!

ஆண்டுக்கு 5,000 முதல் 10,000 பைக்குகள் என்ற இலக்குடன் முதல் மூன்று ஆண்டுகளுக்கு விற்பனையை நடத்துவதற்கு டார்க் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. புனே, லோனவாலா உள்ளிட்ட இடங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைத்துள்ளது டார்க். அடுத்து 100 இடங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Tork T6X recieves over 1000 pre-bookings First 24 Hours. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X