18 வயது இளம் ரேஸ் வீரருக்கு ஸ்பான்சர் தரும் டிவிஎஸ்!

By Meena

நம்ம ஊரு டூவிலர் நிறுவனமான டிவிஎஸ் லிமிடெட், மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு பெற்ற கம்பெனிகளில் ஒன்று. வாடிக்கையாளர்களைத் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களிடமும் டிவிஎஸ் நிறுவனம், ஏதோ ஒரு வகையில் சென்று சேர்ந்திருப்பதுதான் அதற்குக் காரணம்.

வெறுமனே வாகன உற்பத்தி என்று மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், பெருநிறுவன சமூகப் பொறுப்புகளிலும் அதிக பங்களிப்பு அளிக்கிறது டிவிஎஸ். திருப்பதி கோயிலில் அன்னதானத் திட்டத்துக்கு அண்மையில் ரூ.2 கோடி நன்கொடையை அந்நிறுவனம் வழங்கியது அதற்கு ஒரு சான்று.

பைக் பந்தயம்

அதபோல், மோட்டார் ரேஸ்களிலும் டிவிஎஸ் நிறுவனத்தின் பங்கு அளப்பரியதாக உள்ளது. சிறந்த இந்திய ரேஸ் வீரர்களுக்கு ஸ்பான்ஸர் அளிப்பதிலும், அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதிலும் டிவிஸ்-க்கு நிகர் அதேதான்.

அந்த வகையில் 18 வயது நிரம்பிய இந்திய மோட்டார் ரேஸின் எதிர்கால நட்சத்திரம் அர்ஜுன் மைனிக்கு அண்மையில் ஆதரவு அளிப்பதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நீண்ட காலத்துக்கு அவரது அதிகாரப்பூர்வ ஸ்பான்ஸராக டிவிஎஸ் இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

அர்ஜுன் மைனி, கடந்த 2006-ஆம் ஆண்டில், தனது ரேஸ் வாழ்வைத் தொடங்கினார். அதன் பிறகு பல பந்தயங்களில் சிறப்பிடமும், பரிசுகளும் பெற்று நம்பிக்கை நாயகனாக உயரத் தொடங்கினார்.

எம்ஆர்எஃப் எம்ஏஐஐ ரோட்டெக்ஸ் மினி மேக்ஸ் நேஷனல் சாம்பியனாக, கடந்த 2007-ஆம் ஆண்டு முடி சூட்டிக் கொண்டார் அர்ஜுன் மைனி. அதைத் தொடர்ந்து அவருக்கு வெற்றி மேல் வெற்றிதான். 2013-இல் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டிகளிலும், ஜேகே பந்தயப் போட்டிகளிலும் சிறப்பிடம் பெற்றார் அவர்.

இந்த நிலையில் ஹங்கேரியில் நடைபெற்று வரும் ஜிபி 3 ரேஸ் போட்டிகளின் முதல் சுற்றில் கவனிக்கத்தக்க போட்டியாளராக வலம் வந்துள்ளார் அர்ஜுன் மைனி. அடுத்து வரும் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றை அவர் பிடிப்பார் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.

இந்தத் தருணத்தில்தான் டிவிஎஸ் நிறுவனம் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அர்ஜுன் மைனி, டிவிஎஸ் நிறுவனம் அளிக்கும் நேசக்கரம், தனக்கு புதிய உத்வேகத்தையும், ஆற்றலையும் தரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டிவிஎஸ் நிறுவனத்தோடு இணைந்து பல சாதனைகளை அர்ஜுன் மைனி படைத்து, தேசத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதை அனைவரது விருப்பம். குட்லக் அர்ஜுன்.

Most Read Articles

English summary
TVS Motor Company To Support 18 Year Old Arjun Maini.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X