‘இந்தியன்’ மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளது!

‘இந்தியன் மோட்டார்’ சைக்கிள்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய உள்ளது பொலாரிஸ் நிறுவனம். இது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

1901ஆம் துவங்கப்பட்ட அமெரிக்காவின் முதல் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமை பெற்றது 'இந்தியன்'. 1910 ஆண்டு காலகட்டத்தில் உலகின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள் பிராண்டாகவும் இது விளங்கியது. அதனை கடந்த 2011ஆம் பொலாரிஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.

இந்தியாவிலேயே அசெம்பிள் ஆக இருக்கும் ‘இந்தியன்’ பைக்குகள்!

2013ஆம் ஆண்டில் ‘இந்தியன்' பிராண்டு மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் சந்தைப்படுத்தியது பொலாரிஸ் நிறுவனம். இதற்காக சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, மும்பை போன்ற இடங்களில் பிரத்யேக ஷோரூமையும் அமைத்தது பொலாரிஸ்.

இந்தியாவிலேயே அசெம்பிள் ஆக இருக்கும் ‘இந்தியன்’ பைக்குகள்!

‘இந்தியன்' பிராண்டு பைக்குகள் அமெரிக்காவிலிருந்து முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இவை விலை மதிப்புமிக்கவையாக உள்ளன.

இந்தியாவிலேயே அசெம்பிள் ஆக இருக்கும் ‘இந்தியன்’ பைக்குகள்!

தற்போது இந்த பிராண்டு பைக்குகளை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பொலாரிஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனோடு டீலர்ஷிப்களின் எண்ணிக்கையையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் அதனுடைய வணிகத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது பொலாரிஸ்.

இந்தியாவிலேயே அசெம்பிள் ஆக இருக்கும் ‘இந்தியன்’ பைக்குகள்!

பொலாரிஸ் நிறுவனம் அதனுடைய சீஃப் வகை பைக்குகள், ஸ்ப்ரிங் ஃபீல்டு, ரோட்மாஸ்டர் மற்றும் ஸ்கவுட் மாடல் பைக்குகளை இந்தியாவில் அசெம்பிள் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே அசெம்பிள் ஆக இருக்கும் ‘இந்தியன்’ பைக்குகள்!

பொலாரிஸ் நிறுவனம் இந்தியாவில் ஈச்சர் நிறுவனத்துடன் வணிக கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ‘மல்டிக்ஸ்' என்ற பன்முக வாகனத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே அசெம்பிள் ஆக இருக்கும் ‘இந்தியன்’ பைக்குகள்!

ஈச்சர் - பொலாரிஸ் நிறுவனங்களில் கூட்டு வாகன தயாரிப்பு ஆலை ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் அமைந்துள்ளது. இவை 60,000 யூனிட்டுகள் தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.

இந்தியாவிலேயே அசெம்பிள் ஆக இருக்கும் ‘இந்தியன்’ பைக்குகள்!

எனினும், பொலாரிஸ் நிறுவனம் இந்தியன் மோட்டார் சைக்கிள்களை அசெம்பிள் செய்ய இடம் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் போது ‘இந்தியன்' மோட்டார் சைக்கிள்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்பிருக்கிறது.

இந்தியன் செஃப்டெய்ன் டார்க் ஹார்ஸ் பைக்கின் படங்கள்:

Most Read Articles
English summary
Polaris is looking to expand its dealerships footprint and planning to assemble the Indian motorcycles in the country itself.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X