இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான டி6எக்ஸ் அறிமுகம்

By Ravichandran

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான டார்க், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் உபயோகம், நாளுக்குநாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. மாசு உமிழ்வு பிரச்னை மிகவும் குறைவாக இருப்பதனாலும் இவற்றின் பிரயோகம் வேகமாக அதிகரிக்கிறது. இந்தியாவிலும் இவற்றின் பிரயோகம் அதிகமாகி கொண்டிருக்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளின் அறிமுகம் தொடர்புடைய தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

டி6எக்ஸ்;

டி6எக்ஸ்;

பூனேவை மையமாக கொண்டு இயங்கும் டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய மோட்டார்சைக்கிள், டி6எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. டி6எக்ஸ், ரேசிங் தன்மைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், இது பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கும். டி6எக்ஸ், டூ வீலர்கள் செக்மென்ட்டில் பல்வேறு முதல் முறையாக சேர்க்கப்பட்டிருக்கும் பிரத்யேக அம்சங்கள் கொண்டிருக்கும்.

நிறுவனங்களின் பங்களிப்பு;

நிறுவனங்களின் பங்களிப்பு;

எலக்ட்ரிக் டூ-வீலர்களின் வளர்ச்சிக்கு ஸ்டார்ட்டப்ஸ் எனப்படும் துவக்க நிலை நிறுவனங்களான பெங்களூருவின் ஏதர் எனர்ஜி, கோயம்புத்தூரை மையமாக கொண்டு இயங்கும் ஆம்பயர், ஐஐடி கரக்பூரை சேர்ந்த ஆரோ ரோபோட்டிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன.

அறிமுகம்;

அறிமுகம்;

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிள் அறிமுகம், பெங்களூரூவில் நடைபெறும் டெக்ஸ்பார்க்ஸ் 2016 (TechSparks 2016) நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

பேட்டரி;

பேட்டரி;

டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளில் பிரஷ்லஸ் டிசி 6kw லித்தியம் இயான் பேட்டரி (Brushless DC 6kw lithium-ion battery) பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகப்படியாக 27 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகிறது.

ரேஞ்ச்;

ரேஞ்ச்;

டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளை ஒரு முறை 80% வரை சார்ஜ் செய்தாலே, 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம்.

அதிகப்பட்ச வேகம்;

அதிகப்பட்ச வேகம்;

டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளில், ஒரு மணி நேரத்திற்கு அதிகப்படியாக 100 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லலாம்.

விற்பனை;

விற்பனை;

டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிள், முதல் கட்டத்தில் பூனே, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளை ஆன்லைனிலும், ஆப்லைனிலும் வாங்க முடியும்.

புரோட்டோடைப்;

புரோட்டோடைப்;

டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், ரேசிங் சர்க்யூட்டில் புரோட்டோடைப் மாடல்களை வடிவமைத்து கொண்டிருந்தனர். இந்த டி6எக்ஸ் மோட்டார்சைக்கிள் அப்போது தான் உருவாக்கம் பெற்றுள்ளது.

சார்ஜிங்;

சார்ஜிங்;

டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிள், 60 நிமிடத்தில் 80% வரை சார்ஜ் ஆகிவிடுகிறது. முழுமையாக 100 வரை சார்ஜிங் ஆக 2 மணி நேரம் ஆகும்.

பிரேக்;

பிரேக்;

டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளுக்கு, முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளின் முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் மோனோ சஸ்பென்ஷன் (spring loaded hydraulic mono suspension) பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி ஆயுட்காலம்;

பேட்டரி ஆயுட்காலம்;

ஆயுட்காலம் பொருத்த வரை, உபயோகத்தை பொருத்து டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளின் பேட்டரி 1,000 சைக்கிள்கள் அல்லது 80,000 கிலோமீட்டர் முதல் 1,00,000 கிலோமீட்டர் வரை நீடிக்கிறது.

அம்சங்கள்;

அம்சங்கள்;

டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிள், முழுமையான டிஜிட்டல் டிஎஃப்டி மானிட்டர், மொபைல் சார்ஜிங் போர்ட், ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷன், ஹெல்மெட் ஸ்டோரேஜ், மொபைல் ஆப் சப்போர்ட், ஆண்டி-தெஃப்ட், ஜியோஃபென்சிங் (geofencing) மற்றும் டிஆர்எல் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

பிரத்யேக தொழில்நுட்பம்;

பிரத்யேக தொழில்நுட்பம்;

டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிள், ட்ரியோஸ் (TRIOS-Tork Intuitive Response Operating System) எனப்படும் பிரத்யேக இண்டெல்லிஜன்ஸ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்த ட்ரியோஸ் தொழில்நுட்பம், ஒவ்வொரு ரைட்-டின் டேட்டாவை ஆராய்தல், பவர் மேனேஜ்மென்ட், ரியல்-டைம் பவர் கன்சம்ப்ஷன், ரேஞ்ச் ஃபோர்கேஸ்ட் ஆகியவற்றை ஆராய்வதோடு மட்டுமல்லாமல் எப்படி வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் கற்று தருகிறது.

மோட்கள்;

மோட்கள்;

டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளில் உள்ள பிரத்யேக ட்ரியோஸ் இண்டெல்லிஜன்ஸ் றைடர்களை ஒரு மோட்டில் இருந்து பிற மோட்டிற்கு மாற உதவி புரிந்து அதற்கு ஏற்றவாறு பவர் டெலிவரியை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறது.ஒரு பட்டன் மூலம், டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளில், ஸ்போர்ட் மற்றும் எகோ மோட்களுக்கு இடைய மாறி கொள்ளலாம். மேலும், இந்த டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளின் சிஸ்டம், கிளவுட் மூலமாக மேம்பாடுகள் பெற்று கொண்டு, அவற்றை இந்த டார்க் டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளில் ஒருங்கிணைத்து கொள்கிறது.

சிறப்பம்சம்;

சிறப்பம்சம்;

டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளை 2015 உருவாக்க துவங்கினர். டி6எக்ஸ் மோட்டார்சைக்கிள் தான் மிக அதிகமான ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் கூறுகிறது.

டெஸ்ட் டிரைவ்;

டெஸ்ட் டிரைவ்;

டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், 500 டி6எக்ஸ் பைலட் மோட்டார்சைக்கிள்களை பிரத்யேகமாக தயாரிக்கிறது. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால், இந்த மோட்டார்சைக்கிள்களை பூனே, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருக்கும் டார்க் எக்ஸ்பீரியன்ஸ் ஸோன்களில் டெஸ்ட் டிரைவ் செய்யலாம்.

விலை;

விலை;

டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்த டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை, 1,24,999 ரூபாய் என்ற கம்பனி அறிமுகம் / விற்பனை விலையில் (company selling price) விற்பனை செய்கின்றனர்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

உலகின் அதிவேக போர் விமானங்கள்... லிஸ்ட்ல நம்ம விமானம் ஒண்ணுகூட இல்லைங்க!

கடலுக்குள் ஒளிந்து கொள்ளும் மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

இந்திய நெடுஞ்சாலைகள் குறித்து இதுவரை கேள்விப்படாத சுவாரஸ்யத் தகவல்கள்!

Most Read Articles

English summary
Tork Motorcycles have launched India's first electric motorcycle T6X in Bangalore. T6X will be introduced in three cities of Pune, Bangalore, and Delhi in first phase. It is available online and offline. Battery life ranges for 1,000 cycles or 80,000 to 1,00,000km depending on usage. Tork's electric motorcycle T6X has its signature TRIOS (Tork Intuitive Response Operating System)...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more